ஆவணி பொன்னாளில் அஷ்டமி நன்னாளில் பிறந்த கண்ணன்.. ஒன் இந்தியா வாசகர்களின் ராதா கிருஷ்ணன்கள்
சென்னை: ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர் பகவான் கிருஷ்ணர். நள்ளிரவு நேரத்தில் சிறையில் அவதரித்த கண்ணனின் பிறந்த நாளை நாடு முழுவதும் ஜென்மாஷ்டமியாக கொண்டாடுகின்றோம். நாளைய தினம் செப்டம்பர் 6ஆம் தேதியன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்த அவதாரம் கிருஷ்ணா அவதாரம். கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்தவர் கண்ணன். ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ராதா கிருஷ்ணர் வேடம் போட்டு கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகின்றனர். வெண்ணெய் திருடும் கண்ணன்.. புல்லாங்குழல் ஊதும் கண்ணன், மயிலிறகை சூடிய குட்டி கிருஷ்ணன், ராதா கிருஷ்ணன் என அசத்தலாக குட்டீஸ்கள் வேடம் போட்டு அவர்களின் படங்களை நமக்கு அனுப்பி வைத்துள்ளனர். குட்டிக்கண்ணனின் பெருமைகளை அறிந்து கொள்ளும் அதே நேரத்தில் குட்டி ராதா கிருஷ்ணன்களின் அழகையும் ரசிக்கலாம்.

ஆதிரா
பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். அப்படித்தான் கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது. துவாபரா யுகம் தொடங்கும் முன்பாக பூமியில் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. பூமியில் பாரம் தாங்க முடியாத பூமா தேவி இறைவன் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட தானும், ஆதிசேசனும் அவதரிப்போம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். துவாபரா யுகத்தில் ஆதிசேசன் பலராமனாகவும், மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும் அவதரித்தனர்.
விஷ்ணு பகவான் 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம். 10வது அவதாரம் கலியுகம் முற்றும் போது கல்கி அவதாரமாக எடுப்பார் என புராணங்கள் தெரிவிக்கின்றன.

எம்.கவிஷாலினி
அப்படிப் பட்ட முக்கிய காக்கும் தொழிலை செய்ய அவதரித்த கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நாம் கிருஷ்ணரை முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினால், நம்மை காத்து அருளுவார். கிருஷ்ணரின் மிக தீவிர பக்தர்கள் உணவு, நீர் இல்லா விரதம் மேற்கொள்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை முதல் உணவு, நீர் என எந்த ஒரு வகையான உணவையும் எடுத்து கொள்ளாமல் விரதம் இருப்பது வழக்கம்.

என்.ஐ. ஹேமந்த்
சரியாக அஷ்டமி திதி நடக்கும் நாளின் இரவு 12 மணிக்கு கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, பிரசாதங்கள் படைத்த பின்னர் தன் விரதத்தை முடிப்பது வழக்கம். வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை அரிசி மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்க வேண்டும். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு என்பதால் பூஜையை மாலையில் செய்ய வேண்டும். பாத கோலம் போட்டு அலங்கரித்தால் குட்டிக்கண்ணன் நம் வீடு தேடி வருவான் என்பது நம்பிக்கை.

கிருஷ்ணரின் லீலைகள்: தாய்மாமன் கம்சன் கண்ணனை கொலை செய்ய துடித்தான். பிறந்த உடனேயே வாசுதேவரின் நண்பர் நந்தகோபரின் ஆயர்பாடிக்கு சென்று அங்கு யசோதையின் அரவணைப்பில் வளர்ந்த கண்ணன் எண்ணற்ற லீலைகளை செய்திருக்கிறான். நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணெய் திருடுவது. கோபியர்களுடன் உற்சாகமாக விளையாடுவது என சுற்றித்திருந்த கண்ணன் சில அரக்கர்களை வதம் செய்ததோடு சிலருக்கு சாப விமோசனமும் கொடுத்திருக்கிறான்.

புன்னகை மன்னன் கண்ணன்
குட்டிக்கண்ணனின் அருளாசி: கோகுலவாசிகள் கண்ணனின் குறும்புகளை ரசித்தாலும் யாசோதாவிடம் வந்து புகார் செய்தனர். கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை உரலில் கட்டினாள். மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜூன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்தன அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள்.

சாபம் பெற்ற தேவர்கள்: நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள். நாரதர் அளித்த சாபத்தினால் அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜூன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் மூலம் சாப விமோசனம் பெற்று கண்ணனை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றார்கள். சாபம் நீங்கி மீண்டும் தேவர்களாக உருமாற்றம் அடைந்த இருவரும் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து வணங்கி மறைந்தனர்.

ஹரி சிவன்
வறுமை இல்லாத வாழ்வு: கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணனை வணங்கினால் எத்தனையோ நன்மைகள் உண்டாகும். குழந்தைகளின் கல்வி கற்கும் திறன் அதிகரிக்கும். இளைஞர்களின் நிர்வாக திறன் அதிகரிக்கும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள், புகழ் கூடும், அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.

சச்சின் ராஜ்
தேரோட்டி கண்ணன்: பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தவரும் கண்ணன்தான். தேரோட்டியாக வந்த கண்ணன்தான் பார்த்தசாரதி என்று அழைக்கப்படுகிறார். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதையாக உள்ளது. பகவான் கிருஷ்ணன் தன் கடைசிக் காலத்தில் வேடன் ஒருவன் எய்த அம்பு காலில் தைக்க பூலோகத்தில் கண்ணன் அவதாரத்தை முடித்து மீண்டும் வைகுண்டம் சென்றார் என்கிறது விஷ்ணு புராணம்.

ஆரோஹி ஜோதிஷ்னா
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications