மே மாத ராசி பலன் 2023: அகலக்கால் வைக்காதீர்கள்..ஆடிப்போய் விடுவீர்கள்..பணம் பத்திரம் மக்களே!
சென்னை:
மே மாதத்தில் நான்கு கோள்கள் மேஷ ராசியில் இணைந்துள்ளன. நவ கிரகங்களின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. நவ கிரகங்களின் தலைவன் சூரியன் மேஷம், ரிஷபம் ராசிகளில் பயணம் செய்கிறார். புதன் மேஷ ராசியில் குரு, ராகு உடன் பயணம் செய்கிறார். சுக்கிரன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி செவ்வாய் உடன் இணைகிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் மே மாதத்தில் கும்பம் மற்றும் மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மே மாதம் 12ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே 15ஆம் சூரியன் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். மே மாத இறுதியில் சுக்கிரன் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கும்ப ராசியில் சனி, துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார்.
கும்பம்: சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. இந்த மாதத்தில் வேலையில் உங்களுக்கு பொறுமையும் கவனமும் தேவை. குரு பகவான் 3ஆம் வீட்டில் ராகு உடன் இணைந்துள்ளதால் அமைதியாக நல்ல நேரம் வரை காத்திருப்பது நல்லது. நிதானமாக அடி எடுத்து வைப்பது நல்லது. அகலக்கால் வைக்காதீர்கள் ஆடிப்போய்விடுவீர்கள். ஜென்ம சனி மன அழுத்தத்தை கொடுக்கும். குரு பகவான் பார்வை ஏழாம் வீட்டில் இருந்தாலும் திருமணத்திற்காக பெரிய முயற்சிகள் தேவைப்படும்.
ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது.

பொறுமை தேவை: பெண்கள் இல்லத்தரசிகளுக்கு வேலையில் அழுத்தம் உண்டாகும். அதிக வேலைப்பளு மனதில் சுமைகளை அதிகரிக்கும். மூத்த குடிமக்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்,மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிப்பது அவசியம். பெற்றவர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைகள் அவசியம். கிரகங்கள் சாதகமான நிலைக்கு வரும் வரை காத்திருங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படும். உடலில் ரத்த காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது நிதானமாக வாகனங்களில் பயணிப்பது நல்லது. மொத்தத்தில் மே மாதம் பொறுமையோடு கடக்க வேண்டிய மாதமாகும் .
மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. மந்த நிலையாக இருந்தாலும் நினைத்ததை நிறைவேற்ற கால நேரம் தேவைப்படும். புதன், குரு, ராகு, சூரியன் இரண்டாம் வீட்டில் இணைந்துள்ளதால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சொல்லாதீர்கள் முடிவு செய்யாதீர்கள். திருமணத்திற்காக செய்யும் முயற்சிகள் தடைகளை தாண்டி வெற்றிகளை தரும். சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

நிதானம் தேவை: பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அவசரப்பட்டு யாருக்கும் கடன் வாங்கிக்கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வெளிநாடு வேலைக்காக செய்யும் முயற்சிகள் மாணவர்களுக்கு வெற்றியை தரும். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி தேவைப்படும். வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும். உறவுகள் பகையாக வாய்ப்பு உள்ளது பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படும். உடல் உஷ்ண கோளாறுகள் சளி தொந்தரவுகள் வர வாய்ப்பு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications