For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக் தீவிரவாதிகள் மீது விமானப்படை நடத்திய தாக்குதல் - நவ கிரக கூட்டணி சொல்லும் ரகசியம்

பகை கிரகங்களான சனி செவ்வாய் இணையும் போதும் சனியோடு குரு கூட்டணி சேரும் போதும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் மேகங்கள் சூழ்கின்றன. இந்திய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வாலாட்டுவது நடக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் தாக்குதலை விட பெரிய அடி கொடுத்த இந்தியா- வீடியோ

    சென்னை: இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக இன்று இந்திய ராணுவ விமானங்கள் துல்லிய தாக்குதலை நடத்தி 300 பேரை சாம்பலாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நவகிரகங்களின் இடப்பெயர்ச்சி, கூட்டணியே போர் மேகங்கள் சூழ காரணமாக அமைகின்றன. 2016ல் நடந்த துல்லிய தாக்குதல் சம்பவத்திற்கும் இப்போது நடந்துள்ள சம்பவத்திற்கும் சனி, செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் காரணகர்த்தாக்களாக அமைந்துள்ளன.

    ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகமானது சனியை பகை கிரகமாக நினைக்கவில்லை. ஆனால் சனி கிரகம் செவ்வாயை பகை கிரகமாக நினைக்கிறது. இதனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாயும் சனியும் ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்திருக்கும் போது மோதிக் கொள்கிறார்கள். 2015ஆம் ஆண்டு விருச்சிகத்தில் இருந்த சனியோடு செவ்வாய் இணைந்த போது சென்னையை பெருவெள்ளம் தாக்கியது. 2016ல்

    குருபகவான் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குரு. ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. வேதம், உபநிடங்கள் இதற்கெல்லாம் உரிய கிரகம் குரு. அதேபோல் சனி சத்ரிய கிரகம் என்று கூறுவர். குரு சனி சேர்க்கை நிகழும் போதெல்லாம் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். தனுசு ராசியில் உள்ள சனியோடு அதிசாரமாக இணைகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சனியோடு கேது இணைந்திருக்க மிதுனத்திற்கு நகர்ந்துள்ள ராகுயும் சனியும் சம சப்தம பார்வை பார்க்கின்றனர். இந்த கிரகங்களின் கூட்டணி, பார்வையினால் அரசியல் ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

    கிரகங்களின் சஞ்சார பலன்கள்

    கிரகங்களின் சஞ்சார பலன்கள்

    கும்ப ராசியில் சனியில் வீட்டில் சூரியன் அமர்ந்திருக்க நெருப்பு ராசியான தனுசு வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் புதன், நெருப்பு ராசியான மேஷத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். விருச்சிகத்தில் குரு அமர்ந்திருக்க சந்திரன் நீசமடைந்துள்ளார். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு மிதுனத்திலும், கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கின்றனர். மகரத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம், பார்வை, சேர்க்கை நெருப்பினால் பாதிப்புகளையும் போர் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    செவ்வாய் பகவான்

    செவ்வாய் பகவான்

    செவ்வாய் வீரத்தின் நாயகன். தைரியமாக ஒருவர் எந்த செயலையும் செய்கிறார் என்றால் அதற்கு காரணமானவர் செவ்வாய். ஒருவருக்கு அதிகமாக கோபம் வருகிறது என்றால் அதற்கும் காரணம் செவ்வாய் கிரகம்தான். போலீஸ் - ராணுவம் மற்றும் பெரும் இயந்திரங்கள் கொண்ட தொழிற்சாலைகளுக்கு அதிபதியாக இருக்க, செவ்வாய் கிரகத்தின் தயவு தேவை. எண்ணற்ற சொத்துக்களுக்கு உரிமையாளராக இருப்பவர்களுக்கு செவ்வாய் அதிக பலத்துடன் இருப்பார். பூமிக்கு அதிபதியான செவ்வாய், நிலஅதிர்வு-பூகம்பம் போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக மிகமிக முக்கியமான கிரகம் சனி.

    செவ்வாய் சனி கூட்டணி

    செவ்வாய் சனி கூட்டணி

    சனி செவ்வாய் ஒரு ராசியில் இணைந்து இருப்பது, இயற்கை பேரழிவுகளை கொண்டுவரும். பூகம்பம், நில நடுக்கம், விமான விபத்துகள், நாடுகளுக்கு இடையேயான போர்கள், தீவிரவாத தாக்குதல்கள், பெரும் தீ விபத்துகள் போன்றவவை ஏற்படும். கடல் உயிரினங்கள், வன உயிரினங்கள் போன்றவை பெரும் உயிரிழப்புகளை சந்திக்கும். செவ்வாய் சனி சேர்க்கை கடந்த 27.02.2016ல் தொடங்கி 09.09.2016வரை , விருச்சிக ராசியில் இருந்தன.. இந்த காலகட்டத்தில் உலகத்தின் பல இடங்களில் பெருத்த மழை, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் வாகன விபத்துகள் தீ விபத்துகள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன.

    சர்ஜிகல் ஸ்டிரைக்

    சர்ஜிகல் ஸ்டிரைக்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ தலைமைய கத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியதில், 19 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 7 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

    குரு சனி கேது கூட்டணி

    குரு சனி கேது கூட்டணி

    ஒரு ராசியில் குரு சனி இருவரின் சேர்க்கை ஜீவ கர்ம யோகம் என்ற நிலையை வழங்குகிறது. ஜாதகத்தில் ஒரு ராசியில் குருவும் சனியும் இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். இப்போது தனுசு ராசியில் சனி பகவான் அமர்ந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு வரை தனுசுவில் சஞ்சாரம் செய்வார். இப்போது விருச்சிக ராசியில் உள்ள குருபகவான் இன்னும் சில மாதங்களில் தனுசு ராசியில் அதிசாரமாக சென்று அமர்கிறார். ஏற்கனவே தனுசு ராசியில் உள்ள சனியோடு கேது இணைகிறார். கூடவே குருவும் இணைந்து கூட்டணி அமைக்கின்றனர் சில மாதங்கள் மட்டுமே இணையும் இந்த கூட்டணி பிரிகிறது. குரு மீண்டும் வக்ரமடைந்து விருச்சிகம் செல்கிறார். அக்டோபர் மாதத்தில் மீண்டும் தனுசு ராசியில் இணைகிறது.

    மகரத்தில் சனி குரு கூட்டணி

    மகரத்தில் சனி குரு கூட்டணி

    2020ஆம் ஆண்டு சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மகரத்தில் உள்ள சனியுடன் தனுசு ராசியில் உள்ள குரு இணைந்து கூட்டணி அமைகிறது. குருவும் சனியும் ஒன்று சேர்ந்தாலே வழக்கறிஞராகத் திகழ்வார்கள். எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்வார்கள். மடங்கள், கோயில்களில் தர்மகர்த்தா, பொக்கிஷத்தை பாதுகாக்கும் அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி போன்ற பதவிகளில் அமர்வார்கள்.

    புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி

    புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி

    இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இப்போது போர்மேகம் சூழ்ந்துள்ளது. புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்திற்கு 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்த கொலைவெறி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் தீவிரவாதிகள் 300 பேர் சாம்பலாகியுள்ளனர். மேஷத்தில் சூரியன் ஏற்கனவே பல இடங்களில் நெருப்பை பற்றவைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடங்கி துல்லிய தாக்குதல் வரை தொடர்ந்து வருகிறது. 2020 வரை இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்த போர் பதற்றம் நீடிக்கும் என்றும் இரு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் போர் நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.


    English summary
    The conjunction of Saturn-Mars in Scorpio in 2016 and the Saturn-Jupiter conjunction in Capricorn in 2020 are two dangerous astrological combinations which can bring wars in south-east Asia and around the world. The effects of these two planetary phenomena’s are going to remain for a long duration and it will have a significant impact on the international affairs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X