ஆருத்ரா தரிசன நாளில் ஆயிரம் கிலோ பூக்களால் தன்வந்திரி பகவானுக்கு மகா புஷ்ப யாகம்

ஆருத்ரா நாளில் ஆரோக்ய பீடத்தில் ஆரோக்ய கடவுளுக்கு ஆரோக்ய ஹோமத்துடன் 60 வகையான மலர்களுடன் ஆயிரம் கிலோ புஷ்பங்கள் கொண்டு மஹா புஷ்பயாகம் நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நாளை சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் ஆண்கள் திருமணத் தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம் என முப்பெரும் யாகங்கள் நடைபெறுகிறது. ஆருத்ரா தரிசன நாளில் ஆயிரம் கிலோ புஷ்பங்கள் கொண்டு ஆரோக்கிய கடவுளுக்கு மகா புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

"ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வசம் ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ" பராசக்தியான பார்வதி தேவியால் பரமசிவனை மணக்க முதன்முதலில் இம்மந்திரம் பயன்படுத்தப்பட்டது என்பது ஐதீகம்.

சக்தியாவாய்ந்த இந்த ஸ்வயம்வர பார்வதி மந்திரம் காயத்ரி மந்திரத்திற்கு இணையானது. இம்மந்திரத்தை காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் வபார்வதியை மனதில் நினைத்து துதித்து வந்தால் அனைத்து திருமண தடைகள், தாமதங்கள் தகர்த்து, விரைவில் திருமணம் நடக்கச் செய்யும். மேலும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். தம்பதிகளிடையே அந்நியோன்யம் வளர மற்றும் குழந்தைப்பேறில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளவும் செய்யும் மந்திரம் இது.

Aruthra special flowers yagam and Pournami day special three Yagam

ஆணும், பெண்ணும் உடல்ரீதியாக வேறுபடுகின்றனரே தவிர அவர்களின் ஆன்மா ஒன்று தான் என்பது ஆன்மீகத்தின் முடிவு. இல்லற வாழ்வில் ஆண், பெண் உடலால் இருவராக இருந்தாலும் உயிரில் ஒன்று கலந்து வாழ்வார்களேயானால் அவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வர தத்துவம். மனித குலத்தில் பெண்ணாக பார்வதி தேவி சிவபெருமானை கணவனாக அடைய உதவிய இந்த ஸ்வயம்வர பார்வதி மந்திரம் துதிப்பதால் நமக்கு நன்மைகள் ஏற்படும். பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 22.12.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் முப்பெரும் யாகங்கள் நடைபெறுகிறது.

கந்தர்வ ராஜ ஹோமம் பலன்கள் :

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு உள்ள செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம் போன்ற சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ ஹோமமும், கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.

Aruthra special flowers yagam and Pournami day special three Yagam

சுயம்வர கலா பார்வதி ஹோமம் பலன்கள்

இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் மூலம் மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், வசீகர தோஷம், போன்ற எல்லாவிதமான திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் சுயம்வர கலாபார்வதி யாகமும் பெண்களுக்கு கலசாபிஷேகமும், மாங்கல்ய பூஜையும் நடைபெற உள்ளது.

சந்தான கோபால யாகம் பலன்கள்

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருள் பெற ஸ்ரீகிருஷ்ணருக்கு வெண்ணை சார்த்தி வழிபடும் பொழுது பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

பக்தர்கள் பங்கேற்பு

இந்த முப்பெரும் யாகங்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வத்தித்து பிரசாதம் வழங்க உள்ளார். இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் பங்கேற்க ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர்.

Aruthra special flowers yagam and Pournami day special three Yagam

புஷ்ப யாகத்தில் திரை நட்சத்திரங்கள் பங்கேற்பு

23.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஆருத்ரா தினத்தில் 60 வகையான மலர்களுடன் ஆயிரம் கிலோ புஷ்பங்கள் கொண்டு ஆரோக்ய ஹோமத்துடன் மாபெரும் புஷ்பயாகம் நடைபெற உள்ளது. மேற்கண்ட யாகத்தில் பிரபல திரைப்பட நடிகை "கலைமாமணி" தேவயானி ராஜகுமாரன், பிரபல திரைப்பட இயக்குனர் திரு. ராஜகுமாரன், பிரபல சின்னத்திரை இயக்குனர் "கோலங்கள் புகழ்" திருச்செல்வம், திரைப்பட நடிகர் "கலைமாமணி" டாக்டர். பூவிலங்கு மோகன், திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரி அவர்கள், இவர்களுடன் பல்வேறு திரைப்பட, சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பாண்டிச்சேரி திருமதி. சாந்தகுமாரி சுகுமாரன் குடும்பத்தினர்கள் செய்து வருகின்றனர்.

பகைகள் தீரும்

புஷ்ப யாகத்தில் சங்கு புஷ்பம், செந்தாமரை, வெண்தாமரை, அரளி, பூவரசம்பூ, வில்வம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ்த்தாமரை.கொன்றை, மகிழம், மல்லிகை, முல்லை, சம்பங்கி, மருது, மருதாணி, தவனம், ரோஜா, கருந்துளசி, துளசி, மனோரஞ்சிதம், பவழமல்லி, மரிக்கொழுந்து, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்கஅரளி செம்பருத்தி, அடுக்கு அரளி, தாழம்பூ, போன்ற 60 க்கும் மேற்பட்ட மலர்களுடன் ஆயிரம் கிலோ புஷ்பங்கள் கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு மஹா புஷ்பயாகம் நடைபெற உள்ளது.

ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும் வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும். சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும். மனநோய் போக்கும். தீராத குடும்பப் பகை தீர்ந்து விடும். வியாபார போட்டியால் ஏற்படும் பகை உள்பட அனைத்துவிதமான பகைகளும் தீரும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+