For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா நிறைவு - விறகு விற்ற இறைவனின் திருவிளையாடல்

தான் என்ற ஆணவத்தை இறைவனார் கட்டாயம் அடக்குவார். ஆதலால் நாம் வாழ்க்கையில் ஆணவம் கொள்ளக் கூடாது என்று சொல்கிறது மதுரை ஆவணி மூலத்திருவிழாவின் விறகு விற்ற லீலை.

Google Oneindia Tamil News

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆவணி மூலம் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

மதுரையில் தினம் தினம் திருவிழாக்கோலம்தான். சித்திரை மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். வைகாசியில் வசந்த உற்சவமும் ஆனியில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். ஆடி மாதத்தில் முளைக்கொட்டு உற்சவம் நடைபெறும்.

ஆவணி மாதத்தில் மூலத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இறைவன் சிவபெருமானின் திருவிளையாடல்கள் இந்த விழாவில் அரங்கேற்றப்படும். கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, வளையல் விற்றது, நரியை பரியாக்கியது என கோலாகலமாக நடைபெற்ற இறைவனின் லீலைகள். புட்டுத்திருவிழா நாளில் வைகையில் பெருகிய வெள்ளத்தால் கரை உடைய இறைவனே கூலி ஆளாக வந்து வயதான பாட்டிக்கு உதவிய சம்பவமும், பாண்டிய மன்னன் பிரம்பால் அடிக்க அந்த அடி உலக உயிர்கள் மீது அனைத்தும் விழுந்தது. இறைவனை உதவிக்கு அழைத்தால் அவர் உடனே நமக்கு உதவி செய்வார் என்பதை இந்த திருவிளையாடல்கள் உணர்த்துகின்றன.

Madurai Meenakshi Amman Temple Avani Moolam festival end

விறகு விற்ற லீலை

எல்லாம் வல்ல சிவபெருமான் தனது பக்தருக்காக விறகு விற்ற லீலையும் மதுரையில் அரங்கேறியுள்ளது. பாணபத்திரர் என்ற பாடகருக்காக இறைவன் விறகு விற்பவராக வந்து லீலை புரிந்துள்ளார். வரகுண பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தபோது ஏகநாதன் என்னும் வடநாட்டு யாழிசைக் கலைஞர் தனது சீடர்களுடன் மன்னனின் அரண்மனைக்கு வந்தார்.

தன்னுடைய யாழினைக் கொண்டு இசை பாடி அரசவையில் அனைவரின் மனதையும் மயக்கினான். பின்னர் வரகுணனிடம் பலநாடுகளில் யாழிசையில் வெற்றி பெற்று பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றதாக ஆணவத்துடன் தெரிவித்தார்.

வரகுண பாண்டியனும் ஏகநாதனின் இசையைப் பராட்டி அவனுக்கு பல பரிசுகளை வழங்கி தன்னுடைய விருந்தினராக சிலநாட்கள் பாண்டிய நாட்டில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஏகநாதனும், அவனைச் சார்ந்தவர்களும் தங்குவதற்கு அரச மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனைக் கண்டதும் 'இந்த உலகில் தன்னை யாரும் இசை வாதில் வெல்ல ஆளில்லை' என்ற ஆவணத்தோடு, மன்னனிடம் பேசினார். உங்கள் நாட்டில் என்னுடன் யாழிசைத்து இசைபாட வல்லார்கள எவரும் உளரோ? என்று கேட்டார்.

Madurai Meenakshi Amman Temple Avani Moolam festival end

மன்னனோ, உடனே நீங்கள் இப்பொழுது உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். நான் உங்களுடன் போட்டியிடும் நபரைத் தேர்ந்தெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கூறி அனுப்பினார். தன்னுடைய அவையில் இருந்த பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞரை ஏகநாதனிடம் யாழிசைத்து இசைபாடி போட்டியிட ஆணை இட்டான். அதைக்கேட்ட பாணபத்திரர்,சொக்கநாதரின் திருவருளோடு இசைப் போட்டியில் கலந்து கொள்கிறேன் என்று கூறினார்.

ஏகநாதனின் சீடர்கள் மதுரை நகரின் தெருக்களில் யாழினை இசைத்து பாடி கொண்டு சென்றனர். அதைக்கேட்டு பலரும் பாராட்டினர். இதனைக் கண்ட பாணபத்திரர் ஏகநாதனின் சீடர்களே இவ்வளவு அழகாகப் பாடுகிறார்களே.

இசைப்போட்டியில் ஏகநாதனை எப்படி வெல்லப் போகிறேனோ என்று கலக்கத்துடன் நேரே சொக்கநாதரைச் சரணடைந்தார். நீங்கள்தான் என்னை இந்த இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டினார். இறைவனோ விறகு விற்பவர் போட வேடம் போட்டுக்கொண்டு வந்தார்.

பழைய யாழினை இடக்கையில் கொண்டும், தலையில் விறகுகளைச் சுமந்தபடி மதுரை நகர வீதிக்குள் நுழைந்தார். மாலை வேளையில் ஏகநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் விறகுக் கட்டினை இறக்கி வைத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து யாழினை மீட்டி பாடினார் விறகு விற்பவராக வந்த இறைவன்.

அதைக் கேட்டு மயங்கிய ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரிடம் வந்து நீ யார்? என்று கேட்டான்.
அதற்கு இறைவனோ, நான் யாழிசையில் வல்லவராகிய பாணபத்திரனின் அடிமை என்று சொன்னார்.
பாணபத்திரரிடம் இசை பயிலும் மாணவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோது, வயது முதிர்ந்ததால் இசை கற்க தகுதியற்றவன் என்று என்னை பாணபத்திரர் புறந்தள்ளி விட்டார்.
அதனால் விறகு விற்று பிழைப்பு நடத்துகிறேன். பாணபத்திரரிடம் கற்ற இசையை மறக்காமல் இருக்கும் பொருட்டு நான் அவ்வப்போது பாடுவேன் என்று கூறினார்.

நீ முன்னர் பாடிய பாடலை இசையோடு பாடுக என்று கூறினான். இறைவரும் யாழினை மீட்டி பாட, அந்த இசையிலும் பாட்டிலும் ஏமநாதன் உட்பட உலக உயிர்கள் அனைத்தும் மெய் மறந்து நின்றனர்.

பின்னர் உணர்வு வந்த ஏமநாதன், ஒரு விறகு வெட்டியே இவ்வாறு இசையுடன் பாடினால், பாணபத்திரனின் பாட்டின் திறன் எத்தகையதோ?" என்று கூறி கவலைப்பட்டான்.

"இனி நாம் பாணபத்திரனோடு போட்டியிட்டு வெற்றி பெற இயலாது. ஆதலால் இப்போதே இங்கிருந்து புறப்படவேண்டும்" என்று கூறி தன்கூட்டத்தினருடன் மதுரையை விட்டு வெளியேறினான்.

பாணபத்திரனின் கனவில் தோன்றிய சிவபெருமான், பாணபத்திரரே இன்று யாம் ஏகநானிடம் உன்னுடைய அடிமை என்று கூறி இசைபாடி வென்றோம் என்று கூறி மறைந்தார்.

இதனைக் கேட்ட பாணபத்திரர் விழித்தெழுந்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் விடிந்ததும் திருக்கோவிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு எனக்காக விறகு சுமந்தீர்களா என்று கேட்டு கண்ணீர் விட்டு வணங்கினார்.
காலையில் அரசவை கூடியதும் வரகுணன் ஏமநானை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். காவலர்கள் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர். ஆனால் ஏமநாதன் இரவோடு இரவாக ஓடி விட்டதாக கூறினர். அதனைக் கேட்ட அவர்கள் வரகுணனிடம் தெரிவித்தார்கள்.

உடனே பாணபத்திரர் தன்னுடைய மனக் கவலையை இறைவனாரிடம் தெரிவித்ததையும், இறைவனார் கனவில் கூறியதையும் விளக்கினார். இது அந்த சோமசுந்தர பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்த வரகுணன் பாணபத்திரரை யானைமீது அமர்த்தி மரியாதை செலுத்தினான். பல பரிசுப்பொருட்களை வழங்கினான்.

பாணபத்திரர் தனக்கு அரசன் கொடுத்த வெகுமதிகளை தான் மட்டுமே வைத்துக்கொள்ளாது உறவினர்கள் சுற்றத்தாருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தார். ஆணவத்தோடு இருப்பவர்களின் தலையில் குட்டி வைப்பார் இறைவன் என்பதை வளையல் விற்ற லீலை உணர்த்துகிறது.

மதுரை ஆதீன மடத்தின் புதிய மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் பொறுப்பேற்பு - 6 உத்தரவுகளில் கையெழுத்து மதுரை ஆதீன மடத்தின் புதிய மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் பொறுப்பேற்பு - 6 உத்தரவுகளில் கையெழுத்து

மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆவணி மூலத்திருவிழா தீர்த்தவாரியுடன் நேற்று தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

English summary
The festival concluded with the Teerthawari with the famous Avani Moolam festival at the Meenakshi Amman Temple. Meenakshi Sundareswarar awoke in a silver Rishabha vehicle and bade farewell. The festivals performed by the Lord were performed daily at the Meenakshi Amman Temple in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X