மன்மத ஆண்டு மீன ராசிக்காரர்களே ஆஞ்சநேயரை வழிபடுங்க!
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மீனம் ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பொதுவான பலன்களைப் பார்ப்போம்.
பெரியவர்கள் மீது மரியாதை செலுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துவதில் சாமர்த்தியசாலியாக விளங்குவீர்கள். சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மாத கிரகங்கள் சாதகமான நிலையில் இந்த புத்தாண்டு மலர்கிறது. இப்போது குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை.

இந்த இடத்தில் குருபகவான் இருக்கும் போது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திட்டமிட்டுச் செயல்பட்டு வாழ்வில் சாதனை புரிவீர்கள். பண வரவையும், வாழ்க்கை வளத்தையும் சுபங்களையும் தருவார். இது தவிர குருவின் ஐந்தாம் இடத்துப்பார்வையும் ஏழாம் இடத்துப் பார்வையும் சாதகமான நிலையில் அமைந்துள்ளது.
சனி பார்வையால் நன்மை
சனி பகவான் விருச்சிக ராசியில் உள்ளார். இதனால் உங்கள் முயற்சியில் தடங்கல் குறுக்கிடலாம். மறைமுக எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலையும் கூட உருவாகும். அதேநேரம் அவரது மூன்று,ஏழு,பத்து பார்வைகளால் சிறப்பன பலன்கள் உங்களுக்கு காத்திருக்கிறது.
ராகுவினால் அலைச்சல்
நிழல் கிரகமான ராகு ஏழாம் இடத்தில் இருக்கிறார் அங்கு அவர் குடும்பத்தில் சில பிரச்சினைகள் உருவாக்குவார். வீண் அலைச்சல் அதிகரிக்கும் தொழில் உத்தியோகம் ரீதியாக சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும். இன்னொரு நிழல் கிரகமான கேது உங்கள் ராசியிலேயே இருக்கிறார். இதனாலும் கடும் முயற்சிகளால் மட்டுமே வெற்றிகளை பெறலாம். பகைவர்களின் தொல்லை அவ்வப்போது குறுக்கிடும் உடல் நலம் பாதிக்கபடலாம் மருத்துவச் செலவைக் குறைக்க முடியாது. உணவு விஷயத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது.
குருவின் மாற்றம்
பொருளாதார வளம் இருக்கும் வருமானத்திற்க்கான புதிய வழிவகை உருவாகும். எடுத்த செயல்கள் தங்கு தடையின்றி நிறைவேறும். ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் குருபகவான் சிம்மத்திற்கு மாறுகிறார். இது சாதகமான ஸ்தானம் அல்ல, ஆனாலும் அதற்காக கவலைக் கொள்ள வேண்டாம். குரு பகவானின் ஒன்பதாம் இடத்துப் பார்வை சாதகமான சூழலை உண்டாக்கும். பொருளாதார வளம் சிறக்கும், அதே சமயம் திடீர் செலவும் உண்டாகும். உங்கள் செயல்களில் ஏற்படும் தடைகளை தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
ஆஞ்சநேயருக்கு பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் குரு ஹோரையில் ஸ்ரீஆஞ்சநேயரை துதி செய்து வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும். பௌர்ணமி தோறும் லட்சுமிநாராயணனை வணங்கி வருவது இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications