செவ்வாய் சனி தனுசு ராசியில் கூட்டணி - குரங்கணி தீ விபத்தும் உயிர் பலிகளும்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குரங்கணி காட்டுத்தீ விபத்து வீடியோ

  சென்னை: யுத்த கிரங்களான செவ்வாய் சனி சேர்க்கை வேலையை காட்டி விட்டது. குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

  பெருமழையும், வெள்ளமும், தீ விபத்தும் நிலநடுக்கமும், பூகம்பமும் விபத்துகளும் நிகழ்வதில் கிரகங்களின் சேர்க்கை பார்வை மிக முக்கியமானது. தனுசு குருவின் வீடு. தனுசு காலபுருஷனின் ஒன்பதாம் வீடு எனும் தர்ம ஸ்தானம். ஒரு தர்மவீட்டில் இரு பாவர்கள் தங்கியுள்ளனர்.

  இயற்கை சீற்றங்கள், விபத்துகள் நிகழும் போது கிரகங்களின் சஞ்சாரம் எப்படி என்று பார்ப்பது அவசியம். செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடு மிகமிக முக்கியமானது. மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு காரணம் செவ்வாய் சஞ்சாரம் பற்றியும், செவ்வாய் சனி சேர்க்கை பற்றியும் ஜோதிடர்கள் அதிகம் பேசினர்.

  பூமிக்கு அதிபதியான செவ்வாய், தீ விபத்து, நிலஅதிர்வு-பூகம்பம் போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. தனுசு ராசி ஒரு நெருப்பு ராசி. சனி ஒரு காற்று கிரகம். செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம். எனவேதான் தனுசு ராசியில் செவ்வாய், சனி சேர்க்கை நெருப்பு சம்பந்தமான விபத்துக்களை அதிகம் ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தனர். நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்திலும் முன்பே எழுதியிருந்தோம்.

  இன மோதல்கள்

  இன மோதல்கள்

  ஒரு ராசியில் செவ்வாயும், சனியும் பார்க்கும்போது, சேரும்போது இனமோதல் நடக்கும். நடைமுறையில் சனி - செவ்வாய் சேர்க்கை நடக்கும்போதெல்லாம் இதுபோன்ற கலவரங்கள் ஏற்படுகின்றன. இலங்கை கலவரமும் செவ்வாய் சனி சேர்க்கைக்கு முக்கிய காரணம்.

  தீ விபத்துகள் அதிகரிப்பு

  தீ விபத்துகள் அதிகரிப்பு

  செவ்வாய்க்கு மார்ஸ் என்று பெயர் வைத்ததற்கு காரணம், மார்ஸ் என்பது போர்க்கடவுளின் பெயர். காவல்துறை, மின்சாரத் துறை, தீயணைப்புத்துறையினருக்கு அதிகம் வேலையிருக்கும் காலம் இது. தனுசு ராசியில் செவ்வாயும், சனியும் இணைந்துள்ளன. இது மே மாதம் வரை நீடிக்கும். இந்த கால கட்டங்களில் மோசமான தீ விபத்துகள், சீற்றங்கள், இன மோதல்கள், மதக் கலவரங்கள், வழிபாட்டுத் தளங்களில் திருட்டு கொள்ளை போன்றவை நடக்கும் என எச்சரித்துள்ளனர் ஜோதிடர்கள்.

  55 பேரை பலி கொண்ட விபத்து

  55 பேரை பலி கொண்ட விபத்து

  கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிவகாசியில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதற்குக் காரணம் அப்போது துலாம் ராசியில் காற்று கிரகமான சனி, நெருப்பு கிரகமான சனியுடன் சேர்க்கை பெற்றிருந்தது.

  2015ல் சென்னை வெள்ளம்

  2015ல் சென்னை வெள்ளம்

  யுத்த கிரகங்களான செவ்வாயும் சனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ, ஒரே ராசியில் கூட்டணி சேர்ந்து அமர்ந்தாலே அந்த கால கட்டத்தில் பெரும் இயற்கை சீற்றங்கள், கலவரங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. நீர் ராசியான விருச்சிகத்தில் 2015,16ஆம் ஆண்டுகளில் செவ்வாய் சனி கூட்டணியாக இருந்த போது மிகப்பெரிய புயல், மழை வெள்ளம் சென்னையை தாக்கியது.

  ஆலங்களில் தீ விபத்து

  ஆலங்களில் தீ விபத்து

  தனுசு ராசி நெருப்பு ராசி இதில் நெருப்பு கிரகமான செவ்வாய் கிரகம், காற்று கிரகமான சனியுடன் சேர்ந்து உள்ளது. இந்த இடப்பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்பு பிப்ரவரி மாதமே தமிழகத்தில் தொடங்கிவிட்டது. மீனாட்சி அம்மன் கோவில் தொடங்கி பல கோவில்களில் தீ விபத்து ஏற்பட்டது.

  கிரக சேர்க்கையும் பார்வையும்

  கிரக சேர்க்கையும் பார்வையும்

  செவ்வாய் தனது இடத்தில் 4வது பார்வையாக மீனத்தையும், 7வது பார்வையாக மிதுனத்தையும், 8வது பார்வையாக கடகத்தையும் பார்க்கிறார். அதே போல சனிபகவான் 3வது பார்வையாக கும்பம், 7வது பார்வையாக மிதுனம், 10வது பார்வையாக கன்னி ராசியையும் பார்க்கிறார். இந்த ராசிக்காரர்கள், இந்த ராசிகளில் அமர்ந்துள்ள பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. செவ்வாய் ரத்தத்தின் காரகர். எனவே பயணங்களில் கவனம் தேவை. செவ்வாய் தசை அல்லது செவ்வாய் புக்தி நடப்பவர்கள் ரத்ததானம் செய்யலாம்.

  தீ விபத்துகள் அதிகரிக்கும்

  தீ விபத்துகள் அதிகரிக்கும்

  யுத்த கிரகங்களும் சேரும்போது, கோவில்கள், ஆன்மிக மடங்கள், யாத்திரை ஸ்தலங்கள், வனப்பகுதிகள், தர்ம ஸ்தாபனங்கள் போன்றவை பாதிப்புக்குள்ளாகும். காலபுருஷனின் 9ஆம் இடம். இது அரசு மற்றும் அரசியலைக் குறிக்குமிடம். அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

  முருகனை வணங்கலாம்

  முருகனை வணங்கலாம்

  செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு முருகப்பெருமானையும், விநாயகரையும், மகா விஷ்ணுவையும் வணங்க வேண்டும். செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும். சனி, செவ்வாய் சேர்க்கை நெருப்பு ராசியில் உள்ளதால், கோவில்களில் நிறைய தீபமேற்றுங்கள். தீபமேற்ற எண்ணெய், தீப்பெட்டி போன்றவை வாங்கி கொடுக்கலாம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Mars in the sky moves to form a conjunction aspect with Saturn on Mars 7.Accidents and fires mining disasters

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற