Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொட்டும் மழையிலும் தேரோட்டம் கோலாகலம்..நாளை ஆருத்ரா தரிசனம்

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிவில் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலையில் கொட்டும் மழையிலும் கோலாகலமாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி ஆலயத்தில் மார்கழி திருவாதிரை விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த கோயிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளினார். ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் ஆகும்.

Lakhs of devotees witness Chidambaram Natarajar Temple Car festival Arudra Darisanam tomorrow

திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லை நடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருவாதிரையில் ஒரு வாய்க்களி' என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் சாப்பிட நன்மைகள் நடைபெறும்.

சிதம்பரத்தில் இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் கருவறை முன் உள்ள கொடிமரத்தில் குஞ்சிதபாத தீட்சிதர் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றினார். இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேர்கள் மாட வீதிகளில் வலம் வருகிறது. தேரோட்டத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர். கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து வந்தனர். கயிலாய வாத்தியங்கள் முழங்க சிவ பக்தர்கள் உற்சாகத்துடன் சிவதாண்டவம் ஆடி வந்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

நாளைய தினம் 6ம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலாவும் நடைபெறும். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜனவரி 7ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

Lakhs of devotees witness Chidambaram Natarajar Temple Car festival Arudra Darisanam tomorrow

நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் வயல்வெளிகளுக்கு இடையே செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது. இக்கோவிலில் சிவபெருமான், தன்னுடைய நடன காட்சியை மகாவிஷ்ணு, அக்கினிபகவான், அகஸ்தியர், வாமதேவ ரிஷி, மணப்படை மன்னன் ஆகியோருக்கு அளித்தார். இந்த ஆலயத்திலும் ஆருத்ரா தரிசன விழா நாளை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயான் சுவாமி ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாளைய தினம் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

மார்கழி திருவாதிரை நாளில் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்து திருநீறு பூசிக்கொண்டு விரதத்தை தொடங்கலாம். அன்றைய தினம் சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு சாப்பிட தரவேண்டும். விரதம் இருப்பவர்கள் அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+