மன்மத ஆண்டு: கும்பம் ராசிக்காரர்களே சக்கரத்தாழ்வாரை வணங்குங்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீமன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் கும்பம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பொதுவான பலன்களைப் பார்ப்போம்.
நவகோள்களில் தன் பணியை நீதி வழுவாது செய்யும் அனலோன் மகனான அந்தகனே கும்பம் ராசியின் அதிபராவார். தெய்வீக குணமிக்க கோடியில் ஒருவர் கும்பத்தில் உதிக்கும் ஞானி ஆவார் என்னும் சொல்லுக்கு உரித்தான கும்பம் ராசி அன்பர்களே.

மதிப்பு மரியாதை கவுரவமும் உடன் பிறந்தவை இதனை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் இந்த ஆண்டு பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் நிலையில்தான் பிறக்கிறது. இருந்தாலும் ஆண்டின் மத்தியில் குருபகவான் சாதகமான இடத்துக்கு வருகிறார்.
சனியால் பின்னடைவு
சனி உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. தொழிலில் சிறு சிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள் லேசாக உங்களை நோகச் செய்யலாம்.
குருவின் நிலை
குருபகவான் ஆறாம் இடத்தில் இருக்கிறார் இது சாதகமான நிலை இல்லை. பொதுவாக குருபகவான் ஆறாம் இடத்தில் இருந்தால் உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார் மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். ஆனாலும் கவலை வேண்டாம். குரு பகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது ஒன்பதாம் இடத்துப் பார்வையால் உங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த இடையறையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள் உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டு இருக்கும் அதனை கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும்.
ராகுவினால் தடை
நிழல் கிரகமான ராகு தற்போது எட்டாம் இடமான கன்னியில் இருக்கிறார். எனவே முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார் உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம் இன்னொரு நிழல் கிரகமான கேது இரண்டாம் இடத்தில் இருக்கிறார். எனவே பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு பகைவர் வகையில் தொல்லை வரும்.
பொருளாதார வளம் கூடும்
வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஜூலை மாதத்திற்கு பிறகு குருவால் பொருளதார வளம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் குருபகவான் சிம்மத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அதோடு அவரின் ஐந்தாம் இடத்துப்பார்வையும் சிறப்பாக உள்ளது. உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு மரியாதை சிறப்படையும் பொருளாதார வளம் அதிகரிக்கும் எந்த செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் செயலாற்றும் ஆற்றல் மேம்படும்.
சக்கரத்தாழ்வாருக்கு அர்ச்சனை
சனிக்கிழமை தோறும் சனி ஹோரையில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நதியில் நெய் தீபம் ஏற்றி மலர் மாலை சூட்டி அர்ச்சித்து துதித்து வழிபட அனைத்து இன்னல்களும் நீங்கி நன்மை உண்டாகும். தினசரி ஸ்ரீஅனுமனை வழிபட்டு அனுமன் துதிகளை பாராயணம் இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications