ஜூன் மாத ராசிபலன்கள் 2019: கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கும்
ஜூன் மாதத்தில் நவகிரகங்களின் கூட்டணி, கிரகங்களின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதால் கவலைகள் நீங்கும் காலம் வந்து விட்டது.
மதுரை: கன்னி ராசிக்காரர்களே இந்த மாதம் உங்க ராசி நாதன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடந்த சில மாதங்களாக இருந்த சோகங்கள் நீங்கும், கவலைகள் பறந்தோடும் என்பதால் ஜூன் மாதம் உங்களுக்கு சந்தோசமான மாதமாக அமைந்துள்ளது.
கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்கள் ராசிக்கு குருபகவான் மூன்றாவது வீட்டில் இருக்கிறார். நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியோடு கேது சஞ்சரிக்கிறார். எட்டில் சுக்கிரன் ஒன்பதில் சூரியன் புதன் பத்தில் செவ்வாய் ராகு என சஞ்சரிக்கின்றனர். 2ஆம் தேதி முதல் உங்கள் ராசி நாதன் புதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று செவ்வாய், ராகு உடன் இணைகிறார். 4ஆம் தேதி முதல் எட்டில் உள்ள சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் சூரியனுடன் இணைகிறார்.
16ஆம் தேதி முதல் சூரியன் பத்தாம் வீட்டில் உள்ள செவ்வாய், ராகு, புதனுடன் இணைந்து 4 கிரகங்கள் மிதுனம் ராசியில் கூட்டணி சேருகின்றனர். இதனால் பல நல்ல பலன்கள் நடைபெற உள்ளன. கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள், மாணவர்களுக்கு என்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

வேலையில் கவனம்
கன்னி ராசிக்காரர்கள் அறிவின் அதிபதியான புதனை ஆட்சி உச்சநாதனாகப் பெற்றவர்கள். இந்த மாதம் சமூகத்திலும் பணி செய்யும் இடத்திலும் செல்வாக்கு உயரும். முன்னேற்றம் இருந்தாலும் நிதானம் தேவை. செவ்வாய் பத்தில் இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். நல்லதையே பேசுங்கள் ஏனெனில் ஒருசொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் தேவை.

வெளிநாடு யோகம்
எட்டாம் வீட்டில் உள்ள சுக்கிரன் 4ஆம் தேதி முதல் 9ஆம் வீட்டிற்கு வருவதால் பலம் அதிகரிக்கும். நன்மையை ஏற்படுத்துவார். திருமணம் நிச்சயமாகும். தோஷங்கள் விடுபடப் போகிறது. சுக்கிரன் 29ஆம் தேதி பத்தாம் வீட்டிற்கு வரும் போது வெளிநாடு செல்லும் யோகம் வரும். படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளிநாடு செல்வீர்கள். மனைவி உடனான பிரச்சினைகள் தீரும்.

மாணவர்களுக்கு உயர்கல்வி
கன்னி அர்த்தாஷ்டம சனி கேது உடன் சேர்ந்து இருப்பதால் மன உளைச்சலை தருவார். சனி கேது இணைந்து உயர்படிப்பு ஸ்தானமான நான்கில் இருப்பதால் மாணவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் படிக்க வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதால் இறைவனை சரணடையுங்கள். குரு சுக்கிரன் பார்வை பெறுவதால் தானாக முடிவு செய்யாமல் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆலோசனை அவசியம்.

மாத இறுதியில் மாற்றம்
குரு பலம் இழந்த நிலையில் இருக்கிறார். செவ்வாய் பத்தாம் வீட்டில் ராகு உடன் இருக்கும் காலகட்டத்தில் திடீர் இழப்பு ஏற்படும் கவனம் தேவை.
புதன் செவ்வாய் பத்தாம் வீட்டை விட்டு நகரும் காலமான மாத பிற்பகுதியில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் முயற்சிகளை குரு வரனை தடுப்பார். இழுபறி ஏற்படும். குரு பார்வை இருந்தாலும் தடைகள் ஏற்படும்.

நோய்கள் ஜாக்கிரதை
ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நோய்களை சுட்டிக்காட்டும் இடம் 4ஆம் வீட்டில் சனி நோயை வெளியே கொண்டு வருவார். ஆரோக்கியத்தை நல்லமுறையில் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பெண்களுக்கு நிம்மதியில்லாத நிலை இருக்கிறது. இதற்குக் காரணம் அர்த்தாஷ்டம சனிதான். கவலை வேண்டாம். காலங்கள் மாறும் கவலைகளும் மாறும். சூரியனும் சனியும் பார்த்துக்கொள்வதால் செவ்வாய் சனி பார்வை இருப்பதால் சில உடல்நல தொந்தரவுகள் ஏற்படும். புதனால் தோல் நோய்கள் ஏற்படும். குழந்தை பிறப்பிலும் தடைகள் தாமதங்கள் ஏற்படும்.

அவசரம் வேண்டாம்
அவசரப்பட வேண்டாம் கவனமாக காலடியை எடுத்து வையுங்கள். வயதானவர்கள் எச்சரிக்கை தேவை. ரிஸ்க் எடுக்காதீங்க ரஸ்க் ஆயிடுவீங்க. கடன் முயற்சிகளை ஒத்திப்போடுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் வில்லங்கள் எச்சரிக்கை தேவை. சுக்கிரன் மட்டுமே நல்ல பலன்களை தருவார். வேகத்தோடு எழுந்தாலும் அயற்சியோடு அமரவேண்டியிருக்கும்.

சிவன் தரிசனம் நன்மை தரும்
பிள்ளைகள் உடன் கருத்து வேறுபாடு ஏற்படும் அன்பாக நடந்து கொள்ளுங்கள் மூத்த குடிமக்களுக்கு நன்மைகள் நடைபெறும். குரு மூன்றில் இருப்பதால் எச்சரிக்கை தேவை. சிவன் கோவிலுக்கு போய் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள் மாணவர்களே உயர்கல்வி பயிலுவதில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications