கொரோனா : திருவோணம் முதல் திருவாதிரை வரை தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
இராணிப்பேட்டை: கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நீங்கவும் பாதிப்பிலிருந்து விடுபடவும் திருவோண நட்சத்திரம் முதல் திருவாதிரை நட்சத்திரம் வரை தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு யாகமும் அபிஷேகமும் நடைபெற்றது.
வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் நோய்த் தீர்க்கும் மருத்துவமனையாக செயல்பட்டு வரும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள் கொரோனா வைரஸ் நோயின் அச்சத்திலிருந்து மீண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியம் பெற வேண்டியும் சகலவிதமான க்ஷேமங்களை பெற வேண்டியும் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சென்ற 19.03.2020 வெள்ளிக்கிழமை திருவோண நக்ஷத்திரம் முதல் ஸ்ரீ தன்வந்திரி மஹாயாகத்துடன் மஹா ருத்ர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் சிறந்த முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று 31.03.2020 செவ்வாய்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஆரோக்ய பீட அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்க மஹா பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.

இதில் உரிக்கொடி, கருடக்கிழங்கு, ஆடாதோடை, விஷ்ணுகிராந்தி, துளசி, பற்படாகம், கோரைக்கிழங்கு, வெண்கடுகு, நாயுருவி, சீந்தல்கொடி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்கள் யாகத்தில் சேர்க்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு பஞ்ச திரவிய திருமஞ்சனமும், ஸ்ரீ அஷ்ட நாக கருடாருக்கு பால் மற்றும் தேன் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கலந்துகொண்டு உலக மக்கள் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீண்டு, விரைவில் முழு ஆரோக்கியமும் நலமும் பெற பிரார்த்தனை செய்தார்.

இப்பூஜையின் பொழுது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 02.04.2020 முதல் 05.04.2020 வரை நடைபெற உள்ள வருடாந்தர பூஜைகளும், ஹோமங்களும், ஆராதனைகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதாக தெரிவித்தார். இந்த யாக பூஜைகளில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications