இந்த குரு பெயர்ச்சி யாருக்கு டும் டும் டும்... வியாழ நோக்கம் வந்து விட்டதா? ... #Astrology
ஒருவருக்கு வியாழ நோக்கம் அமைந்தால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை அத்தனை மகிமை வாய்ந்தது.
சென்னை: பெண்ணுக்கோ, ஆணுக்கோ திருமணம் முடிக்க ஜாதகத்தை பார்க்கப் போனால் இன்னும் வியாழ நோக்கம் வரலையே என்று ஜோதிடர் கூறுவார். இந்த குரு பெயர்ச்சியால் யார் யாருக்கு வியாழ நோக்கம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். அதனால்தான் ' குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்கிறார்கள். சக்தியும் பலமும் வாய்ந்தது குருவின் பார்வை.
தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் தங்குதடையின்றி அமையும்.

தோஷம் போக்கும் குரு பார்வை
குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். நல்ல இடத்தில் திருமணம் முடியவேண்டுமெனில் இவருடைய ஆசி தேவை. குரு பார்க்க கோடி நன்மை என்பது மகா வாக்கியம். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் நிச்சயமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி, குரு பார்த்து விட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும்.

வியாழ நோக்கம்
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ,திசா புத்திகளின் அமைப்பை கொண்டு திருமண காலம் அமைகிறது. திருமணகாலத்திற்கு அவருக்கு நடக்கும் தசாபுத்தி சரியாக அமையாத பொழுது, அவரின் ராசியிலிருந்து குரு பகவான் 2,5,7,9,11 -ம் இடத்தில் நிற்கும்பொழுது திருமணத்தடை நீங்கிறது. இதுவே வியாழ நோக்கமாகும்.

கோச்சார குரு
இன்னும் தெளிவாக சொல்வதன்றால்,ஆண்களுக்குகோச்சாரப்படி வியாழன் உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது. பெண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தயோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது.

குரு பெயர்ச்சி
இந்த குருபெயர்ச்சியில் வியாழநோக்கம் யார் யாருக்கு வருகிறது? யாருக்கு திருமணம் கைகூடி வரும், யாருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

எந்த ராசிகாரர்களுக்கு யோகம்
குரு பகவான் கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி, 9 மணி 31 நிமிடத்திற்கு இடம் பெயர்கிறார். இந்த குரு பெயர்ச்சி கும்பம், மேஷம், மிதுனத்திற்கு அதிக யோகம். காரணம் துலாம் ராசியில் அமர்ந்து தனது 5ஆம் பார்வையாக கும்பத்தையும், 7ஆம் பார்வையாக மேஷத்தையும், 9ஆம் பார்வையாக மிதுனம் ராசியையும் பார்க்கிறார்.

திருமணம், குழந்தை பாக்கியம்
இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை அடுத்து துலாம் ராசிக்காரர்களுக்கு 7வது இடத்தை குரு பார்க்கிறார். இதனால் திருமணம் கைகூடும். இதே போல 5வது இடத்தை பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்கள்
5வது இடம், 7வது இடம் பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். 7வது இடமான களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு அதிகரிக்கும். திருமணம் நடைபெறாமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். வியாழ நோக்கம் வந்து விட்டது.

குவா குவா சப்தம் கேட்கும்
கும்ப ராசிக்காரர்களே 5வது இடமான மிதுனத்தை 9வது பார்வையாக குரு பார்க்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குரு அருளால் முருகப்பெருமானே வந்து பிறக்கப் போகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications