உலக அல்சீமர் தினம்.. அடிக்கடி மறதி.. என்ன செய்தால் தப்பிக்கலாம்.. ஜோதிட பரிகாரங்கள்
சென்னை: உலக அல்சைமர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோய் எதனால் ஏற்படுகிறது. ஜோதிட ரீதியான காரணங்கள் அதற்கான பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.
சென்னை: நோய்களுக்கும், கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புத்தி காரகன் புதன் பாதிக்கப்பட்டால் மூளை பாதிக்கப்படுவதோடு அல்சீமர் (Alzheimer) எனப்படும் மறதி நோய் ஏற்பட காரணமாகிறது. ஐநாவின் உலக சுகாதார நிறுவனம் செப்டம்பரை அல்ஜிமருக்கான மாதமாக அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றான அல்சைமர் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி, உலக அல்சீமர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அல்சைமர்: நோய் நம்மில் எத்தனை பேருக்கு அல்சைமர் என்ற மூளைதேய்வு நோயை பற்றி தெரியும்? அப்படியே தெரிந்திருந்தாலும், நாம் எல்லோரும் நினைப்பதை போல் சாதாரணமானது இல்லை. தற்போது பெரும்பாலானோர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. அதற்கான அறிகுறிகளைப் பார்க்கலாம்.
அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள்: பெயரை மறப்பது, பொருளை தொலைப்பது, குறித்த சந்திப்புக்களை மறப்பது, வார்த்தைகளை கண்டுபிடிக்க திணறுவது, ஞாபகம் வைத்துக் கொள்வது, புதிதாக கற்பதில் பிரச்சனை ஏற்படுவது போன்றவைகள் ஒரு குணமாக மாறத் தொடங்கிவிடும். பல வகை டிமென்ஷியா (ஞாபக மறதி) உள்ளது. அதனால் நீண்ட கால மறதி அல்லது குறைந்த கால மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிலசமயங்களில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களையும் கூட மறந்து விடுவார்கள். யோசிப்பதில் திணறுவது எழுத்து மற்றும் எண்களை அடையாளம் காண்பதில் பிரச்சனை, கணக்கிடுதலில் பிரச்சனை போன்றவைகள் ஏற்படும். ஏன், தங்களின் சொந்த வரவு செலவு கணக்குளைப் பராமரிப்பதில் கூட தடுமாறுவார்கள்.
சித்த பிரமை: அல்சீமர் வியாதி உள்ளவர்கள் இயல்பற்ற நிலையில் இருப்பார்கள். கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தினால் சமையல், வாகனம் ஓட்டுவது, வீட்டு வேலை போன்ற வேலைகளை செய்ய கஷ்டப்படுவார்கள். இந்த வியாதி முற்றும் போது, தினசரி நடவடிக்கைகளான குளியல், ஆடை அலங்காரம், உண்ணுதல் மற்றும் கழிப்பறை விஷயங்களை கூட துணையில்லாமல் புரிய முடியாது. மோசமாக மதிப்பீடு செய்வது மற்றும் முடிவு எடுப்பது காரணங்களை எடுத்து கூற திணறல் உள்ள போது, மாற்று வழிகளை முடிவு செய்ய அவர்களால் முடிவதில்லை. இந்த வியாதியினால் தற்போதைய நேரம், தேதி மற்றும் நாளை மறந்து விடுவார்கள். ஏன், ஆட்களையும் இடங்களையும் கூட அடையாளம் காண முடியாமல் போய் விடுவார்கள். அதீத பயம் மற்றும் கவலையினால் சித்தப் பிரமை உண்டாகலாம்.
ஜோதிட கோளாறுகள்: ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல், வித்தைக்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்தைக் காரகன்' என அழைக்கப்படுகிறார். புத்திநாதா என்றும், தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இறைவன் அருளை பெறவும் கிரக தோஷ தடைகள், பீடைகளில் இருந்து விடுபட விரதங்கள், ஹோமங்கள், வழிபாடுகள், நேர்த்திக்கடன்கள் எல்லாம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. முறையாக இவற்றை செய்வதன் மூலம் பிரச்னைகளின் தாக்கம் குறைவதுடன், உடலும், உள்ளமும் தூய்மையாகி, அமைதியும், சந்தோஷமும் கிடைக்கும். தோஷ நிவர்த்திக்கும், யோகம் உண்டாவதற்கும் நவக்கிரக வழிபாடு அவசியமாகும்.
ஜோதிட ரீதியான நோய்களுக்கும், கிரகங்களுக்கும் தொடர்பு உள்ளது. புதன் பலமாக இருப்பது பல நலன்களை சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற பட்சத்தில் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். நவக்கிரகங்களில் எல்லா கிரகங்களுக்கும் ஒவ்வொரு விதமான சக்தியும், அமைப்புகளும் உள்ளன. சில கிரகங்களுக்கு முக்கியமான காரகத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியானவர் புதபகவான். கால புருஷனுக்கு லக்னமான மேஷமும் ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி ஆகிய கிரகங்களை கொண்டு மூளையின் தன்மையை அறியமுடியும். கால புருஷனுக்கு ஐந்தாம் வீடான சிம்மத்தின் அதிபதி சூரியன் மேஷத்தில் உச்சமாவது மூளைக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பை கூறும்.
புதன் பலம் அவசியம்: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்பார்கள். ஜாதகத்தில் 'பொன்னவன்' என்று அழைக்கப்படுபவர் குரு. அவரது பலத்துடன் புதன் பலமும் இருப்பது அவசியம். எவ்வளவுதான் பொன், பொருள், செல்வம் ஈட்டினாலும் சரியான வகையில் தக்கவைத்து அதை ஒன்றுக்கு பத்தாக பெருக்க புதனின் பலம் தேவை. ஜாதகத்தில் புதன் பலம் இருந்தால்தான் கணிதத்தில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் ஏற்படும். சகல கணிதங்களுக்கும் மூலகர்த்தா புதன் ஆவர். இதை வைத்தே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, புதனின் அருளாசி இருந்தால் பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டாகும் என்பது பொருள்.
என்ன பாதிப்பு வரும்: ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது பல நலன்களை சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற பட்சத்தில் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். புதன் பலவீனமாக இருந்தாலும், நீச்சம் மற்றும் 6, 8, 12 ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை கால் வலிப்பு, நரம்பு தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம், சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து நரம்பு வலி, ஆண்மைக் குறைவு ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம்.
நோய்கள் இல்லாத வாழ்க்கை: உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் உயிர் போன்றது. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. சுத்தமான நீரை குடிக்கவும் முடியவில்லை. உடல் நிலையில் நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று ஆயிரத்தில்ஒருவர் தான் சொல்ல முடியும். பிறக்கும் குழந்தைகள் கூட கருவிலேயே நோய்களை சுமக்க ஆரம்பித்து விடுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பதும் குறைந்து கொண்டேதான் வருகிறது. தினமும் டயட் என்ற பெயரில் உண்ணும் உணவிற்கு கூட பட்டியலிட வேண்டியது இருக்கிறது. ஆனால், ஜோதிட ரீதியாக ஜனன ஜாதகத்தில் ஒருவருக்கு கிரகங்கள் பலமாக அமைந்து விட்டால் நோய் வந்தாலும் அவை உடனே சரியாகிவிடும்.
பரிகாரம் என்ன: புதனுக்குரிய பச்சைப்பயறு தினமும் சிறிதளவு ஊறவைத்து பச்சையாக சாப்பிடலாம். பச்சை வெண்டைக்காய், பச்சையாக முட்டைகோஸ் சிறிதளவு, உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லிக்காய் ஒன்று என தினமும் சாப்பிட்டு வந்தாலே நரம்பு பலகீனமாக இருப்பவர்கள் வலிமை அடைவார்கள். புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தானியம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. நவக்கிரகங்களில் நான்காவதான இடத்தில் இருக்கும் இவரை பச்சை நிற ஆடையை உடுத்தி வணங்க வேண்டும். புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பரிகாரமாகும். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வணங்கலாம். மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். புதபகவானை வணங்குவதன் மூலம் நோய்களில் இருந்து விடுபடலாம். நவதிருப்பதிகளில் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications