மார்கழி மாத ராசிபலன்

Subscribe to Oneindia Tamil

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - மார்கழி 20ம் தேதி கும்பம் ராசிக்கு மாறுகிறார்
புதன் - மார்கழி 17ம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - மார்கழி 14ம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

அப்பாவுடன் கருத்து வேறுபாடு உருவாகும். அரசு வகையில் சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்கும். பொருளாதர நிலை சுமாராக இருக்கும். குழந்தைகளால் மனக் கஷ்டம் உருவாகும். 14ம் தேதிக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் உருவாகும்.

17ஆம் தேதிக்கு பிறகு படிப்பில் மேன்மை நிலை அடையலாம். தொழில் தொடர்பான சுப செய்திகள் வந்து சேரும். 20ம் தேதிக்கு பிறகு எண்ணியவை யாவும் எளிதில் கைகூடும். பதவி உயர்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு விருப்பம் நிறைவேறும். அஷ்டம சனி சில மனகஷ்டங்களையும் தொழிலில் மந்தத்தையும் தரும். இருப்பினும் மன தைரியத்துடன் எதையும் எதிர் கொள்வீர்கள். பல வகைகளிலும் செலவுகள் அதிகரிக்கும்.

கைலாசநாதரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.

ரிஷபம்:

ரிஷபம்:

உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். 17ம் தேதிக்கு பிறகு கமிஷன் வியாபாரத்தில் கவனம் தேவை. தகவல் தொடர்பு மந்தமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறு உண்டாகும். கண்டக சனி உடல் அசௌகரியத்தைக் கொடுப்பார். பொருளாதாரம் மந்தமாக இருக்கும்.

சுகபோகங்களில் மன ஈடுபாடு குறையும். புத்தி தடுமாற்றம் உண்டாகும். 20ம் தேதிக்குப் பிறகு அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். நிலம் வீடு வகைகளில் பிரச்சினை உருவாகும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். எல்லா வகையிலும் மனைவி உறுதுணையாக இருப்பார்.

அம்பாளை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.

மிதுனம்:

மிதுனம்:

தொழில் உத்தியோகம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். 14ஆம் தேதியிலிருந்து குடும்பத்தில் இருந்து வந்த பூசல் மாறி கணவன் மனைவி அன்னியோனியம் அதிகரிக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

17ஆம் தேதிக்கு பிறகு ஷேர் மார்க்கெட் வியாபாரம் லாபம் தரும். எதிர்பார்க்கும் சுப செய்தி வந்து சேரும். 20ஆம் தேதிக்கு பிறகு வாகனப் போக்குவரத்தில் கவனமாக இருக்கவும் வாகன விபத்துகளுக்கு வாய்ப்புகள் உண்டு. அம்மாவின் ஆரோக்கியம் குறையும். தொழிலில் புது எதிரிகள் உருவாவார்கள்.

சூரிய நாராயணனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.

கடகம்

கடகம்

தொழில் நிலை சுமாராக இருந்தாலும் உத்தியோகம் தொடர்பான அரசாங்க உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அப்பாவும் உறுதுணையாக இருப்பார். 14ஆம் தேதிக்கு பிறகு குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றும். பெண்களினால் பிரச்சினைகள் உருவாகும்.

17ஆம் தேதிக்கு பிறகு சிந்தனைகள் தடுமாறும். படிப்பில் கவனம் செல்லாது. 20ஆம் தேதிக்கு பிறகு சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகும். வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை. எவ்வகை கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனதில் தைரியம் குறையாது. ஆலய வழிபாடுகளில் நாட்டம் உண்டாகும்.

பழனியாண்டவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.

சிம்மம்

சிம்மம்

தொழில் உத்தியோகம் வகைகளில் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டும். சிறிய வேலையும் அதிக அலைச்சலுடன் செயல் படுத்தவேண்டியிருக்கும். தந்தையின் ஆரோக்கியமும் கவலை தருவதாக அமையும். 14ம் தேதிக்கு பிறகு கணவன் மனைவி ஒற்றுமை குறையும். அதிகமான செலவினங்களால் மனநிலை பாதிப்படையும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் தோன்றும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

17ஆம் தேதிக்கு பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். தாய் மாமனின் உதவி கிடைக்கும். 20ஆம் தேதிக்கு பிறகு நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்களில் கவனம் தேவை. கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை கையாளுவதிலும் கவனம் தேவை. உறவினர் அனைவரிடமும் பகைமை உண்டாகும்.

காலபைரவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.

கன்னி

கன்னி

தொழிலில் முன்னேற்றாம் உண்டாகும் இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண வரவு நினைத்ததை விட அதிகமாக இருக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். மனதில் இனம் புரியாத பயம் தோன்றும். யாரைப் பார்த்தாலும் மனம் தடுமாறும்.

17ஆம் தேதிக்கு பிறகு பங்கு வர்த்தக முதலீடுகளை தவிர்க்கவும். தகவல் தொடர்பு சரியானவகையில் அமையாது. 20ஆம் தேதிக்கு பிறகு சகோதர்களிடையே இருந்து வந்த பூசல் மறையும். நிலம் வீடு வகையில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்குவரும். கணவன் மனைவி அன்னியோனியம் அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.

சிவ சங்கரனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.

துலாம்

துலாம்

குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அமைதியாக செயல்படவேண்டும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வரவை விட செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிபுரியுமிடத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

17ஆம் தேதிக்கு பிறகு வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். கல்வியில் மேன்மை உண்டாகும். 20ம் தேதிக்கு பிறகு வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. நெருப்பினால் காயம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.

ஐயனாரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

தொழில் காரணமாக மனம் பேதலிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குழந்தைகளால் மனக் கஷ்டம் உருவாகும். 17ம் தேதிக்கு பிறகு தாய்மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். படிப்பில் மந்தநிலை காணப்படும்.

20ஆம் தேதிக்கு பிறகு ரியல் எஸ்டேட் தொழில் லாபகரமாக அமையும். அண்ணன் தம்பிகளுக்கிடையே உறவு பலப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். விருந்துகளில் பங்கு பெற்று சந்தோஷமாக இருப்பீர்கள்.

நடராஜரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.

தனுசு

தனுசு

அனைவரையும் அதிகாரம் செய்யும் எண்ணம் ஓங்கும். கோபம் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழிலில் மந்த நிலை காணப்படும் எதிர்பாராத செலவினங்கள் அதிகரிக்கும். நிலம் வீடு வகைகளில் பிரச்சினைகள் தோன்றும் தொழிலில் புதிய எதிரிகள் உருவாகுவார்கள்.

17ஆம் தேதிக்கு பிறகு உறவினர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் மாறி உறவு நிலை சீரடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சுப தகவல் வந்து சேரும். 20ஆம் தேதிக்கு பிறகு சகோதரர்களின் உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் சிறக்கும். வாகன யோகம் உண்டாகும். எல்லா விஷயங்களிலும் மனைவியின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

விநாயகரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.

மகரம்

மகரம்

தொழில் சிறப்பாக இருக்கும். பணவரவும் மோசமில்லை. அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்து வகைகளில் உருவாகும் பிரச்சினையை கவனமாக கையாளவும்.அரசாங்க வகைகளில் மிகவும் கவனமாக செயல்படவும். கோபத்தைக் கட்டுபடுத்திக் கொள்ளவும்.

20ம் தேதிக்குப் பிறகு மௌனத்தை கடைபிடிப்பது சாலசிறந்தது. எவரிடமும் விவாதம் வேண்டாம். பயணங்களை தவிர்க்கவும். வியாபாரம் படிப்பு போன்றவைகளில் மந்த நிலை நீடிக்கும். வீட்டுக்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உல்லாசப் பயணம் செல்லும் நிலை உருவாகும்.

ஐயப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.

கும்பம்

கும்பம்

தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். எதிர் பாராத பண வரவு உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் அரசு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 20ம் தேதிக்கு பிறகு மனம் டென்சனாக இருக்கும். சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.

17ம் தேதிக்குப் பிறகு தகவல் தொடர்பு வகைகளில் சிறப்பு குறைவு. கேளிக்கைகளில் மனம் நாட்டம் செல்லும். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை.
மஹாலட்சுமியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.

மீனம்

மீனம்

தொழில் உத்தியோகம் மன நிறைவு தரும். அன்றைய வேலையை அன்றே முப்பது சிறப்பு. அரசு வகைகளில் எதிர்பார்த்திருந்த தகவல்கள் வந்து சேரும். கமிஷன் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கல்வியில் மேன்மை நிலை உருவாகும். பண வரவு அபரிமிதமாக இருக்கும்.

14ம் தேதிக்கு பிறகு விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் வெள்ளி மற்றும் பொன்னகைகளை வாங்குவீர்கள். 17ம் தேதிக்கு பிறகு தகவல் தொடர்பு மேம்படும். சுப தகவல்கள் வந்து சேரும். மன நிலை சற்று குழப்பமாக இருக்கும். பிறரிடம் பேசும் பொழுது மிகவும் கவனமாக இருக்கவும்.

பெருமாளை வணங்கி வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+