அக்னியில் உதித்த மதுரை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணம் - புது தாலி மாற்ற நல்ல நேரம்
மதுரையை அரசாளும் அன்னை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் மே 4ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதியில்லை
மதுரை: மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெறும். பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் திருக்கல்யாண விருந்து களைகட்டும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பினால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருக்கல்யாணத்தை மட்டும் எளிமையாக நடத்தி லைவ் ஆக ஒளிபரப்புகின்றனர். பக்தர்கள் யாருமின்றி திருக்கல்யாணம் நடைபெறுவது மதுரை வரலாற்றில் இதுதான் முதன்முறையாகும். இந்த திருக்கல்யாணத்தை காண்பதன் மூலம் மக்களின் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 4ஆம் தேதி காலை 9.05 மணி முதல் காலை 9.25 மணிவரை நடைபெறும் என்றும் இது கோவில் இணைய தளத்தில் நேரலையாக ஒளிபரப்ப உள்ளனர். வீட்டிலிருந்தபடியே இந்த திருக்கல்யாணத்தை பார்த்து பெண்கள் புதுத்தாலி மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருந்தது. கொரோனா பிரச்சினையால் தற்போது மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு, சித்திரை திருவிழா நடைபெறாது என்று, கோவில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. மே 2ம் தேதி நடக்கவிருந்த மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே 3ம் தேதி நடக்கவிருந்த திக்விஜயம் ஆகியவை நடைபெறாது என்றும் அதேநேரம், மே 4ம் தேதி மீனாட்சியம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னியில் உதித்த தடாதகை
மதுரை மீனாட்சியின் அவதாரம் பற்றி திருவிளையாடல் புராணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன் மலயத்துவச பாண்டியன், அவரது மனைவி காஞ்சனமாலை. நாடாளும் மன்னனாக இருந்தாலும் நமக்கொரு பிள்ளை இல்லையே என்ற கவலை வாட்டியது. பிள்ளை வேண்டி யாகம் நடத்த அந்த அக்னியில் இருந்து அழகாய் ஒரு பெண் குழந்தை சிரித்த முகத்துடன் தோன்றியது.

அங்கயற்கண்ணி
அந்த பெண் குழந்தையை பார்த்து சந்தோசப்பட முடியவில்லை காரணம் அந்த குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்தது. அப்போது அசரிரீ கேட்டது, "கவலைப்படாதே மன்னா, உன் மகளுக்கு ஏற்ற கணவன் வரும் போது அந்த மூன்றாவது தனம் மறையும் என்று அந்த அசரிரீ சொன்னதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் மலையத்துவ பாண்டியன்

மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்
தடாதகை என்று பெயரிட்டு அந்த பெண் குழந்தையை வீரமாக வளர்த்து வர ஆணுக்கு நிகராக அனைத்து வித்தைகளையும் கற்று வளர்ந்தாள் அங்கையற்கண்ணி. மதுரை அரசியாக ஆட்சி பொறுப்பேற்றாள். நான்கு திசைகளிலும் திக் விஜயம் சென்று போரிட்டு வெற்றி பெற்றாள் அன்னை மீனாட்சி. தன் மக்களையும் கண்ணுக்குள் வைத்து காத்தாள் அன்னை மீனாட்சி. மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார் ஆனால் அதற்கான நேரம் வரும் என்று சொல்லி விட்டு திருக்கயிலாயத்திற்கு திக் விஜயம் சென்றாள்.

பெண்ணிற்கு உரிய நாணம்
மீனாட்சி திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார். சிவபெருமானே போருக்கு கிளம்பினார். தன்னுள் பாதியாக நின்ற சிவனை கண்டவுடன் மீனாட்சியின் மனதில் ஏதோ ஒன்று தோன்றியது. அதுவரை வீரமாக போரிட்டு நின்ற அன்னை மீனாட்சி வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றாள். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பிரம்மன், மகாவிஷ்ணு தேவாதி தேவர்களும் முடிவு செய்து பாண்டிய மன்னனிடம் பெண் கேட்டு சென்றனர்.

மீனாட்சி திருக்கல்யாணம்
ஆலவாய் அரசி அங்கையர் கண்ணிக்கும் கயிலாய நாதன் சிவபெருமானுக்கு நடக்கும் திருமணத்தை காண உலகமே மதுரையில் திரண்டிருந்தது. பிரம்மா சரஸ்வதி, மகாவிஷ்ணு மகாலட்சுமி, இந்திரன் தலைமையிலான தேவாதி தேவர்களும் மதுரையில் திரண்டிருந்தனர். விநாயகரும், முருகனும் அம்மை அப்பனின் திருமணத்தை காண ஆவலோடு காத்திருந்தனர்.

சுந்தரேஸ்வரராக மாறிய சிவபெருமான்
மீனாட்சியை திருமணம் முடிக்க சுந்தரேஸ்வரராக மாறினார் சிவபெருமான். சொக்கநாதருக்கு இணையாக அன்னை மீனாட்சி நிற்க இவர்களின் திருமணத்தை காண என்ன புண்ணியம் செய்தோமோ என்று பேசிக்கொண்டனர். மதுரையம்பதியே புண்ணியம் செய்திருக்கிறது என்று பேசினர். முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்து பாடி பூமாரி பொழிய அன்னை மீனாட்சியின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினார் சொக்கநாதர். மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணத்தை காண்பவர்களின் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த புராண கதைகள் எல்லாம் தடாதகை திருமண படலம், திருவிளையாடல் புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது.

திருக்ல்யாணமும் புதுத்தாலியும்
மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெறும் நாட்களில் பல லட்சம் பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள். திருக்கல்யாண விருந்து களைகட்டும். பக்தர்கள் விருந்து சாப்பிட்டு மொய் எழுதுவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பினால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு திருக்கல்யாணத்தை மட்டும் லைவ் ஆக ஒளிபரப்புகின்றனர். பெண் பக்தர்கள் வீட்டிலிருந்தே புது தாலி மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை வரலாற்றிலேயே மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்கள் யாருமின்றி நடைபெறுவது முதன்முறையாகும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications