பிப்ரவரி மாத ராசி பலன் 2023: இந்த 3 ராசிக்காரர்களின் வீட்டில் மகிழ்ச்சி.. பேசும் வார்த்தைகளில் கவனம்

நவ கிரகங்களின் பார்வை பயணங்களால் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் பிரச்சினைகளை தவிர்க்கவும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி மாதத்தில் சிலர் பேசும் பேச்சுக்கள் வம்பு வழக்குகளை கொண்டு வரப்போகிறது கவனமாக இருப்பது நல்லது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும், சில ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தும். சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கும்ப ராசியிலும் 15ஆம் தேதிக்கு மேல் மீன ராசியில் உச்சம் பெற்றும் பயணம் செய்வார். புதன் மகர ராசியிலும் மாத இறுதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் மாதம் முழுவதும் ரிஷப ராசியில் பயணம் செய்வார். இந்த கிரகங்களின் பயணத்தால் மகரம், கும்பம்,மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களே..பிப்ரவரி மாதத்தில் உங்களில் சிலருக்கு நிதி நெருக்கடிகள் ஏற்படும். நிர்வாக ரீதியாக சில சோதனைகளை எதிர்கொள்வீர்கள். உங்கள் ராசிக்குள் உள்ள சூரியனுடன் புதன் இணைகிறார். புதாதிபத்ய யோகம் தேடி வரும். சனி பகவான் இரண்டாம் வீட்டில் சுக்கிரனுடன் இணைவதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலமான நிலை உண்டாகும். மாத பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு வரப்போவதால் குடும்பத்தில் சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. பண விசயங்களில் கவனம் தேவை. யாரை நம்பியும் முதலீடுகள் செய்ய வேண்டாம். நான்காம் வீட்டில் உள்ள ராகு அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். குரு மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் இளைய சகோதரரின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். பிப்ரவரி மாதம் வெற்றிகள் கிடைக்க சனிக்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வழிபடலாம்.

February month rasi palan 2023 tamil: February matha rasi palan for Makaram,Kumbam and Meenam

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு பிப்ரவரி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசியில் சனி, சுக்கிரன், இரண்டாம் வீட்டில் குரு, மூன்றாம் வீட்டில் ராகு, நான்காம் வீட்டில் செவ்வாய், 12ஆம் வீட்டில் சூரியன், லாப ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். ஆன்மீக பயணம் செல்வீர்கள். சனிபகவான் ஜென்ம சனியாக நீடிப்பதால் பெரிய அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் சில சவால்களை சந்திப்பீர்கள். குரு பகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் நிதி சிக்கல்கள் நீங்கும். திடீர் பண வரவுகள் வரும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் அவர்களுடன் பழகும் போது பேச்சில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். உடல் நிலையில் இருந்த சிறுசிறு பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

February month rasi palan 2023 tamil: February matha rasi palan for Makaram,Kumbam and Meenam

மீனம்

மீன ராசிக்காரர்களே..பிப்ரவரி மாதத்தில் உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் உள்ள சனிபகவான் திடீர் செலவுகளை கொண்டு வருவார். ராசியில் உள்ள ஜென்ம குரு பண வரவை கொடுத்தாலும் சுப விரைய செலவுகளும் ஏற்படும். இரண்டாம் வீட்டில் உள்ள ராகு குடும்பத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்துவார். வருமானத்தில் சில நெருக்கடிகள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் கூடும் நெருக்கடிகள் வந்து நீங்கும். சிலருக்கு வேலையிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குரு பகவான் பார்வை பிள்ளைகள் வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகளை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் நீங்கும். பொருளாதார மேன்மையால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன் மனைவியிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆரோக்கியத்தல் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் மட்டும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. ஏழரை சனியால் சங்கடங்கள் நேர்ந்தாலும் குரு பகவானின் சுப பார்வை சில மகிழ்ச்சியான நிகழ்வுகளை ஏற்படுத்தும்.

February month rasi palan 2023 tamil: February matha rasi palan for Makaram,Kumbam and Meenam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+