மதுரை சித்திரை திருவிழா: ஏப். 24ல் மீனாட்சி திருக்கல்யாணம் - 27ல் கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 15ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 24ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் 27ஆம் தேதியன்று கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபைவம் நடைபெறும்.
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 15ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 24ஆம் தேதியன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 25ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.
சித்திரை மாதம் வந்தாலே மதுரையில் திருவிழா களை கட்ட ஆரம்பித்து விடும். பங்குனி மாதமே பந்தக்கால் முகூர்த்தம் நட ஆரம்பித்து பக்தர்கள் விரதத்தை ஆரம்பித்து விடுவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம் மட்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. அழகர்மலை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. கள்ளழகர் மதுரைக்கு வராமல் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தொட்டியில் எழுந்தருளினார்.

சித்திரை திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினத்தில் இருந்து திருவிழா நடைபெறும் 12 நாட்களும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை, மீனாட்சி அம்மனுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

சித்திரை தேரோட்டம்
ஏப்ரல் 22ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், 23ஆம் தேதி திக்விஜயம், சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் 24ஆம் தேதியும், 25ஆம் தேதி பெரிய தேர் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

வைகையில் இறங்கும் கள்ளழகர்
கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எதிர்சேவை 26ஆம் தேதியும், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் 27ஆம் தேதியும் நடைபெறும். சித்திரை தமிழ் வருடப்பிறப்பு தொடங்கியதில் இருந்து மதுரையில் சித்திரை திருவிழா கொண்டாட்டம் தொடங்க உள்ளது.

மதுரைக்கு வருவாரா கள்ளழகர்
இந்த ஆண்டு சித்திரை திருவிழா வழக்கம் போல நடைபெற வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அப்போது உள்ள கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருவிழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அழகர் மலையில் இருந்து இந்த ஆண்டு கள்ளழகர் மதுரைக்கு வருவாரா? அவருக்காக வைகையில் தவம் இருக்கும் மண்டூக முனிவரின் சாபத்திற்கு விமோசனம் தருவாரா என்பது அரசின் உத்தரவில்தான் உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications