குரு பெயர்ச்சி 2019-20: மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு குரு பெயர்ச்சி பலன்கள்
சென்னை: குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்துள்ளார். குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும்.மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசியை நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இன்றைய தினம் மூலம், பூராடம் மற்றும் உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
குருபகவான் இப்போது தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மூலம் நட்சத்திரத்தில் டிசம்பர் 20ம் தேதி வரையில் சஞ்சரிப்பார். அதன் பின்னர் தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 27ஆம் தேதி வரையிலும் சஞ்சரிப்பார்.
அங்கிருந்து அதிசாரமாக குருபகவான் 2020 மார்ச் 27 முதல் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். மீண்டும் குருபகவான்
மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார். மீண்டும் தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் டிசம்பர் 26ஆம் தேதி மகரம் ராசிக்கு நேரடியாக பெயர்ச்சி அடைகிறார். குருபகவானின் இந்த சஞ்சாரங்களினால் நன்மைகளும் சில பாதிப்புகளும் ஏற்படுவது இயல்புதான். இனி இந்த குரு சஞ்சாரத்தினால் மூலம், பூராடம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத்திரகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

காசு பணம் தேடி வரும்
தனுசு ராசியில் இருக்கும் நட்சத்திரம் மூலம். கேதுவின் நட்சத்திரம். நீங்க வீராதி வீரர்கள். எதையும் சவாலாக செய்து முடிப்பீர்கள் ஆவேசமும் முன்கோபமும் இருந்தாலும் ஆன்மீகவாதிகள். இது நாள் வரை உங்களை பந்தாடிய சனியை ஒரு கை பார்க்கப் போகிறார் குரு. சனியின் ருத்ர தாண்டவம் குறையப்போகிறது. குரு கேது சேர்க்கையால் தன யோகம் தேடி வரும். வசதி வாய்ப்புகள் தேடி வரும். இன்னும் ஒரு வருடத்தில் உங்களுக்கு அடை மழை காசு பணம் வந்து சேரும் காரணம் குரு உங்களை தேடி வந்து விட்டார். கெத்தாக வலம் வருவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள்.

தேவைகள் நிறைவேறும்
செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கடன் முடியாமல் தவித்தவர்கள் இனி கடன்களை அடைத்து விட்டு ஹாயாக வலம் வருவீர்கள். இதுநாள்வரை கஷ்ட காலமே என்று கவலைப்பட்டவர்கள் இனி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சந்தோஷமாக வலம் வருவீர்கள்.
மூலம் நட்சத்திரகாரர்களுக்கு குரு மூலம் நன்மைகள் நாடி வரும். எதிர்கால தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட வேண்டாம். காலம் கணியும் வரை காத்திருங்கள். பண்டிகை காலத்தில் கூட பற்றாக்குறையாக போச்சே என்று பதறவேண்டாம். இனி பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சொத்துக்கள் சேர்க்கை ஏற்படும். நல்ல செய்திகள் தேடி வரும். திறமைசாலியாக வலம் வருவீர்கள்.

திருமண யோகம்
சுக்கிரன் நட்சத்திரம் பூராடம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொன் பொருள் சேர்க்க ஆசைப்படுபவர்கள். குருவின் ராசியான தனுசு ராசியில் அமர்ந்த அசுர குரு சுக்கிரன் நட்சத்திரம் பூராடம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைதியாகவும் தனிமை விரும்பிகளாகவும் இருப்பீர்கள்,
இந்த குரு பெயர்ச்சி உங்களின் ராசியில் ஜென்ம சனியால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். இனி உங்களுக்கு சாதகமான சூழல்கள் வந்து விட்டது. நல்ல காலம் பிறக்கப் போகிறது. உங்களின் தகுதி உயரும். திருமணம் கை கூடி வரும். திருமணம் நடந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

சொத்துக்கள் சேரும்
இதுநாள் வரை உங்களை குறை சொல்லி திட்டி வந்தவர்கள் இனி பாராட்டுவார்கள். கால நேரம் கை கூடி வருகிறது. மாணவர்களுக்கு ரொம்ப நல்ல நேரம், அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். சனி இருந்தாலும் அதிகார குருவினால் சனி கேதுவின் தொல்லைகளை நீங்கும். நெருக்கடிகளை தீர்த்து வைப்பார் குரு பகவான். சுப காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். சொத்துக்கள் வாங்குவீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும் விரைய செலவுகளை சுப விரைய செலவாக மாற்றுங்கள். புதிய முயற்சிகள் கை கூடி வரும். சம்பள உயர்வு அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பெண்களுக்கு தாலி பாக்கியம், தன பாக்கியம், வேலை பாக்கியம் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு யோகமான காலகட்டம்.

உத்திராடம்
உத்திராடம் நட்சத்திரம் தனுசு ராசியில் ஒரு பாதமும் மகரம் ராசியில் மற்ற மூன்று பாதங்களும் உள்ளன. இந்த நட்சத்திர காரர்கள் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். வேகம், விவேகம் கொண்டவர்கள். சகலகலா வல்லவர்கள். இந்த குரு பெயர்ச்சி உங்க மனக்கவலைகளுக்கு மருந்தாக அமையும். விரும்பியது திரும்பி வரும். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருந்த உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மன மகிழ்ச்சியை தரப்போகிறது. மிகப்பெரிய மாற்றங்களையும் திருப்பங்களையும் தரப்போகிறது. கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். சரிவுகளை மட்டுமே சந்தித்து வந்த உங்களுக்கு இனி ஏற்றங்களும் மாற்றங்களும் வரப்போகிறது. வருமானம் கூடும் அதன் மூலம் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். சொந்த வீடு வாகன யோகம் அமையும், பணம் சரளமாக புரளும் லட்சக்கணக்கில் வரும் யோகம் வரும். உங்கள் திறமைக்கு நிலையான அங்கீகாரம் கிடைக்கும். உங்களுக்கு வரும் வருமானத்தில் அறப்பணிகள் அதிகம் செய்வீர்கள். உடன் பிறந்தவர்களினால் நன்மைகள் நடக்கும். மாணவர்களுக்கு வெற்றி தேடி வரும். திருமண யோகம் கை கூடி வரும், திருமணம் முடிந்த தம்பதியினருக்கு புத்திர பிராப்தி தேடி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications