மாங்கனித்திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் இன்று தொடக்கம் - 24ல் மாங்கனி இறைத்தல்
காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித்திருவிழா விக்னேஸ்வர பூஜை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியுள்ளது. 24ஆம் தேதி மாங்கனி இறைத்தல் விழா நடைபெறும்.
காரைக்கால்: புத்திர பாக்கியம் தரும் மாங்கனித்திருவிழா காரைக்கால் அம்மையார் கோவிலில் மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் காரைக்கால் அம்மையார். ஆனி பவுர்ணமியை முன்னிட்டு காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இறைவன் பிச்சாடனார் வேடமிட்டு ஊர்வலம் போகும் போது தெருவில் கூடியிருக்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கான மாம்பழங்களை கூடை கூடையாக கொட்டி இறைவனுக்கு காணிக்கையாக்குவது விழாவின் சிறப்பம்சமாகும்.
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உண்டு. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஐந்து நாட்களும் காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. பல ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் காரைக்கால் நகருக்கு வந்து பக்தர்கள் இறைவன் மீது இறைக்கும் மாங்கனியை பிரசாதமாக எடுத்து செல்வார்கள். புத்திரபாக்கியம் வேண்டி இந்த மாங்கனியை சாப்பிடுபவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் மாங்கனி திருவிழா பற்றி சுவாரஸ்யமான புராண கதை ஒன்று உள்ளது.

சிவனடியார்
பதிபக்தியும் சிவபக்தியும் கொண்டவர் புனிதவதியார். அவரது கணவர் பரமதத்தர் ஒருநாள் இரண்டு மாம்பழங்களை தனது கடை ஊழியரிடம் கொடுத்து அனுப்பினார். இதனை கண்ட சிவபெருமான் அம்மையாரின் பக்தியை சோதிக்க வேண்டி சிவனடியார் வேடம் பூண்டு வீட்டிற்கு வந்து பிச்சை கேட்கிறார். அம்மையாரும் மனமுவந்து மாங்கனியை உண்ண வைத்து விருந்து படைக்கிறார். சிவனடியார் சாப்பிட்டு விட்டு சென்ற பின்னர் பரமதத்தர் வீட்டிற்கு உணவு உண்ண வருகிறார். அப்போது மீதமிருந்த ஒரு மாம்பழத்தை வைத்து உணவு பரிமாறினார் புனிதவதி அம்மையார்.

அதிக சுவை கொண்ட மாம்பழம்
இறைவன் அளித்த பழம் பழத்தை சுவைத்த கணவர் அதன் சுவையில் மயங்கி மற்றுமொரு பழத்தை கொண்டுவருமாறு கேட்கவே, உண்மையை சொல்ல அஞ்சிய அம்மையார் இறைவனை வேண்டவே அம்மையின் கையில் மாம்பழம் வந்து விழுகிறது. உடனே அந்த பழத்தை கொண்டு வந்து கணவருக்கு படைக்கிறார் அம்மையார். மாம்பழத்தின் சுவை அதிகமாக இருக்கவே ஏது இப்பழம் என்று கேட்டார் பரமதத்தர். அம்மையாரும் உண்மையை கூறிவிடுகிறார்.

கடவுள் அம்சம்
அதை நம்பாத கணவர் என்முன்னால் பழம் வரவைக்க முடியுமா என்று கேட்கிறார். அம்மையாரும் இறைவனை வேண்டி நிற்கவே மாம்பழம் கையில் வந்து விழுகிறது. இனிமேல் அம்மையாருடன் குடும்பம் நடத்த முடியாது என்று அஞ்சிய பரமதத்தர் கடல் கடந்து வாணிபம் செய்ய கப்பலேறி செல்கிறார். பின் மதுரையில் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைக்குப் புனிதவதி என்று பெயரிடுகிறார்.

காரைக்கால் அம்மையார் பேயுருவம்
கணவர் மதுரையில் இருப்பதை அறிந்த அம்மையார், புஷ்ப பல்லக்கில் அவ்வூருக்குச் செல்கிறார். அம்மையார் வருவதை அறிந்த கணவர், தம் மனைவி, குழந்தையுடன் வந்து அவர் காலில் விழுகிறார். கணவனே காலில் விழுந்து வணங்கிய பிறகு இல்லற வாழ்வில் இனி ஈடுபடுதல் கூடாது என்ற எண்ணத்தில் சிவனிடம் வேண்டி தம் அழகுத் திருமேனியை உதிர்த்து பேயுருவம் கொண்டு கைலாயம் செல்கிறார். சிவபெருமான் திருவாலங்காட்டில் அம்மையாருக்கு முக்தியளிக்கிறார்.

ஆனி பௌர்ணமி
ஒப்பற்ற சிவனடியாராக வாழ்ந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையையும் தொண்டுகளையும் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமி தினத்தையொட்டி மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா திங்கட்கிழமை மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமையன்று ஸ்ரீபரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்றைழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை ஈசன் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி உலா நடைபெறும்.

மாங்கனி இறைத்தர்
புதன்கிழமையன்று பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறும். 24ஆம் தேதி வியாழக்கிழமையன்று மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவில் கலந்துகொண்டு மாங்கனி பெறுபவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. கொரோனா காலமாக இருப்பதால் பக்தர்கள் அனுமதியின்றி கோவிலுக்குள் விழா நடைபெறுகிறது.

பேயுருவம் பெற்ற அன்னை
25ஆம் தேதியன்று அதிகாலையில் காரைக்கால் அம்மையாருக்கு பஞ்சமூர்த்திகள் காட்சிக் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். 63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர் காரைக்கால் அம்மையார். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications