மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள்
மண்டூக முனிவருக்கு சவுந்தரராஜ பெருமாள் சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார்.
திண்டுக்கல்: மண்டூக முனிவருக்கு சவுந்தரராஜ பெருமாள் சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார் சவுந்தரராஜ பெருமாள்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் பிரசித்திபெற்ற சவுந்தரராஜ பெருமாள் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று சவுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடைபெறவில்லை.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் மூடப்பட்டது. இருப்பினும் கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் இன்றி வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன.

சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் பங்கேற்பு இன்றி மண்டூக முனிவருக்கு சவுந்தரராஜ பெருமாள் சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. வழக்கமாக பெருமாள் குடகனாற்றில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்குவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, குடகனாற்றுக்கு பெருமாள் அழைத்து செல்லப்படவில்லை. மாறாக கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார். இன்றைய தினம் மச்சம், மீனம், கூர்மம், வராஹம் உள்ளிட்ட தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

பட்டி வீரன்பட்டி வரதராஜ பெருமாள்
இதேபோல் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக சித்ரா பவுர்ணமி விழா பெரிய அளவில் நடைபெறவில்லை. மூலவர் வரதராஜ பெருமாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கோவில் முன்புற கதவுகள் மூடப்பட்டு, பக்தர்கள் இன்றி கோவில் அர்ச்சர்கள் மட்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்தனர்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications