மே மாத ராசி பலன்கள் 2019: கன்னி ராசிக்காரர்கள் பணம் விசயத்தில் கவனம் தேவை
Recommended Video
மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். கிரகங்களின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்கள் பணம் விசயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.
நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

சுகபோகம் தேடி வரும்
உங்கள் ராசிக்கு விரையாதிபதியான சூரியன் உச்சம் பெற்றிருக்கும் மாதம் நன்மைகள் நடைபெறும். இந்த மாதம் பெண்களின் உதவி அதிகம் கிடைக்கும்.
கன்னி ராசிக்காரர்கள் மென்மையானவர்கள். சுக்கிரன் உச்சம் பெற்று ராசி மீது விழுவதால் சுகபோகம் அனுபவிப்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்வீர்கள் அறிவுப்பூர்வமாக அணுகுங்கள்.

அம்மாவின் உடல் நலம்
எட்டில் புதன் இருப்பதால் கவனமாக இருங்கள். வியாபார தொழில் முயற்சிகளில் அக்கறை செலுத்துங்கள். திருமணம் நிச்சயமாகும். பாதுகாப்பாக இருங்கள். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நல்ல தகவல்கள் வந்து சேரும். பத்திரங்களை கவனமாக படித்து பார்த்து கையெழுத்து போடுங்கள். சொத்துக்கள் சேரும் மாதம். அர்த்தாஷ்டம சனி கூடவே கேது இணைந்திருப்பதால் அம்மாவின் உடல் நலனில் கவனம் தேவை.

வேலைப்பளு கூடும்
ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் உள்ள செவ்வாய் ஏழாம் தேதிக்கு மேல் மிதுனத்தில் ராகு உடன் இணைவதால் வேலைப்பளு ஏற்படும். புத்திசாலித்தனமாக சமாளியுங்கள். ராசிக்கு ஏழில் சுக்கிரன் இருப்பதால் வாழ்க்கைத்துணைவருக்கு வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது. அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை முறையாக பராமரிப்பு செய்யுங்கள்.

பொறுமை தேவை
சனி பகவானும், குருவும் வக்ரம் பெற்று இருந்தாலும் தடைகளுடன் கூடிய வெற்றி கிடைக்கும். பொறுமையை கடைபிடித்தால் நன்மைகள் நடைபெறும். ராகு நன்மை செய்வார். 11ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் இடம் மாறுவதால் எதிலும் எச்சரிக்கையா இருப்பது அவசியம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் நிதானமும் கவனமும் தேவை. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதியாக இருந்தால் நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications