குரு பெயர்ச்சி பலன் 2022: குரு பகவானின் பார்வையால் யாரெல்லாம் புது வீடு வாங்கலாம் தெரியுமா

குரு பெயர்ச்சி இந்த மாதம் 30ஆம் தேதி ஏப்ரல் 13 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த குரு பெயர்ச்சியால்எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் இப்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். சனிபகவானின் வீட்டில் இருந்து தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் குரு பகவான். ஏப்ரல் 13ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த குரு பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அளவிட முடியாத அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. சிலருக்கு சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். குருவின் சஞ்சாரம் சரியில்லாமல் இருந்தாலும் குருவின் பார்வையால் பல நன்மைகள் கிடைக்கும். எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இந்த ராசிபலனில் பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் சில மாதங்கள் அதிசாரமாகவும் சில மாதங்கள் வக்ரகதியிலும் செல்வார் குருபகவான். குரு பகவான் மனிதர்களின் கல்வி, வேலை, திருமணம், புத்திரபாக்கியம் போன்றவை நல்ல முறையில் கிடைக்க குருபகவானின் அருள் அவசியம். எனவேதான் நவகிரகங்களில் குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

குரு பகவான் கோச்சாரப்படி 2,5,7,9,11ல் சஞ்சரித்தால் நன்மையை செய்யும் என்று சொல்வார்கள். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த இடத்தில் குரு அமர்கிறார் எந்தெந்த இடங்களில் பார்வையிடப்போகிறார் அதன் மூலம் என்னமாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம் - விரைய குரு

மேஷம் - விரைய குரு

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளின் மீது விழுகிறது. வீடு சொத்து சேர்க்கை ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் நலமடையும், நோய்கள் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷங்கள் நீங்கும்.

ரிஷபம் - லாப குரு

ரிஷபம் - லாப குரு

குருபகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். தொழில் ரீதியான லாபம் பெருகும். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும். வெளிநாட்டு வேலை முயற்சிகள் கைகூடும். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. திருமணம் சுபகாரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தை பாக்கியம் கைகூடும் பிள்ளைகளுக்கு திருமண சுபகாரியங்கள் நடைபெறும்.

மிதுனம் - தொழில் குரு

மிதுனம் - தொழில் குரு

குருபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். வேலையில் கவனமும் நிதானமும் அவசியம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். வீடு நிலம் வாங்கும் யோகம் தேடி வரும். நோய்கள் நீங்கும், கடன் பிரச்சினையும் முடிவுக்கு வரும்.

கடகம் - பாக்ய குரு

கடகம் - பாக்ய குரு

கடக ராசிக்கு குரு பகவான் 8ஆம் இடத்திருந்து 9ஆம் இடத்திற்கு செல்லப் போகிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. அச்சமும் மனக்குழப்பமும் நீங்கி ஆனந்தம் அதிகரிக்கப்போகிறது. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும்.

சிம்மம் - அஷ்டம குரு

சிம்மம் - அஷ்டம குரு

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்களுடைய ராசிக்கு 8ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். அஷ்டம குரு கஷ்டங்களைப் பார்க்கப்போகிறார். தொழில் வேலை விசயங்களில். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவதால் சுப விரையங்கள் ஏற்படும். நல்ல தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். வேலையில் இருந்த பிச்சினைகள் நீங்கும் மன உளைச்சல் நீங்கி மன அமைதி அதிகரிக்கும்.

கன்னி - களத்திர குரு

கன்னி - களத்திர குரு

குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். குருபகவானின் நேரடிப் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும், வேலையில் புரமோசனும் கிடைக்கும். லாப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+