கார்த்திகை மாத ராசி பலன் 2023: சூரியன் +புதன் + செவ்வாய் கூட்டணி.. 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: கார்த்திகை மாதம் ஆன்மீக அலைகள் நிறைந்த மாதம். கார்த்திகையில் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயருகிறார். விருச்சிக ராசியில் புதன், செவ்வாய் சூரியன் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் யோகங்கள் கிடைக்கப்போகிறது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
விரத மாதம் கார்த்திகை: கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் விரதம் இருந்து மாலை போட்டு பக்தர்கள் பக்திமயமாக காட்சியளிப்பார்கள். கார்த்திகை மாதத்தில்தான் நம் உடம்பில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது அனுபவித்தவர்கள் கண்ட உண்மை. கார்த்திகை மாதம் முழுவதும் பெரிய ஆலயங்கள் மட்டுமல்லாது, சிறு கோயில்களும் விளக்கொளியில் மின்னும். கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உகந்தது. இந்த விரதம் இருந்தால் தம்பதியர் ஒற்றுமை நீடிக்கும்.

மேஷம்: சூரியன், புதன், செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்கின்றனர். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், அப்பாவின் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். விபரீத ராஜயோகத்தால் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். பெண்களால் யோகம் உண்டாகும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் எல்லாம் சிறப்படையும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.
ரிஷபம்: சூரியன், புதன், செவ்வாய் கூட்டணி உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும், தொழில் நிலை சிறப்படையும். ராசிநாதன் சுக்கிரன் ஆறாம் வீட்டிற்கு வரப்போவதால் பெண்களால் தொல்லை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும்.
மிதுனம்: சூரியன்,புதன், செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. கடன்வாங்கும் நிலை ஏற்படும், பிள்ளைகளிடத்தில் எச்சரிக்கை தேவை. சிறு பயணங்கள் செல்வீர்கள். வியாபாரம் விருத்தியாகும். விபரீத ராஜயோகத்தால் பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.

கடகம்: சூரியன்,புதன், செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும், அரசு ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சனி அஷ்டமத்தில் இருப்பதால் கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனமாக இருக்கவும். சுக்கிரன் நான்காம் வீட்டிற்கு வருவதால் வீட்டை அழகுபடுத்துவீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரக் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும்.
சிம்மம்: உங்கள் ராசிநாதன் சூரியனுடன் செவ்வாய், புதன் உடன் உங்கள் ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வாகன யோகம் உண்டாகும், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கல்வியில் மேன்மை உண்டாகும். அம்மாவின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். விருந்தினர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி: சூரியன், செவ்வாய், புதன் உடன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் கூட்டணி அமைத்திருப்பதால் உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதரர்களுடன் சின்னச் சின்ன வாக்குவாதம் உண்டாகும். சுக்கிரன் ராசியில் இருந்து தன ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்று அமரப்போவதால், பெண்களின் பேச்சில் இனிமை அதிகரிக்கும். பொன்னகைகள் சேரும்.












Click it and Unblock the Notifications