Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐப்பசி மாதம் ராசி பலன்கள் 2019: மிதுனம், கடகம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீசம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி மிதுனம் மற்றும் கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்றும் அதற்கு பரிகாரங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன் புதன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு தனுசு ராசியில் சனி கேது என அமர்ந்துள்ளது. ஐப்பசி ஆறாம் தேதி விருச்சிக ராசிக்கு புதன் நகர்கிறார் 14ஆம் தேதிக்கு மேல் வக்ரகதியில் செல்கிறார். 11ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 18ஆம் தேதி குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 24ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மிதுனம் மற்றும் கடகம் ராசிகாரர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும்.

ஐப்பசி மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமை முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேஷ ராசியில் நீசமடையும் சனிபகவானுக்குத் துலாம் ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர்களுடைய ஆதிக்கம் அதிகரித்தும் காணப்படும். இந்த ஐப்பசி மாதம் குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது, தீபாவளி, கந்த சஷ்டி, முதல் சனி பிரதோஷம் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

புதிய முயற்சிகள் வேண்டாம்

புதிய முயற்சிகள் வேண்டாம்

அரசு உத்யோகத்தை எதிர்பார்க்க வேண்டாம். புதிய முயற்சிகள் பலிக்காது எனவே இருக்கிற வேலையை விட்டுட்டு புதிதாக முயற்சி எதுவும் செய்ய வேண்டாம். ராசிக்கு ஐந்தில் சூரியன் நீசமடைகிறார். சுக்கிரன் ஆட்சிபெற்றிருப்பதால் பத்து நாட்கள் சூரியன் நீசபங்கமடைகிறார். மாணவர்கள் சிறப்பாக படிப்பீர்கள். சூரியன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பிரச்சினையில்லை. மாணவர்கள் உயர்கல்வியில் பிரச்சினை இருக்காது. நன்றாக கவனம் செலுத்தவும். இந்த மாதம் வேலைக்கு முயற்சி எதுவும் செய்ய வேண்டாம்.

அன்பு பாசம் கூடும்

அன்பு பாசம் கூடும்

பிரச்சினைகள் தீரும் காலம் வரப்போகிறது. மாமனார் வகையில் நல்ல உதவி கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை. நவம்பர் மாதத்திற்கு மேல் நல்ல விசயங்கள் நல்லது நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியாகி ஐந்தாம் வீட்டிற்கு வரும் போது நல்லது செய்வார். குரு பெயர்ச்சிக்குப் பின்னர் பாதிப்புகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிணக்குகள் தீரும். கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.

வேலையை விட வேண்டாம்

வேலையை விட வேண்டாம்

திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் இந்த மாதம் முயற்சி செய்யலாம். இந்த மாதம் குழந்தை பாக்கியத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார் நன்மைகள் நடக்கும் சுக்கிரனை வேண்டலாம். எந்த வேலையில் இருக்கிறீர்களோ அந்த வேலையில் அப்படியே தொடருங்கள் நிறைய நல்லது நடக்கும்.

பரிகாரத்தால் பலன்கள்

பரிகாரத்தால் பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டிற்கு குரு செல்வது நன்மை நடக்கப்போகிறது. குருவின் பார்வை நேரடியாக விழுவதால் நிறைய தோஷங்களை நீக்கும். பணவரவும், பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படும். ராகு உங்க ராசியில் இருப்பதால் உடல் நலத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இனி அந்த பிரச்சினை தீரும். அகலக்கால் எதிலும் வைக்க வேண்டாம். அதிகாலையில் எழுந்து ஆதித்ய ஹிருதயம் சொல்லி வழிபடவும். வேலையில் நேரம் தவறாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.

வீடு வாங்கும் யோகம்

வீடு வாங்கும் யோகம்

கடகம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு வியாபாரம் நல்லா நடக்கும். கடன் கிடைப்பதில் தடை தாமதத்தை ஏற்படும். செவ்வாயினால் முயற்சிகள் அமோகமாக இருக்கும். 12ல் ராகு இருப்பதால் பல நன்மைகள் நடக்கிறது. தொழில் வியாபாரத்தில் லாபத்தை தருகிறார். வீடு நிலம் வாங்குவீர்கள். சிலர் வீடு கட்ட வாஸ்து செய்வீர்கள். காரணம் மூன்றாம் வீட்டில் உள்ள செவ்வாயை சனி பார்க்கிறார். கடன் வாங்கியாவது வீடு வாங்குவீர்கள். குரு பெயர்ச்சிக்கு முன்னதாக செய்து விடுங்கள்.

வேலையில் யோகம்

வேலையில் யோகம்

உங்களுக்கு லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். ராசிக்கு 2க்கு உடைய சூரியன் நான்காம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு பத்தாம் வீட்டினை பார்க்கிறார். சூரியன் நீசமாக இருந்தாலும் சில நன்மைகள் நடைபெறும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். காவல்துறை,ராணுவ துறையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

குரு ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார். இந்த மாதம் 15 நாட்கள் குரு பார்வை கிடைக்கிறது. திருமண தடைகள் நீங்கும். திருமணத்திற்கும் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல விசயங்கள் தேடி வரும். இதுநாள் வரை தடைகள் ஏற்பட்டிருந்தாலும் நீங்கும். வெளிநாடு செல்லக்கூடிய யோகம் தேடி வருது.

குல தெய்வ அருள் கிடைக்கும்

குல தெய்வ அருள் கிடைக்கும்

பணவரவு இந்த மாதம் சரளமாக இருக்கும். அதே நேரம் செலவுகளும் கூடுதலாகவே இருக்கும். வீட்டில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். தொழில் நிறுவனத்தில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள். மனதை தளரவிட வேண்டாம். இந்த மாதத்தில் எந்த பயமும் இல்லாமல் கடந்து விடுங்கள். குல தெய்வ அருள் கிடைக்கும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+