மார்ச் மாத ராசிபலன் 2022: ரிஷப ராசிக்கு யோகத்தை தரப்போகும் நவ கிரகங்கள்

மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியபகவான் கும்ப ராசியில் பாதி நாட்களும் மீன ராசியில் பாதி நாட்களும் பயணம் செய்கிறார். சனி, செவ்வாய், சுக்கிரன்,புதன் என கிரகங்கள் மகர ராசியில் இணைந்திருக்கின்றன. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிக ராசியிலும் பயணம் செய்கின்றன. கிரகங்களின் கூட்டணி பார்வையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கும் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மார்ச் 6 புதன் பெயர்ச்சி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி. மார்ச் 24ஆம் தேதி மீன ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். 15ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

மழை காலமும் பனி காலமும் முடிந்து இன்னும் சில நாட்களில் வசந்த காலம் தொடங்கப்போகிறது. மாசி, பங்குனி இணைந்த மார்ச் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும். பண வரவு வருமா? வேலையில் புரமோசன் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் உச்சமடையும் ராசி, கலைகளின் அதிபதி சுக்கிரன் ஆட்சி பெறும் ராசியான ரிஷப ராசிகளில் பிறந்தவர்களே, கல்வி, கலையில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பதினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நல்ல தனவருமானம் வரும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். மகிழ்ச்சியில் திண்டாடுவீர்கள். தந்தைவழி சொத்து விசயங்களில் மாற்றங்கள் செய்வீர்கள். பூர்வீக சொத்து விசயங்களில் லாபம் அதிகரிக்கும். வேலை மாற்றம் ஏற்படும். பயணங்களில் கவனம் தேவை.

பெண்களுக்கு மகிழ்ச்சி

பெண்களுக்கு மகிழ்ச்சி

இல்லத்தரசிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நகை, ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய வீடு கட்டவும் வாங்கவும் ஏற்ற மாதம். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும்.

மாணவர்களுக்கு யோகம்

மாணவர்களுக்கு யோகம்

வெளிநாடுகளில் சென்று படிக்க வாய்ப்பு ஏற்படும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். மருத்துவ படிப்புகளுக்கு இடம் கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வீடு தேடி வரன் வரும். தெய்வ காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

யோகங்கள் தேடி வரும்

யோகங்கள் தேடி வரும்

எட்டாம் வீட்டில் இணைந்துள்ள புதன் செவ்வாய் கூட்டணியால் வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிக்கும். வாங்கிவைத்த சரக்குகள் விற்றுத்தீரும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பும் உயரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். சூரியன், புதன் இடமாற்றம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். யோகங்கள் தேடி வரும். தெய்வ அனுக்கிரகம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். விநாயகப்பெருமானை வழிபடலாம். அற்புதமான மாதமாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+