உலக மகிழ்ச்சி தினம் 2020 - கொரொனா வைரஸ்க்கு மத்தியில் மகிழ்ச்சியோடு இருப்போம்
கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை மார்ச் 20 ஆம் தேதி உலகத்தில் கொண்டாடியுள்ளனர்.
சென்னை: தனித்திரு.... உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். அனைவருக்கும் மகிழ்ச்சியை தரவேண்டும் என்பதுதான் இந்த ஆண்டு சர்வதேச மகிழ்ச்சி தினத்தின் கருப்பொருள். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பீதியை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் இறப்பதால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால், இந்த கொடிய வைரஸ் பற்றி அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இப்போது, இது போன்ற மன அழுத்த காலங்களில் வரும் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை கண்டிப்பாக கொண்டாடியே ஆக வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20 அன்று உலகம் முழுவதும் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் கருப்பொருள்களுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதே . உலகமே இப்போது தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். சுய தனிமைப்படுத்தல் மூலம் உங்களுக்கு அபாயகரமான வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல், வைரஸின் பரவலைத் தடுக்கவும் உதவுகிறது, இது மற்றவர்களுக்கு உதவுகிறது, மேலும் பரவுவதை நிறுத்துகிறது. இப்போது இதுவே அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது.
மகிழ்ச்சியாக இருப்பது என்பது என்ன? என்று சிலர் யோசிக்கலாம். கோடி கோடியாக கிடைக்கும் பணமா? சுவையான உணவா? விலை உயர்ந்த ஆடை அணிகலன்களா? சொந்த பந்தங்களோடு கூடி நிம்மதியும் சந்தோஷமுமாக இருத்தலே மகிழ்ச்சி என்பது என் அபிப்பிராயம். மகிழ்ச்சியாகவும் நிம்மதியாவும் இருக்க ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களும் துணைபுரிய வேண்டும்.

சுகமும் மகிழ்ச்சியும்
ஜாதகத்தில் நான்காம் வீடு தாய் ஸ்தானம். அம்மாவை நான் சுகமான வைத்திருந்தால் நாம் சுகமாக இருப்போம் என்பதை உணர்த்தும் வகையிலேயே சுக ஸ்தானத்தை நான்காம் வீடான தாய் ஸ்தானத்துடன் தொடர்பு படுத்தியுள்ளனர். அந்த இடத்தில் வலிமையான கிரகம் அமர்ந்தாலோ, வலிமையான கிரகங்களின் பார்வை பட்டாலோ வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும். நான்காம் வீட்டில் நுரையீரல், இதயத்தை குறிக்கும் வீடு. அங்கே அன்பும் கருணையும் நிறைந்திருக்க வேண்டும்.

குருவின் ஆசி
நான்காம் வீடு, நான்காம் வீட்டு அதிபதி, நான்காம் இடத்திற்கு காரகர்கள் சந்திரன், சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அவரைப்போல மகிழ்ச்சியானவர் யாரும் இருக்க முடியாது. இதே போல குருவும் புதனும் வலிமையாக இருக்க வேண்டும். ஜாதகத்தின் நான்காம் வீட்டில் குரு பகவான் இருந்தால் அவர்களைப் போல மகிழ்ச்சி நிரம்பியவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆன்மீக பற்றும் ஆழ்ந்த சிந்தனையும் அறிவாற்றலும் கொண்டவர்கள். எதிரிகள் தொல்லை இருக்காது இருந்தாலும் இவர்களை வெல்ல முடியாது. இவர்களைப் போல அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வீட்டில் தாயின் காரகமான சந்திரன் இருந்தால் உறவினர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். புதன் இருந்தால் அறிவாளியாகவும், சுக்கிரன் இருந்தால் சுகவாசியாகவும் இருப்பார்கள்.

சந்திரன் சுக்கிரன் பார்வை
சந்திரனுடன் சனி ராகு கேது தவிர எந்த கிரகங்கள் கூட்டணி வைத்திருந்தாலும் அதன் தசாபுத்தி காலங்களில் மகிழ்ச்சி அதிகம் கிடைக்கும். மிதுனம் ராசியில் சந்திரன் அமர்ந்து செவ்வாயின் பார்வை பெற்று சந்திர மங்கல யோகம் பெற்றால் அவர் மகிழ்ச்சியானவர். ரிஷபம் அல்லது துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்க அந்த இடத்திற்கு சந்திரன் பார்வை கிடைத்தால் அந்த ஜாதகருக்கு செல்வம் செல்வாக்கு, மதிப்பு மரியாதையுடன் மகிழ்ச்சியும் தேடி வரும். இரண்டாம் வீட்டில் சந்திரன் இருந்தால் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் அதிக பணமும் கிடைக்கும் நல்ல நண்பர்களும் கிடைப்பார்கள்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி
மிதுனம் அல்லது கன்னியில் புதன் ஆட்சி பெற்றிருப்பது அது ஜாதகனின் லக்கினமாகவும் இருப்பது குறைவில்லாத மகிழ்ச்சியை தரும். சுக்கிரன் நான்காம் வீட்டில் இருப்பது. குருவின் பார்வையில் சந்திரன் இருந்தால் அவர் மகிழ்ச்சிக்கு குறைவில்லாதவர். கடக ராசியில் சந்திரன் ஆட்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியை தரும். நான்காம் வீட்டு அதிபதி லக்னத்தில் இருந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையால் மகிழ்ச்சி கிடைக்க நான்காம் அதிபதி இரண்டாம் வீட்டில் அமர்ந்து இரண்டாம் வீட்டு அதிபதி சொந்த வீட்டில் ஆட்சி அல்லது உச்சம் அடைய வேண்டும். கொரோனா வைரஸ் பீதிகளை மறந்து வதந்திகளை கண்டு கொள்ளாமல் விடுமுறை நாளில் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்போம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications