For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரதோஷம் போக்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து கணபதியை வணங்கினால் என்னென்ன நன்மைகள்

Google Oneindia Tamil News

மதுரை: சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சமும். தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். சோமவார தினமான இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் வருவது கூடுதல் விஷேசம். விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி மஹாசங்கடஹர சதுர்த்தி தினமாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.

தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது அழிப்பது என்று பொருள். சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும். மகாசங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படும் இந்த நாளில் விரத மகிமையைப் பற்றி அறிந்து கொள்வோம்.

சூப்பர்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி சூப்பர்! அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி

சங்கடஹர சதுர்த்தி விரதம் புராண கதை

சங்கடஹர சதுர்த்தி விரதம் புராண கதை

விநாயகர் ஒரு முறை கயிலாயத்தில் நடனமாடிக்கொண்டிருந் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் தோற்றத்தைக் கண்டு சிரித்தான். தன்னைப் பார்த்து சந்திரன் சிரிப்பதை பார்த்த விநாயகர், அவனின் அழகு மற்றும் கலைகள் அனைத்தும் கலையிழந்து போகுமாறு சாபமிட்டார். இதனால் மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான். அப்போது விநாயகர் சந்திரனிடம், இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு தோஷங்கள் நீங்கும் என்று வரம் அளித்தார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது.

விநாயகரை வழிபடுவோம்

விநாயகரை வழிபடுவோம்

ஸ்ரீ விநாயக மூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்த போதிலும், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக மிக முக்கியமானது.பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி ஆகும். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

சந்திரபகவான்

சந்திரபகவான்

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான். சந்திரன் மனோகாரகன். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது. சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும், கேது தோஷம் போகவும் விநாயகரை வழிபடலாம்.

மகாசங்கடஹர சதுர்த்தி

மகாசங்கடஹர சதுர்த்தி

ஓவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி ஆகும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும். ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிப்பது நல்லது. ஆவணி மாத விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் மஹா சங்கட ஹர சதுர்த்தி நாளிலிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும்.

சந்திரன் வழிபட்ட விநாயகர்

சந்திரன் வழிபட்ட விநாயகர்

விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர் விநாயகர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுகிறோம்.

சந்திர தோஷங்கள் நீங்கும்

சந்திர தோஷங்கள் நீங்கும்

சந்திரதசை காலத்தில் ஒருவருக்கு சாதக பாதகங்களைத் தரும். ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். இந்த 10 பத்து வருட காலங்களில் 12 லக்னங்களுக்கும் சந்திரன் நன்மையும் தீமையும் கலந்த பலன்களைத் தருவார். சந்திர பகவானின் திசையானது சில லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலப் பலனை அதிகம் தரும்.

சந்திரன் யாருக்கு சாதகம்

சந்திரன் யாருக்கு சாதகம்

சந்திரனுக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாயின் லக்னமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் அதிபதி என்பதால் அனுகூலமான பலன்களை தருவார். ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் அதிபதி என்பதால் ஜாதகத்தில் சந்திரன் அமையும் இடத்தைப் பொருத்து சாதக பலனை உண்டாக்குவார். சந்திரன் ரிஷப ராசியில் உச்சமடைகிறார் என்றாலும் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு அதிக அளவில் நற்பலன்களை தருவது இல்லை. மிதுனத்திற்கு 2 ம் அதிபதி என்பதால் ஓரளவுக்கு சாதகப் பலனை தருவார். கடக லக்னத்திற்கு சந்திரன் லக்னாதிபதி என்பதால் கடக ராசிக்கு சந்திர திசை மிகவும் சாதகமான பலனை உண்டாகும். சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்னாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திரன் திசை காலத்தில் பெறலாம்.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் லாபாதிபதி. சந்திர திசை சாதகமான பலன்களை கன்னி ராசியினருக்கு அள்ளித்தரும்.

 சந்திரனால் நன்மை

சந்திரனால் நன்மை

துலா லக்னத்திற்கு 10ஆம் அதிபதியாக சந்திரன் வருவதால் சந்திர திசை நடைபெறும் போது தொழில், வியாபாரங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.விருச்சிகத்தில் சந்திரன் நீசமடைகிறார். விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி என்பதால் பாதிப்பை தருவார். தனுசு லக்னத்திற்கு 8ம் அதிபதி சந்திரன் என்பதால் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை தருவார். மகர லக்னத்திற்கு சந்திரன் 7ஆம் அதிபதி என்பதால் வாழ்வில் சற்று ஏற்றத் தாழ்வினை ஏற்படுத்துவார். கும்ப லக்னத்திற்கு சந்திரன் 6ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் போது உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். மீன லக்னத்திற்கு சந்திரன் 5ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் காலத்தில் மிகவும் சாதகமான பலன்கள் உண்டாகும்.

வறுமை நீங்கி செல்வம் சேரும்

வறுமை நீங்கி செல்வம் சேரும்

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் கேதுவால் ஏற்படும் தோஷங்களும் நீங்கவும் சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருப்பது நன்மை தரும். விநாயகர் தரிசனம், விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது, விநாயகருக்கு அபிஷேகத்திற்க்கு பால் வாங்கி கொடுப்பது போன்றவை சிறந்த வழிகளாகும். கடன் பிரச்னைகளில் திண்டாடுபவர்கள் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று மாலை நேரத்தில் வீட்டிலேயே விநாயகப்பெருமானை நினைத்து வணங்க வேண்டும். விநாயகப் பெருமானுக்குப் பிரியமான விநாயகர் அகவல் போன்ற துதிகளைப் பாடிப் போற்ற வீட்டில் வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.

English summary
MahaSankatakara Chaturthi Viratham: (மஹாசங்கடஹரசதுர்த்தி விரதம்) Fasting on Maha Sankatahara Chaturthi is performed for Lord Ganesha. This fasting is considered as auspicious and beneficial. This viratham is observed for one year period on all the Sankatahara Chaturthi days and will end it by performing a Ganapathy Homan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X