Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2024.. கடக ராசிக்கு அடுத்த 1 வருஷம் என்ன நடக்கும்? முழு பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று 2024 மே 1ம் தேதி நடக்க போகும் குரு பெயர்ச்சி மூலம் கடக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்க போகிறது என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிக்காரர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி. மேஷ ராசியில் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கை அப்படியே மாற போகிறது.

Guru peyarchi Rasipalan 2024 Kadaga Rasi Horoscope from today

இந்த குரு பெயர்ச்சி மூலம் கடக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்க போகிறது என்று பார்க்கலாம்

வாழ்க்கை மாறும்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்டவர் கடக ராசிக்காரர்கள். அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல விதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும்.

இத்தனை காலம் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கிற வேலையில் போதிய வருமானம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இனி அப்படி புலம்ப வேண்டாம். உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் வாழ்க்கை மாற போகிறது.

சிம்மாசனத்தில் அமரும் காலம் : முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல வேலைகள் உங்கள் வீட்டை தேடி வரும்.

அரசு வேலை கூட தேடி வரும். வேலை ரீதியாக உங்களுக்கு வெற்றி மீது வெற்றி குவிந்து கொண்டே இருக்கும். நீங்கள் ஏற்கனவே பார்க்கும் வேலையில் மே மாதத்திற்கு பின் திடீர் ப்ரோமோஷன் கிடைக்கும். அதாங்க திடீர் என்று டிஎல் ஆவது, மேனேஜர் ஆவது என்று உங்கள் வேலையில் நீங்கள் சிம்மாசனத்தில் அமர போகும் காலம் வந்துவிட்டது.

ஆரோக்கியம் நன்றாக இருக்கும்: அதேபோல் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும்.

லாபமாக கொட்டும்: உங்களுக்கு கஷ்டமாக இருந்த பொருளாதாரம் இனி சரியாகும். பணம் உங்களை தேடி வரும். பிஸினஸில் செய்யும் முதலீடுகள் லாபமாக மாறும் காலம் வந்துவிட்டது.

மன நலனில் பிரச்சனை ஏற்படலாம்: உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம்.

கடன் வேண்டாம் - கெட்ட எண்ணம் வேண்டாம்: அதீத பணம் வருகிறது என்று நம்பி கடன் வாங்க வேண்டாம். கடன் பிரச்சனைகளில் மாட்டி சிக்க வேண்டாம். மற்றவர்களை காலி செய்யும் கெட்ட எண்ணம் வேண்டாம். யாரையும் பற்றி தவறாக யாரிடமும் பேச வேண்டும். கொஞ்சம் வாயை குறைத்துக்கொள்ளுங்கள் கடக ராசிக்காரர்களே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+