விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை - வீட்டில் விளக்கேற்றினால் இவ்வளவு நன்மைகளா?
உடல் ஆரோக்கியத்திற்காகவும் இழந்த சொத்துக்கள், கொடுத்த பணம் திரும்பி வர விளக்கேற்றி வழிபடலாம். வீட்டில் தினசரியும் விளக்கேற்றி வழிபட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: விளக்கேற்றினால் மனம் அமைதியடையும். வீடே மங்களகரமாக இருக்கும். விளக்கேற்றுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். விளக்கேற்றுவதன் மூலம் இழந்த சொத்துக்களும், செல்வமும் கூட மீட்கப்படலாம் என்கின்றனர் ஜோதிடர்கள். விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை என்ற பாடலே உள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும்தான் விளக்கேற்ற வேண்டும் என்று இல்லை. தினசரியும் விளக்கு ஏற்ற வேண்டும்.
வேத புராணங்களும்கூடவிளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். சிலரது வீட்டில் மன நிம்மதியில்லாமல் இருக்கும் சண்டை சச்சரவுகளாக இருக்கும் அந்த வீட்டில் வசிப்பவர்கள் தினசரியும் விளக்கேற்றி வழிபட மன நிம்மதி அதிகரிக்கும்.

தினசரியும் நம்முடைய வீட்டில் காலையிலோ, மாலை நேரத்திலோ தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும். நமது இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும்.
தீபம் ஏற்றும் நேரம்
அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் தீபம் ஏற்றலாம். காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
இழந்த சொத்துக்கள் கிடைக்கும்
சொத்துக்களை இழந்தோரும், ஏமாற்றி பிடுங்கப்பெற்றோரும்,வர வேண்டிய நியாயமான சொத்துக்கள் வராமல் தவிப்போரும், திரும்ப கிடைக்கும் என நினைத்து கொடுத்த பணத்தை இழந்தோரும், தங்களின் நிலை மாற, தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வர, பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல். இந்த பரிகாரம் செய்யும் நாள் அசைவம் முட்டை உட்பட தவிர்க்க வேண்டும்.
எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் தீபம்
விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வத்துக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய் ஏற்றலாம். பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கு ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்.
வறுமை விலகி செல்வம் பெருகும்
வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமையல் அறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
தீபம் ஏற்ற என்ன எண்ணெய்
விளக்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் தாம்பத்திய சுகம், புகழ் தேவதை வசியம் கிடைக்கும். பொதுவாக சுத்தமான, கலப்படமில்லாத நல்லெண்ணை ஊற்றி வீட்டில் விளக்கேற்றினாலே போதும். சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு வாங்கி அதில் நெய் ஊற்றி காலையிலும், மாலையிலும் ஏற்றி வைப்பது நல்லது.
கடன்கள் தீரும்
ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி சிவனை வழிபட்டால் கடன்கள் தீரும். இலுப்ப எண்ணெய் கோவில்களில் மட்டும்தான் பயன்படுத்தலாம். வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. கணபதிக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். மகாலட்சுமிக்கு பசு நெய் ஊற்றி விளக்கேற்றலாம்.

அம்மன் அருள் கிடைக்கும்
மகாவிஷ்ணுவுக்கு நல்லெண்ணை ஊற்றி விளக்கேற்றலாம். எல்லா தேவதைகளுக்கும் நல்லெண்ணை விளக்கு ஏற்றலாம். விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. அப்படி ஏற்றி வைத்தால் கடன்கள் பெருகும். தீயவிளைவுகள்தான் ஏற்படும்.
பஞ்சமி திதியில் பஞ்ச தீப எண்ணெய்
பசுநெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இந்த ஐந்தும் கலந்த பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி பஞ்சமி திதியில் தேவியை வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். பஞ்சதீப எண்ணெய் ஊற்றி ஐந்து முகம் ஏற்றி வடக்குப் பக்கம் பார்த்து தீபம் ஏற்றி வந்தால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். துன்பங்கள் நீங்கும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும்.
தீபத்தை குளிர வைக்கும் முறை
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது, திரியின் அடிப்பகுதியை ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும். இப்படி தீபத்தினை குளிர்வித்தால் நமது வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications