அட்சய திருதியை 2021: ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்
அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்குவதை விட தானம் செய்வதால் தலைமுறைக்கும் புண்ணியம் சேரும். இந்த புண்ணியத்தின் பலனால் பல தலைமுறை சந்ததியினரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
மதுரை: பல கோடி சொத்து சேர்த்து வைத்து விட்டு செல்வதை விட நமது சந்ததியினர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ நாம் புண்ணியம் சேர்த்து வைக்க வேண்டும். நாம் செய்யும் தான தர்மங்கள் நம்முடைய வருங்கால தலைமுறையினருக்கு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்கும். அட்சய திருதியை நாளில் நாம் தங்கம், வெள்ளி என்று வாங்கி குவிப்பதை விட நோய் தொற்று பரவும் இந்த காலத்தில் நம்மிடம் உள்ள பணத்தைக் வைத்து பலருக்கும் தானம் செய்யலாம்.
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை நட்சத்திரம் அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் அட்சய திருதியை நாளில் தங்க நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு அட்சய திருதியை மே 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
கொரோனா காலமாக இருப்பதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே தங்கம் வாங்க கடைக்குப் போக முடியாது. எனவே அட்சய திருதியை நன்னாளில், முடிந்தவரை உணவோ உடையோ தானம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் இதுவரை இருக்கின்ற செல்வம் பன்மடங்காகப் பெருகும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

பல மடங்காக பெருகும்
அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும். ஒரு வியாபாரத்தை துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை செய்வது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்வதன் மூலம் அளப்பரிய நன்மைகளை அடைய முடியும். மேலும் இந்த நாளில் தான தர்மங்கள் செய்தால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்.

அன்னதானம்
அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

குடை தானம்
வெயில் காலமாக இருப்பதால் நீர் மோர் தானமாகத் தரலாம். ஏழைகளுக்கு தயிர்சாதப் பொட்டலம் வழங்கலாம். சித்தர்கள் ஜீவசமாதி உள்ள ஆலயங்களுக்குச் சென்று புண்ணியத்தை தரும். அன்னதானம் செய்யலாம். வயதானவர்களுக்கு குடை வாங்கிக் கொடுங்கள். செருப்பு தானம் செய்யுங்கள். நீர்மோர் பானகம் வழங்கலாம்.

மஞ்சள் குங்குமம்
அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில், பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்து கூடவே ஜாக்கெட் பிட் வைத்து கொடுக்கலாம்.

பல தலைமுறையும் வாழும்
அட்சய திருதியை நாளில் புண்ணிய காரியங்கள் செய்து அதன் மூலம் கிடைக்கும் புண்ணியங்கள் உங்கள் சந்ததியினருக்கு சேரும். இந்தப் புண்ணியத்தின் பலன்கள் என்பது நாம் நம் சந்ததிக்கு கோடி கோடியாய் வைத்துச் செல்லும் மிகப்பெரிய பிக்ஸட் டெபாசிட். இதன் மூலம் நம் சந்ததியினர் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு











Click it and Unblock the Notifications