மகிழ்ச்சியான மண வாழ்க்கை...கடைசி காலம் வரை காதல் இனிக்க என்ன செய்யலாம்.. என்ன செய்யக்கூடாது
சென்னை: மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு மிகப்பெரிய மந்திரம் எல்லாம் இல்லை கணவனோ மனைவியோ ஒருவருக்கொருவர் ஈகோ பார்க்காமல் இருந்தாலே போதும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். காலங்கள் கடந்தாலும் காதலுக்கு வயதாகாது. திருமணமான தம்பதியினர் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே வெற்றிகரமாக திருமண பொன்விழா ஆண்டினை கூட கொண்டாடலாம். வாழ்ந்தால் இப்படி மனமொத்த தம்பதிகளாக வாழ வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு வெற்றிகரமான திருமண வாழ்க்கையை கொண்டாட என்ன செய்யலாம் என்ன செய்யகூடாது என்று பார்க்கலாம்.
இந்து திருமணங்களில் முக்கிய பங்கு வகிப்பது ஜாதக பொருத்தம். நட்சத்திர பொருத்தம். பத்து பொருத்தம் பார்த்து கல்யாணம் செய்து வைத்தாலும் சில வீடுகளில் சண்டைகளும் சச்சரவுகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கும்.

குடும்பத்தில் சண்டை வருவது வீட்டுக்கு வீடு வாசற்படிதான் என்றாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுடன் இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல வழியில் நடத்தி சென்றால் மகிழ்ச்சி என்பது அந்த குடும்பத்தில் குடியேறும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அடித்தளமே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதுதான். விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம், அனுசரித்துச் செல்லும் குணமும் இருந்தாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
தொன்று ஞ்சென் மத்திலேழ்
ஊதியந் திற்புதன் துய்ய
மதிகூட தின்றிருக்கத் தோகைமயி
லாகமெனப் பாகுமொழி யாகிநற்
சுந்தரி யுஞ்சுகம் நல்குவளாம்
ஜாதகத்தில் ஜென்ம லக்கினத்தில் ஏழாம் வீட்டு அதிபதியும், 10ம் வீட்டில் அல்லது 11ம் வீட்டில் புதனும் நின்றிருக்க, புதனுடன் வளர்பிறை சந்திரன் சுப கிரகங்களின் சாரத்தைப் பெற்று, இப்படி கிரகங்கள் கூடியிருக்கப் பிறந்தவனின் மனைவியானவள் மிகவும் அழகானவளாக மட்டுமில்லாமல், நல்ல குணவதியாகவும், அன்பும், பொறுமையும் பொருந்தியவளுமான உத்தம மங்கையாக திகழ்வாள். இந்த காதல் ஜோடியின் குடும்பம் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவார்கள் என பழம்பாடலில் கூறப்பட்டுள்ளது.

ஒருவருக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய 7 ஆம் பாவமும், களத்திரகாரகன் சுக்கிரனும் பலமாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடியவை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபசேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவைகள் ஆகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு கேது, தேய்பிறை சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவை பாவகிரகங்களாகும்.
மணவாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு 7 ஆம் அதிபதி சுபராக இருப்பதும், 7 ஆம் வீட்டில் சுபகிரகம் இருப்பதும் நல்லது. 7 ஆம் அதிபதி பாவியாக இருக்கும் பட்சத்தில் சுபர் நட்சத்திரத்தில் அமைவதும், சுபர் பார்வையுடனிருப்பதும் நல்லது.
பொதுவாக 7 ஆம் அதிபதி களத்திர காரகனான சுக்கிரன் ஆகியோர் கிரக சேர்க்கையின்றி தனித்து அமையப்பெற்று சுபர் நட்சத்திரத்தில் சுபர் பார்வையுடனிருப்பது நல்லது. 7 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர ஸ்தானமான 1,4,7,10 லோ திரிகோண ஸ்தானம் என கூறக்கூடிய 1,5,9 லோ அமையப் பெறுவது சிறப்பு.
திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குடும்ப ஸ்தானம், சுகஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம், அயன சயன ஸ்தானம் எனப்படும் 2,4,8,12 ஆம் இடங்களில் பாவகிரகங்கள் ஏதும் இல்லாமல் பலமாக அமையப்பெற்றால் மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஜென்ம லக்கினத்திற்கு 2,7 ஆம் அதிபதிகள் 6,8,12 ஆம் பாவங்களில் மறையாமல் இருப்பதும்,2,7 ஆம் அதிபதிகள் வக்ரம் பெறாமல் இருப்பதும்,ஜென்ம லக்கினாதிபதியும் 7ஆம் அதிபதியும் ஒருவருக்கொருவர் மறைவு ஸ்தானங்களான 6,8,12 ஆம் இடங்களில் அமையாமல் இருப்பது நல்லது.
7 ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும், 7 ஆம் அதிபதியும் சுக்கிரனும், பெண்களுக்கு களத்திர காரகனான செவ்வாயும் கிரக சேர்க்கையின்றி இருப்பது நல்லது. 7 ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் நல்லது என்ற காரணத்தால் தான் பொதுவாக மக்கள் 7 ஆம் இடம் சுத்தமாக இருக்கிறதா என பேச்சு வாக்கில் கேட்பார்கள்.

பொதுவாக, எந்தவொரு ஸ்தானத்திற்கும் சுபகிரக பார்வை இருப்பது மிகவும் சிறப்பு. குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். குரு பகவான் தான் இருக்கும் இடங்களிலிருந்து 5,7,9 ஆகிய ஸ்தானத்தை பார்வை செய்வார், பார்வை பெறும் பாவங்களுக்கு எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் அதன் கெடுதிகள் அனைத்தும் விலகி நற்பலன்கள் உண்டாகும். இவ்வளவு மகத்துவங்களை பெற்ற குருவின் பார்வை ஜென்ம லக்னத்திற்கோ, 7 ஆம் வீட்டிற்கோ, 7 ஆம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ அமையுமானால் மணவாழ்க்கையானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
சில பேர் வீடுகளில் கணவன் மனைவிக்குள் கிரக சூழ்நிலையால் பிரச்சனை ஏற்படும். ஏழரை சனி காலத்தில் கணவன் மனைவிக்குள் பிளவு ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு அப்படிப்பட்ட பிரச்சனை ஏதாவது இருந்தால் 8 இரும்பு மோதிரத்தை வாங்கிக் கொள்ளுங்கள். அதை கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி அந்த மோதிரத்தை உள்ளே போட்டு வடகிழக்கு பகுதியில் யார் கண்ணுக்கும் தெரியாமல் வைக்க வேண்டும். இது ஒரு எளிமையான பரிகாரம். வாரம் ஒருமுறை தண்ணீரை மரத்திற்கு ஊற்றி விட்டு மாற்றி விடலாம். இதன் மூலம் சண்டை சச்சரவுகள் நீங்கும். ஒற்றுமை ஏற்படும்.
வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று 6 நெய்தீபம் ஏற்றி வழிபட கணவன் மனைவி இடையேயான சண்டை சச்சரவுகள் நீங்கும். வீட்டில் துளசி செடி வளர்த்து தினமும் துளசியை வணங்கி வருவதும் மாலை நேரங்களில் துளசியை விளக்கேற்றி வழிபடுவதும் கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்குக் கூட மல்லுக்கு நிற்காமல் கல்யாணம் ஆகி கடைசி காலம் வரைக்கும் கையை பிடித்துக்கொண்டு காதலுடன் வலம் வரலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications