தீபாவளி நாட்களில் மட்டுமே தரிசனம் தரும் ஹாசனம்பா - அப்படி என்ன சிறப்பு
ஹாசன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா என்னும் அம்மன் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
ஹாசன் : கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா என்னும் அம்மன் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நாட்களில் இந்த கோவிலின் நடை மூடப்பட்டிருக்கும். தற்போது கோவில் திறக்கப்பட்டாலும் கொரோனா நோய் தொற்று பீதி இருப்பதால், பத்து நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பிரசித்தி பெற்ற கோவில்கள் எல்லாம் பெரும்பாலும் நாள்தோறும் திறக்கப்பட்டு வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆகம விதிமுறைகளின் படி பூஜை, அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவது நடைமுறை. அதிலும் மிகவும் பழமையான கோவில்களில் எல்லாம் தினந்தோறும் ஐந்து அல்லது ஆறு வேளைகளில் ஆகம விதிமுறைகளை சிறிதும் மீறாமல் பூஜைகள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

இதில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் மட்டும் நாள் தோறும் கோவில் நடை திறக்கப்பட்டாலும் கூட என்றைக்காவது விசேஷ நாட்களில் மட்டுமே சிறப்பு பூஜைகள் நடைபெறும். மற்ற நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே பூஜைகள் நடைபெறுவது வழக்கம். சில கோவில்கள் மட்டும் விதிவிலக்காக வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா என்னும் அம்மன் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மற்ற நாட்களில் இந்த கோவிலின் நடை மூடப்பட்டிருக்கும்.
தீபாவளி பண்டிகை நேரத்தில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் முடிந்த பிறகு கோவில் நடை சாத்தப்படும்போது ஏற்றப்படும் தீபம், ஓராண்டு கழித்து மறு தீபாவளிக்கு நடை திறக்கப்படும் வரையிலும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்பதும், அம்மனுக்கு அணிவிக்கும் பூவும் வாடாமல் அப்படியே இருக்கும் என்பதும் ஆச்சரிய அதிசயமாகும்.
இத்தகைய சிறப்பு பெற்ற ஹாசனாம்பா கோவில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்போது நடை திறக்கப்பட்டுள்ளது. மன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ் வாழை மரத்தை வெட்டி, பாரம்பரிய முறைப்படி கோவில் நடையை திறப்பது வழக்கம். பின்னர் மன்னர் குடும்பத்தினர் சார்பில், ஹாசனாம்பா கோவிலுக்கு முதலில் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்பின்னர், அரசு கருவூலத்தில் உள்ள நகைகள் பாதுகாப்பாக எடுத்து வந்து, ஹாசனாம்பா சிலைக்கு அணிவிக்கப்படும்.
இந்த ஆண்டு கோவில் நடை நவம்பர் 16ஆம் தேதி வரையிலும் திறந்திருக்கும். வழக்கமாக நடை திறக்கப்படும் நாளிலும் நடை மூடப்படும் நாளிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. தற்போது கொரோனா நோய் தொற்று பீதி இருப்பதால், பத்து நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் ஏமாற்றமடைவதை தடுக்க ஹாசனாம்பா தேவி கோவில் விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆன்-லைன் வழியாகவும் டி.வி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹாசன் நகரில் ஆங்காங்கே அகன்ற திரைகள் மூலமும் கோவில் நிகழ்ச்சிகளை திரையிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications