Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2022: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஜாக்பாட் நிச்சயம்..என்ஜாய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் சில மாதங்கள் அதிசாரமாகவும் சில மாதங்கள் வக்ரகதியிலும் செல்வார் குருபகவான். குரு பகவான் கடந்த 7 மாதங்களாகவே மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த 4 மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்த குரு பகவான் நவம்பர் 24ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து விட்டார். 2023ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதி வரை மீன ராசியில்தான் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் இந்த பயணத்தாலும் குரு பகவான் பார்வையாலும் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான் மனிதர்களின் கல்வி, வேலை, திருமணம், புத்திரபாக்கியம் போன்றவை நல்ல முறையில் கிடைக்க குருபகவானின் அருள் அவசியம். எனவேதான் நவகிரகங்களில் குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

குரு பகவான் கோச்சாரப்படி 2,5,7,9,11ல் சஞ்சரித்தால் நன்மையை செய்யும் என்று சொல்வார்கள். வக்ர நிலை முடிந்து நேர் கதியில் பயணம் செய்யும் குரு பகவான் இன்னும் 6 மாதங்களில் யாருடைய தலைவிதியை மாற்றப்போகிறார் யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

 சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்களுடைய ராசிக்கு 8ஆம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்கிறார். அஷ்டம குரு கஷ்டங்களைப் போக்கப்போகிறார். ஆட்சி பெற்ற குருவின் பயணம் விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறார். தொழில் வேலை விசயங்களில். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவதால் சுப விரையங்கள் ஏற்படும். நல்ல தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். வேலையில் இருந்த பிச்சினைகள் நீங்கும் மன உளைச்சல் நீங்கி மன அமைதி அதிகரிக்கும். வியாழக்கிழமை குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மை நடைபெறும்.

கன்னி

கன்னி

குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். குருபகவானின் நேரடிப் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும், வேலையில் புரமோசனும் கிடைக்கும். லாப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரப்போகிறது. குருவின் பயணத்தாலும் பார்வையாலும் திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.

துலாம்

துலாம்

குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இது ருண ரோக சத்ரு ஸ்தானமாகும். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். சிகிச்சை மூலம் எளிதில் குணமடையும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பண விசயத்தில் கவனமாக இருக்கவும். யாருக்கும் கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். எனவே யாருக்கும் இந்த கால கட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வியாழக்கிழமை குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டில் குரு பயணம் செய்யப்போவதால் புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். சில பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குருவின் பார்வை லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீது விழுவதால் இந்த கால கட்டத்தில் ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. இதுவரை இருந்த அழுத்தங்கள் நீங்கும். பதவியில் மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கப்போகிறது. 6 மாதங்களுக்குள் திடீர் ஜாக்பாட் வந்து திக்கு முக்காட வைக்கப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+