குரு பெயர்ச்சி பலன் 2023 : குபேர யோகம் தரும் குரு பகவான்.. வக்ர குரு யாருக்கு வளம் தரும்?
சென்னை: குருபகவான் இப்போது மேஷம் ராசியில் பயணம் செய்கிறார். இந்த குருவின் பார்வை தற்போது சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. செப்டம்பர் மாதம் வக்ரமடையும் குரு பகவான் டிசம்பர் வரை மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்வார். குரு வக்ர பெயர்ச்சியால் குபேர யோகமும் கோடீஸ்வர யோகமும் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கடகம்: குருவின் சஞ்சாரம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருகிறது. பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும். பிசினஸ், தொழில், வியாபாரத்தில் மாற்றம் வரும். பதவியில் புரமோசன் கிடைக்கும். சொத்து, வண்டி வாகனம் வாங்கலாம். உத்யோக உயர்வை தரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. உங்க குடும்பம் குதூகலமாகும். பிரச்சினைகள் நிவர்த்தியாகும். பணப்பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். நான்காம் வீட்டில் குரு பார்வை விழுவதால் நிச்சயம் இடம் மாற்றம் ஏற்படும், சுகமும் சந்தோஷமும் ஏற்படும், வேலையில் இடமாற்றம், சிலருக்கு வீடு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. ஆறாம் வீட்டில் குருவின் பார்வை விழுகிறது. கடன் பிரச்சினை நீங்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். இது சுகமான குரு பெயர்ச்சி.

சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருவின் பார்வை சிம்மம் ராசிக்கு விழுகிறது. ஒன்பதாம் வீட்டில் குரு ராகு இணைவு. நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கையில் வசந்தம் வீசும். கவலை கஷ்டங்கள் நீங்கும். சொந்த வீடு வாசல் வாங்கலாம். தடைபட்ட காரியம் தடையின்றி நிறைவேறும். குருவின் பார்வையால் மனஅழுத்தங்கள் நீங்கும் உங்க எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர சகோதரிகளுக்கு நல்லது நடக்கும். திருமணம் சுப காரியம் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி நிறைய பாக்கியங்களை கொடுக்கும். அவப்பெயர்கள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்களை நீக்கும். ஐந்தில் குரு பார்வை விழுவதால் திருமணம் நடைபெறும். இடமாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும் ஏற்படும். சுபமான பலனை கொடுக்கும்.
துலாம்: குரு பகவான் பார்வை மற்றும் சஞ்சாரத்தினால் நிறைய நன்மைகள் நடைபெறும். பண மழை பொழியப்போகிறது. இழந்த விசயங்களை நீங்கள் பெறும் காலம் வந்து விட்டது. நல்ல செய்திகள் தேடி வரும். குருவின் பார்வை நேராக உங்க ராசிக்கு விழுகிறது. ராகுவும் குருவும் இணைந்து உங்கள் ராசியை பார்க்கின்றனர். வருமானம் அதிகரிக்கும். குருவின் பார்வை மூன்றாம் வீட்டில் விழுவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குரு உங்க ராசிக்கு ஆறு ஒன்பதுக்கு அதிபதி என்பதால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணயோகம் கைகூடி வரும். உயர்கல்வி யோகத்தை குரு பகவான் கொடுப்பார். குரு பார்வையால் நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தனுசு: குரு பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு திருமண யோகம் கை கூடி வரும் நீண்ட நாட்களாக திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உற்சாகம் அதிகரிக்கும். உடலில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அதிகரிக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைகள் நீங்கி கை கூடி வரும். பொருளாதார தடைகள் நீங்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடு, பத்னொன்றாம் வீடான லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. புதிய வேலை கிடைக்கும் செய்யும் தொழிலில் லாபம் வரும், புதிய வருமானம் வரும். வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வரும். தோஷங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.
மீனம்: குரு பகவான் இரண்டாம் வீட்டிற்கு போவது மகிழ்ச்சியான விசயம். உங்களின் சொல்லுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கஷ்டங்கள் தீரும் கடன்கள் நீங்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுகிறது. கடன் பிரச்சினைகள் தீரும் பண வரவு அதிகரிக்கும். நோய்கள் குணமடையும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள குருவினால் நீங்கள் சொல்லும் சொல்லிற்கு மதிப்பு மரியாதை கூடும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். இனி நல்ல காரியங்கள் படிப்படியாக நடைபெறும். குருவின் பார்வையால் சந்தோஷமும் பணவரவும் அதிகரிக்கும்.
நன்மைகள் அதிகம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications