மே மாத ராசிபலன்கள் 2019: துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம்
மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். கிரகங்களின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமாக அமைந்துள்ளதால் காதல் கை கூடும் பணவரவு அதிகரிக்கும்.
சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.
நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து துலாம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

பணவரவு அதிகரிக்கும்
7ல் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் சமுதாயத்தில் பெயர் புகழ் பெருவீர்கள். 2ஆம் வீட்டில் குரு இருப்பதால் உயர்வான காலம்
தன, வாக்கு ஸ்தானத்தில் உள்ள குருவினால் நன்மைகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும்.

வெளிநாடு பயணம்
சுக்கிரன் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று இருப்பதன் மூலம் கடன்கள் கிடைக்கும். சுப செலவுகளை உருவாக்குவார்கள். கலை விளையாட்டுத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். கோடைகால பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுங்க. வெளிநாட்டு சுற்றுலா சென்று வருவீர்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள். மே 11ஆம் தேதி ராசி அதிபதி 7ஆம் வீட்டுக்கு மாறுகிறார்.

மாணவர்களுக்கு நன்மை
மாத துவக்கத்தில் ஆறாம் வீட்டில் புதன் இருப்பதால் அதிக பலம் கிடைக்கும். மறைந்த புதன் நிறைந்த கல்விதான். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். சொத்து சேர்க்கைகள் ஏற்படும். சுப விரையங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் ஏற்படும். மேல்படிப்புக்கு சரியான வழியை தேர்வு செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வும் வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படிப்பும் கிடைக்கும். மருத்துவம் படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் கூடி வரும். மே 4ஆம் தேதி ஏழாம் வீட்டில் சூரியன், புதன் சுக்கிரன் இணைகின்றனர். 18ஆம் தேதி ரிஷபத்தில் சூரியன் புதன் இணைவது நன்மைகள் நடைபெறும் காலம். வேலைமாற்றம், புரமோசன் கிடைக்கும்.

வீடு கட்ட முயற்சி செய்யுங்கள்
செவ்வாய் எட்டில் இருப்பதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் மே 7ஆம் தேதிக்கு மேல் ஒன்பதாம் வீட்டிற்கு செல்வது யோகம். மனதிற்கு பிடித்த காதலன், காதலியை கரம் பிடிப்பீர்கள். வீடு கட்ட முயற்சி செய்யலாம் நன்மைகள் நடைபெறும். திருமண தடைகள் நீங்கும். செவ்வாய் ராகு உடன் இணையும் காலத்தில் நன்மைகள் நடைபெறும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

திருமணம் கை கூடும்
சனி கேது உடன் மூன்றாம் இடத்தில் இருப்பதால் பாதிப்புகள் எதுவும் இல்லை. உங்களின் உடல் நலக்கோளாறுகள் விலகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு அற்புதமான மாதம் திருமண தடைகள் நீங்கும்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications