குரு பெயர்ச்சி பலன் 2023: இனி நீங்கதான் ராஜா..இந்த 6 ராசிக்காரர்களுக்கு அடி தூள்..என்ஜாய்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: குருபகவான் மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். அக்டோபர் வரை ராகு உடன் பயணம் செய்யும் குரு அவ்வப்போது நட்சத்திரங்களில் மாறி பயணம் செய்வார். இந்த மாதம் முதல் மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார் குரு பகவான். 2024ஆம் ஆண்டு மே மாதம் வரைக்குமே குரு பகவான் மேஷ ராசியில்தான் பயணம் செய்வார். மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவானால் ஆறு ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. ராஜயோக பலனை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

பொன்னான யோகம்: குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. குரு இருக்கும் இடத்தை இட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். இந்த குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள்தான் நடைபெறும்.

Guru peyarchi palan 2023: Rajathi Raja yogam Perum Rasikarargal 6 zodiac signs get porkalam

நல்ல காலம் எப்போது?: பிறந்த ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்.

மேஷம்: ஜென்ம குரு ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். மன கலக்கம் வேண்டாம். குரு பகவானின் பொன்னான பார்வை உங்கள் ராசிக்கு சாதகமான இடங்களான பூர்வ புண்ணிய ஸ்தானம்,களத்திர ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீது விழுகிறது. குரு பகவானின் அருள் உங்களுக்கு ஓராண்டு காலம் பரிபூரணமாக கிடைக்கிறது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த குழப்பங்கள் சிக்கல்கள் நீங்கும். நீங்கள் எதையும் நிதானமாக யோசிப்பீர்கள்.

Guru peyarchi palan 2023: Rajathi Raja yogam Perum Rasikarargal 6 zodiac signs get porkalam

மிதுனம்: லாப ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்வதால் உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டத்தினால் பணம் பல வழிகளில் இருந்தும் வரும். தன யோகம் அமையும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது திருமண யோகமும் குழந்தை பாக்கிய யோகமும் கைகூடி வரப்போகிறது. அஷ்டமத்து சனியால் தடைபட்டு வந்த காரியக் தடைகள் நீங்கி மளமளவென நடைபெறும்.

சிம்மம்: குருபகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இழந்த பாக்கியங்கள் கிடைக்கும். மேஷம் ராசிக்காரர்களுக்கு இது வரப்பிரசாதம். யோகம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு சேரும். உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்ப்பதால் இது ராஜயோக காலமாக அமையப்போகிறது. பிள்ளைகளால் செல்வாக்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களுடைய எதிரிகள் எல்லாம் இருந்த தடம் தெரியாமல் இடம் மாறிப்போவார்கள்.

துலாம்: பொன்னவன் குரு பகவான் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கடன் நோய்களால் அல்லப்பட்டவர்கள் நன்மை நடைபெறும். கேந்திரத்தில் ராகு உடன் இணைந்து பயணம் செய்யும் குருவிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து சனிபகவானின் பார்வையும் கிடைக்கிறது. பூர்வீக சொத்து விசயங்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் ராசியை பார்க்கும் குரு ராசிக்கு மூன்று மற்றும் லாப ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பு. புதிய முயற்சிகள் கை கொடுக்கும். சொந்த பந்தங்களிடம் இருந்த பிணக்குகள் நீங்கும். இளைய சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

Guru peyarchi palan 2023: Rajathi Raja yogam Perum Rasikarargal 6 zodiac signs get porkalam

தனுசு: குரு பகவான் உங்கள் ராசி அதிபதி. ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு உடன் குரு பகவான் பயணம் செய்கிறார். அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. வாழ்க்கையில் வசந்தம் வீசப்போகிறது. சனியால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விட்டது. குரு பகவானால் திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குரு உங்கள் ராசியை பார்க்கிறார். ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானத்தினை பார்வையிடுவது மிக சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும், வேலையை இழந்து தவித்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். ஆன்மீக பயணம் சென்று பிரபல ஆலயங்களை தரிசனம் செய்வீர்கள்.

மீனம்: உங்கள் ராசிநாதன் குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். நீங்கள் சொன்ன பேச்சிற்கு மறு பேச்சு கிடையாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். அதிக யோகமான பலன்கள் நடைபெறும். கடன் பட்டு தவித்தவர்கள் இனி அதிக பண வரவினால் கடன்களை படிப்படியாக அடைப்பீர்கள். ஏழரை சனி தொடக்க காலம் என்றாலும் குருவின் பார்வையால் உங்களுக்கு இனி வரும் நாட்கள் சுகமான நாட்களாக அமையப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆயுளுக்கு வந்த கண்டங்கள் நீங்கும்.

Guru peyarchi palan 2023: Rajathi Raja yogam Perum Rasikarargal 6 zodiac signs get porkalam

ராஜாதி ராஜயோகம்: இந்த 6 ராசிக்காரர்களுக்கு குரு பகவான் பயணத்தாலும் பார்வையாலும் நல்ல மாற்றங்கள் நடைபெற போகிறது. வாழ்க்கையில் ஏற்றமான மாதம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். வீடு வாகனம் வாங்குவீர்கள். பெண்கள் நகைகள் வாங்குவீர்கள். சொத்துப்பிரச்சினை தீரும் உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மதிப்பு மரியாதைகள் கூடும். உறவினர்களிடம் இருந்த பகைகள் தீரும். வேலை கிடைக்கும். இந்த ஆறு ராசிக்காரர்களும் அற்புதமான யோகங்களை தரக்கூடியதாக உள்ளது. குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது போல இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும்.

குரு பரிகார ஸ்தலங்கள்: இதை படித்து விட்டு மீதமுள்ள ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய 6 ராசிக்காரர்களும் பயப்பட வேண்டாம். குருவின் பார்வையால் உங்களுக்கு நல்ல பலன்களே கிடைக்கும். திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும். தொழில் உத்தியோக விருத்திக்கு செங்கோட்டை அருகில் புளியரை என்ற ஸ்தலத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியிருக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+