• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்

|

வேலூர்: மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் தேசிய ஆயுர்வேத தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு தன்வந்திரி பூஜை செய்ய நல்ல நேரம் அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை காலை 6.25 மணி முதல் 8.48 மணிவரை. அன்றைய தினம் திரயோதசி திதி இரவு 7.08 மணிக்கு தொடங்கி அக்டோபர் 26 ஆம் தேதி பிற்பகல் 3.46 மணி வரைக்கும் உள்ளது.

தீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல் தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார். எனவே, தீபாவளி மருந்து உட்கொள்ளும்போது ஸ்ரீதன்வந்திரி பகவானை மனபூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டும். எந்த ஒரு தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு, அவரது பிரசாதத்தைப் பெற்று உண்டால், நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. தன்வந்திரியின் மந்திரத்தை ஜபம் செய்வதால் தைரியம் ஏற்பட்டு பாபம், வியாதி, விஷம், கிரஹ தோஷங்கள் இவை அனைத்தும் நீங்குகின்றன.

தன்வந்திரி ஜெயந்தியன்று மாலை தன்வந்திரி பீடத்திற்கு வருகைத்தரும் பக்தர்களின் கைகளினால், நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம், பொருள்கள் சேர்கப்பட்டு, நோய் தீர்க்கும் தன்வந்திரி மஹா மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் இந்த லேகியம் தயாரித்து, ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு நிவேதனம் செய்யப்பட உள்ளது. இந்த லேகியம் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மாமருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த பிரசாதத்தின் மூலம் பல்வேறு வகையான மன நோய்களுக்கும், உடல் நோய்களுக்கும் தீர்வு பெறலாம்.

தன்வந்திரி ஜெயந்தி

தன்வந்திரி ஜெயந்தி

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு வருகிற 25.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நோய் தீர்க்கும் கடவுள் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு, உலக மக்கள் நலனுக்காக மஹா தன்வந்திரி ஹோமத்துடன் 1008 கலசதீர்த்த திருமஞ்சனம் நடைபெற உள்ளது. தீபாவளியை முன்னிட்டு வருகிற 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி லேகியம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

மருத்துவ கடவுள்

மருத்துவ கடவுள்

ஸ்ரீ தன்வந்திரி பெருமாளே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற அரிய தத்துவத்தை இந்த வைத்திய அவதாரம் சுட்டிக்காட்டுகிறது. காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், மஹா விஷ்ணுவின் அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்,முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும், ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார்.

நோய் தீர்க்கும் அட்டைப்பூச்சி

நோய் தீர்க்கும் அட்டைப்பூச்சி

அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது. இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

நோய் தீர்க்கும் லேகியம்

நோய் தீர்க்கும் லேகியம்

தன்வந்திரி ஜெயந்தியன்று மாலை தன்வந்திரி பீடத்திற்கு வருகைத்தரும் பக்தர்களின் கைகளினால், நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம் ஆகிய பொருள்கள் சேர்கப்பட்டு, நோய் தீர்க்கும் தன்வந்திரி மஹா மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் இந்த லேகியம் தயாரிக்கப்பட்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு நிவேதனம் செய்யப்பட உள்ளது. இந்த லேகியம் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மாமருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த பிரசாதத்தின் மூலம் பல்வேறு வகையான மன நோய்களுக்கும், உடல் நோய்களுக்கும் தீர்வு பெறலாம்.

தன்வந்திரி மருத்துவர்

தன்வந்திரி மருத்துவர்

மேலும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் விசேஷமான மருத்துவர் கோலத்தில் ஸ்டெதஸ்கோப், டாக்டர் கோட் போன்ற உபகர்ணங்களுடன் மருத்துவ உடையில் சில மணி நேரங்கள் காட்சி தருவார். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று 78 பரிவார மூர்த்திகளையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் தரிசித்து இறையருளுடன் குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் வாழ தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர்.

விரத பலன்கள்

விரத பலன்கள்

தீபாவளி லேகியத்தை நீர், தேன், பாலில் கலந்து உட்கொண்டால் சரீரம் பலம் பெறும். பித்தம், வாதம், சிலேத்துமம் போன்ற முத்தோஷங்களைப் போக்கும் கண்கண்ட மருந்தாகும். தன்வந்திரி ஜெயந்தி நாளில் அதிகாலையில் எழுந்து மஞ்சள்தூள், துளசி இட்ட நீரில் குளித்துவிட்டு அன்று முழுவதும் விரதம் இருந்து தன்வந்திரி வரலாறு அவரை பற்றிய துதிகளை படிக்க வேண்டும். மாலைப் பொழுது சாயும் முன் நீர்நிலை தீர்த்தக் கட்டங்களுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தன்வந்திரியையும் யம தர்மராஜனையும் வழிபடுவார்கள். இந்த விரத நாளன்று வஸ்திர தானம் செய்தாலும் எமனை குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டக துதி படிப்பதாலும் மரணங்கள் துர்மரணங்களில் இருந்து மீண்டு தீர்க்கமான ஆயுளை பெற முடியும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Dhanvantari Trayodashi is also known as Dhanvantari Jayanti. Dhanvantari is one the Hindu god of medicine, An avatar of Lord Vishnu. Acknowledge in the Puranas as the god of Ayurveda. Dhanvantari Puja on Friday, October 25, 2019Dhanvantari Puja Muhuratam time 06:28 AM to 08:43 AM.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more