Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2021: இந்த ராசிக்காரர்கள் கஷ்டப்படாம இருக்க தவறாமல் பரிகாரம் பண்ணுங்க

குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளைப் பார்வையிடுகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்னான கிரகம் குரு பகவான். சுப கிரகமான குருவின் பார்வை பட்டால் யோகங்கள் கை கூடி வரும் எனவேதான் குரு பார்வை கோடி நன்மை என்று சொல்கின்றனர். குரு பகவான் சஞ்சாரம், பார்வை சில ராசிக்காரர்களுக்கு நன்மை அளித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களைத் தரும். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

புராண காலத்தில் குருவால் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைக்கும் பாடல் இது. 1, 3, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும் போது என்ன நடந்தது என்று இந்த பாடல் மூலம் சொல்லப்பட்டுள்ளது. 'ஜென்ம ராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்ததும்,தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்,
இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம் படியானதும், ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்
தருமபுத்திரர் நாலிலே வனவாசம் அப்படிப் போனதும்,சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தளை பூண்டதும்,
வன்மை யற்றிட ராவணம் முடி பனிரெண்டினில் வீழ்ந்ததும்.மன்னு மா குரு சாரி மாமனை வாழ்விலா துறமென்பவே!'

குருபகவான் கோச்சார ரீதியாக 2,5,7,9,10,11 ஆகிய இடங்களில் பயணம் செய்யும் நன்மையே செய்வார். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். தனுசு மீனம் ராசிகள் குருவிற்கு ஆட்சி வீடு. கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல. 5மாதங்கள் குரு பகவான் கும்ப ராசியிலும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு செல்கிறார் குருபகவான். இந்த குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்களைப் பற்றி பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே குருபகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும் என்பது பாடல். பத்தில் குரு பதவியை பறிப்பார் என்று சொல்வார்கள். உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போகிறார். நிதானமும் பொறுமையும் தேவைப்படும் காலம். அவசர முடிவு எடுக்க வேண்டாம். குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. போராட்டங்கள் முடிவுக்கு வரும் பண வரவு அதிகரிக்கும். நிரந்தரமான தீர்வு கிடைக்கும். அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். வேலையில் புரமோசன், இடமாற்றம் கிடைக்கும். வேலையில் சிலருக்கு மாற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் விழிப்புணர்வு அவசியம். வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும். சிவ ஆலயம் சென்று வணங்க பாதிப்புகள் நீங்கும். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெற உள்ள குரு பெயர்ச்சியாகத்தில் பங்கேற்க பாதிப்புகள் நீங்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாவது வீட்டிற்கு செல்கிறார். சகடை குரு காலம். குரு பகவான் இடப்பெயர்ச்சியாவதால் உங்களுக்கு சில மாற்றங்களை ஏற்படுத்துவார். இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம் படியானதும் என்று சொல்வார்கள். அவச்சொல் நேரலாம் எனவே செயல்களிலும் பேச்சிலும் கவனம் தேவை. குருவின் பார்வையால் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். வீடு, சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வீட்டில் இருந்த பிரச்சினை நீங்கி மன அமைதி ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்ய வேண்டாம். வண்டி வாகனம் வாங்க நினைப்பவர்கள் இந்த கால கட்டத்தில் வாங்கலாம். புத்திர தோஷம் நீங்கி குழந்தை செல்வம் கிடைக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். இந்த குரு பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மேதா தட்சிணமூர்த்தியை தரிசனம் செய்யலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ஆறாவது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இன்மை எட்டினில் வாலி பட்டமிழந்து போம் படியானதும் என்று சொல்வார்கள். ஆறில் குரு வந்தால் கடன், நோய், எதிரி விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் இருந்த குழப்பங்கள் நீங்கும் காரணம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிம்மதியும் வரப்போகிறது. வீடு தொழில் மாறலாம் என்ற எண்ணம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். நல்லவர்கள் உதவி வீடு தேடி வரும். பதற்றம் பயம் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை நீங்கும். செல்வமும் செல்வாக்கு அதிகரித்தாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனம் புதிததாக வாங்கலாம். திருமணம் நடைபெற்றவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விசயத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மூன்றாவது நபர்களிடம் கவனமாகப் பேசலாம். மன உளைச்சல் நீங்கி நிம்மதி அதிகரிக்கு நவகிரக குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

குருபகவான் நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். தருமபுத்திரர் நாலிலே வனவாசம் அப்படிப் போனதும்
என்று சொல்வார்கள். இதுநாள்வரை இருந்த சிக்கல்கள் நீங்கும். உறவினர்களிடையே பாசமும் நேசமும் அதிகரிக்கும். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் நெருங்கி வருவார்கள். மனதிற்கு நெருக்கமானவர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். வீடு கட்ட முயற்சி செய்யலாம். வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் வரப்போகிறது. தொழில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல கால கட்டம். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் ஏற்படும். சுப காரிய தடைகள் நீங்கி கனஜோராக நடைபெறும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் பெற்றோர்களுக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வையால் உடல் நலத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். ஆயுள் கண்டம் நீங்கும். மன உளைச்சல்கள் முடிவுக்கு வரும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும் போது விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தென்திட்டை குரு பகவானை தரிசனம் செய்து வணங்கலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்யலாம். குரு பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று பரிகாரம் செய்யலாம்.

தனுசு

தனுசு

குரு பகவான் மூன்றாம் வீட்டில் பயணிக்கப் போகிறார். தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும் என்று சொல்வார்கள். உங்கள் சொந்த விசயங்களை மூன்றாவது நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது உங்களுக்கே சிக்கலை ஏற்படுத்தி விடும். பழகும் நபர்களிடம் கவனம் தேவை. பயணற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் ஏமாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களின் தன்னம்பிக்கை தைரியம் கூடும். வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நனவாகும். மன அமைதி அதிகரிக்கும் சுப காரியத்தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் ராசிநாதன் குருவினால் நன்மைகள் ஏற்பட வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

குருபகவான் ஜென்ம ராசிக்கு வருகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் அதிபதி, லாப ஸ்தான அதிபதி. உங்கள் ராசிக்கு வருவது சிறப்பானதுதான். குருவின் பார்வையும் சிறப்பான இடங்களின் மீது விழுகிறது. சொந்த ஊரில் இருந்து இடமாற்றம், வேலை தொழிலில் மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசிக்கு ஐந்து, ஏழு, ஒன்பதாம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவதால் தடைகள் நீங்கி வெற்றி அதிகரிக்கும். அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். வேலையில் இருந்தாலும் சில நேரங்களில் மன உளைச்சல் ஏற்படும். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். குடும்ப விசயங்களில் மூன்றாவது நபரை தலையிட விட வேண்டாம். வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை. கண்களிலும் வயிற்றிலும் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. நகை, பணத்தை பத்திரப்படுத்தவும். சுப செலவாக மாற்றிக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

மீனம்

மீனம்

பன்னிரண்டில் மறைந்தாலும் இடம் கொடுத்த சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெறுவது சிறப்பாகும், குரு தங்கள் ராசிக்கு தனம் மற்றும் பாக்கிய அதிபதியாக விளங்கும் செவ்வாய் சாரத்தில் கும்பத்தில் நுழைவது உடன் குருவின் பார்வை செவ்வாய்க்கு கிடைப்பது நன்மையைத் தருகிறது. வெற்றியைத் தரக்கூடிய 11ம் இடத்தில் அமர்ந்திருந்த குரு தற்போது அங்கிருந்து விரைய ஸ்தானத்திற்கு வந்து அமர்வது சற்று சிரமத்தினைத் தரக் கூடும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. ஓய்வற்ற நிலையின் காரணமாக உடலில் சுகவீனம் தோன்றும். வாந்தி, தலைசுற்றல், பித்த மயக்கம், ஏற்படும்.. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின்குருவின் விரய ஸ்தான சஞ்சாரத்தினால் ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். ஆன்மிக ரீதியாக தொலைதுாரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். தத்துவ சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். ஆலோசனை கேட்காமல் எடுக்கும் எந்த ஒரு முடிவும் தோல்வியையே தரும், வீணான கற்பனைகளால் தேவையற்ற பயமும் இருந்து வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+