தமிழ் புத்தாண்டு தினத்தில் மழை வளம் பெருக மக்களுக்கு நன்மை தரும் யாகங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: நாட்டில் நீர் நிலை ஆதாரங்கள் சிறப்படையவும், இயற்கை வளம் பெறவும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும். மழை வேண்டியும் மத நல்லிணக்கம், மனித நேயம் வளரவும் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நாளை 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மகா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ மகா லஷ்மி யாகமும் ஸ்ரீ விநாயகர் தன்வந்திக்கு சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.

விளம்பி தமிழ் புத்தாண்டில் அனைத்து மக்களும் நோய் நொடிகளின்றி ஆரோக்யமாக வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், உத்தியோகம், சிறக்கவும்.குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படவும் குழந்தைகள் முழு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மேல் கல்வி சேரவும். நீர் நிலை ஆதாரங்கள் சிறப்படையவும், இயற்கை வளம் பெறவும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும்.

Danvantri arokya peedam special homam for Tamil New year

மேலும் மழை வேண்டியும் மதநல்லிணக்கம், மனித நேயம் வளரவும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞப்படி சிறப்பு தன்வந்திரி ஹோமமும் ஸ்ரீ மகாலஷ்மி யாகமும் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகத்திலும் பூஜையிலும் பக்தர்கள் பல்வேறு நன்மைகள் பெற பலவகையான மலர்கள், பட்டு வஸ்திரம், நெய், தேன், வெண்கடுகு, வால்மிளகு, சீந்தல்கொடி போன்ற 108 விதமான மூலிகைகளும் சேர்க்கப்பட உள்ளது.

Danvantri arokya peedam special homam for Tamil New year

மேலும் நல்லெண்ணை,கரும்புசாறு,மூலிகை தீர்த்தம், நெல்லிக்காய் பொடி பால், தயிர் இளநீர், மஞ்சள், சந்தனம், மற்றும் துளசி தீர்த்தம்கொண்டு தன்வந்திரி பீடத்தல் உள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று பலவகை புஷ்பங்களால் சிறப்பு அர்ச்சனை செய்து, பஞ்சதீபம் ஏற்றப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டில் பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பலன்பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர்.

Danvantri arokya peedam special homam for Tamil New year

நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும்,15.04.2018 ஞாயிற்றுக் கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு ஸ்ரீ சரப சூலினி ப்ரித்யங்கிரா யாகம் நடைபெற உள்ளது. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை. செல்போன் 9443330203.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Danvantri arokya peedam special homam for Tamil New year and Amavasai Prathiyangira devi Soolini durga homam.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற