குரு பெயர்ச்சி 2019 - 20: மகர லக்னத்திற்கு மன மகிழ்ச்சி தரும் குருபகவான்
குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொன்னாலும்
சென்னை: நவகிரகங்களில் குருபகவான் சுப கிரகம். குரு பெயர்ச்சியை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வாக்கியப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது. விருச்சிகத்தில் இருந்து தனசு லக்னத்தில் அமரப்போகிறார் குரு பகவான். மகர லக்னத்திற்கு விரையஸ்தானம் மற்றும் மூன்றாம் வீட்டு அதிபதி குரு பகவான். மகரத்தில் அமரும் குருவின் பார்வை லக்னத்திற்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. இந்த சஞ்சாரம் பார்வையால் மகரம் லக்னத்திற்கு பலன்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.
குரு அமரும் இடத்தைப் போல குரு பார்க்கும் இடமும் அற்புதமாக அமைந்துள்ளது. குரு பார்வை தனுசு ராசியில் இருந்து மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய லக்னங்களின் மீது விழுகிறது. குருவின் பார்வை உங்க லக்னத்திற்கு நான்கு, ஆறு, எட்டு ஆகிய இடங்களான சுக ஸ்தானம், கடன் ருண ரோக சத்ரு ஸ்தானம், ஆயுள் ஸ்தானங்களின் மீது விழுகிறது. இந்த கால கட்டங்களில் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலனை தரப்போகிறது.
12ஆம் வீட்டு அதிபதியே 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் அமர்வது விபரீத ராஜயோகம். இந்த கால கட்டத்தில் உங்க கடன்கள் தீரும். நிறைய சோதனைகளை கொடுத்து அதை சாதனைகளாக மாற்றுவார் குரு. 12ஆம் வீட்டில் சனி கேது சஞ்சரிக்கின்றனர். விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றால் சுப விரைய செலவுகள் ஏற்படும். லக்னாதிபதியும், தனாதிபதியுமான சனிபகவானுடன் சேரப்போகிறார் குரு.

வீடு நிலம் வாங்கலாம்.
12ஆம் இடம் மோட்ச ஸ்தானம். இந்த வீட்டில் அமர்ந்து சனியும் கேதுவும் கொடுத்து வந்த எதிர்மறை செயல்களை நிறுத்துவார் குருபகவான். தொழில், கல்விக்காக சுப பயணங்களை செல்வீர்கள். வீடு வாங்க வேண்டும், வீடு மாற நினைப்பவர்களுக்கு நடக்கும். கடன், எதிர்ப்பு, நோய்கள் சங்கடங்கள் தீரும். பிரச்சினைகளை தீர்ப்பதுதான் இந்த விபரீத ராஜயோகம்.

சங்கடங்கள் தீரும்
அஸ்டம ஸ்தானத்தில் குருவின் பார்வை விழும் காலத்தில் சங்கடங்கள் குறையும், பிரச்சினைகள் தீரும், ஏழரை சனி காலமாகையால் பாதிப்புகளை குறைப்பார் குருபகவான். உங்களின் செலவுகளை நேர்மறை செலவுகளாக சுப விரைய செலவுகளாக மாற்றுவார். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

சாப்பாட்டில் கவனம்
மகர லக்னத்தில் உத்திராடம், திருவோணம் அவிட்டம் இரண்டு பாதங்கள் உள்ளன. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். சூரியன் அஷ்டமாதிபதி அவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் மன ரீதியான உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு அஜீரணக்கோளாறுகள் ஏற்படும்.
கண்ட நேரங்களில் கண்ட பொருட்களை சாப்பிட வேண்டாம். சாப்பாடு விசயத்தில் கவனமாக இருங்கள். விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்கவும்.

எச்சரிக்கை கவனம் தேவை
திருவோண நட்சத்திரத்தில் பிறந்த மகர லக்னகாரர்கள் விரைய செலவுகளை தவிர்த்து விடுங்கள். நண்பர்கள் மூலம் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த மகர லக்னகாரர்கள் கவனமாக இருக்கவும். எதையும் யோசித்து செய்யவும். குரு பகவான் சுப விரையத்தை தான் செய்வார்.

குருவிற்கு பரிகாரம்
குருபகவானுக்கு பரிகாரம் செய்யவும். குரு பெயர்ச்சிக்கு யாகம் செய்ய பாதிப்புகள் குறையும். சுக ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் கடன் நோய்களை கொடுப்பது போல கொடுத்து தீர்ப்பார். ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை நீட்டிப்பார். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சியால் பாதிப்பில்லை பயப்பட வேண்டாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications