பிப்ரவரியில் புதாதித்ய யோகம்.. மகரத்தில் சூரியனுடன் புதன் கூட்டணி.. 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பிப்ரவரி 1 தேதி முதல் சனியின் வீடான மகரம் ராசியில் சூரியன் புதன் கூட்டணி சேரப்போகிறது. புதாதித்ய யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரப்போகிறது. பிப்ரவரி முதல் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

மேஷம்: உங்கள் ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் புதன் சூரியனுடன் இணைந்து சஞ்சரிப்பது நன்மையை தரக்கூடியது. தொழில் ஸ்தானத்தில் புதாதித்ய யோகம் உருவாகும் காரணத்தால் புதிய வேலைக்கான முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். சம்பள உயர்வு அதிகரிக்கும். பண வருமானம் திருப்தி தரும். வீட்டில் ஆடம்பர பொருள் சோ்க்கையிருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவதற்கு ஏற்ற காலம். நிதி நிலைமை உயரும் பொருளாதார வளம் அதிகரிக்கும்.

Budhaditya Rajyogam : Sun Mecury Union Makaram rasi On 1 Feb Brings luck and fortunes To 4 Zodiacs

ரிஷபம்: புதன் உங்களுடைய ராசிக்கு 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 9வது இடத்தில் சஞ்சரிப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் பணியிடங்களில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இன்டர்வியூவில் வெற்றி கிடைத்து வேலை கிடைக்கும். தம்பதியாிடையே உற்சாகம் ஏற்படும். பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் காலமாக இது இருக்கும். படிக்கும் பிள்ளைகளுக்கு படித்தது நன்றாக மனப்பாடம் ஆகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

கடகம்: உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் சூரியன் புதன் கூட்டணி சேர்ந்து புதாதித்ய யோகம் உருவாகிறது. தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். இரண்டாம் வீட்டு அதிபதியும் 12ஆம் வீட்டிற்கு அதிபதியும் கூட்டணி சேர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகின்றனர். சொத்து சேர்க்கை ஏற்படும். பணம் பல வழிகளிலும் வரும் வாய்ப்பு உள்ளது.

மகரம்: உங்கள் ஜென்ம ராசியில் சூரியனுடன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்யப்போகும் புத பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினா்கள் வருகையினால் வீட்டில் உற்சாகம் அதிகரிக்கும். புதாதித்ய யோகத்தால் வெற்றிகளை அனுபவிக்கப்போகிறீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+