மே மாத ராசிபலன்கள் 2019: தனுசு ராசிக்காரர்களே பொறுமை அவசியம்
மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். கிரகங்களின் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமாக அமைந்துள்ளது என்றாலும் பொறுமையை கடைபிடித்தால் சிக்கல்களில் இருந்து தப்பலாம்.
சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.
நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

விரைய செலவுகள்
ராசி நாதன் குருபகவான் வக்ரமடைந்து விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். சுக்கிரன் உச்சம் பெற்று 4ஆம் வீட்டில் இருக்கிறார். 5ஆம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். இதுநாள் வரை கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிருக்கும். குடும்ப வாழ்க்கையைப் பற்றிய கவலை ஏற்பட்டிருக்கும் இனி அவைகளை விட்டுத்தள்ளுங்கள். நன்மைகள் நடைபெறப்போகிறது.

பொறுமை தேவை
ஜென்ம சனியால் மன அழுத்தம் ஏற்படும். செவ்வாய் 7ஆம் வீட்டில் ராகு உடன் இணைந்திருக்கிறார். சனி கேது உடன் இணைந்திருக்கிறார். சுக்கிரன் உச்சம் கடவுள் அருள் பூர்வ ஜென்ம புண்ணியமே உங்களை காப்பாற்றுகிறது. புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம். உள்ளதை வைத்து பத்திரமாக இருங்கள். பொறுமை அவசியம், தான தர்மங்கள் செய்யுங்கள் நல்ல நேரம் வரட்டும்

திருமணம் கை கூடி வரும்
வர்த்தகம் செழிக்கும் தொழில் வருமானம் நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி கிடைக்கும். ஆறாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் ஏழாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் செல்வதால் திருமணம் கை கூடி வரும். மூத்த குடிமக்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம். இருக்கும் இடத்தில் அமைதியாக இருக்கவும்.

பிரச்சினைகள் தீரும்
விரும்பிய திருமண வாழ்க்கை அமையும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். கல்வி நிலை உயரும். உயர் கல்விக்கு முயற்சி செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். இது பிரச்சினைகள் தீரும் மாதம். ராமேஸ்வரம் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். ஆன்மீக பயணம் மன அமைதியைத் தரும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications