மயிலையே கயிலை... சூரிய பிரபையில் சந்திரபிரபையும்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று சுவாமி கபாலீஸ்வரரும் கற்பாம்பாளும், சூரிய பிரபை, சந்திர பிரவை வாகனத்தில் வலம் வந்து அருள் பாலித்தனர்
சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபையில் காட்சிதரும் அருள்மிகு கபாலி கற்பகத்தை தரிசித்தால் திருமணத்தடை, புத்திரதோஷம், புணர்ப்பு தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும் என்பது உறுதி.
ஜோதிடத்தில் சூரியனை ஆத்ம காரகன் என்றும் சந்திரனை மனோகாரகன் என்றும் கூறப்படுகிறது.

சூரியன் அறிவு பூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்துபவர். தந்தை காரகனும் சூரியபகவான் ஆவார். அறிவுபூர்வமான சிந்தனை காலை சூரிய உதயத்தின் போது அதிகமாகவும் பிறகு நேரம் ஆக ஆக சிறிது சிறிதாக குறைந்துக்கொண்டு வரும்.
அறிவு வழி யோசனை மேலோங்கி நிற்க்கும்போது அன்பிற்கு வேலையிருக்காது.எனவேதான் குடும்பத்தில் தந்தை அறிவுபூர்வமாக செயல்படுவதால் தந்தை அநேக தருணங்களில் பாசத்தை வெளிபடுத்த மாட்டார்.

ஆனால் சந்திரன் உணர்வு பூர்வமான சிந்தனைகளை அதிகரிப்பவர். மாத்ரு காரகன் என்று அழைக்கப்படுகிறார். சந்திரபகவான் ராத்திரியின் நாயகன் ஆவார். அதனால்தான் பல "உணர்ச்சி" மிகுந்த காரியங்கள் அரங்கேருவது இரவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குடும்பத்தில் அன்னையர் எதைப்பற்றியும் யோசிக்காமல் பாசத்தை பொழிவதும் இதற்க்கு சான்று.
பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனை பித்ரு காரகன் என்றும் சுக்கிரனை மாத்ரு காரகன் என்றும் கூறுவார்கள். இரவில் பிறந்தவர்களுக்கு சனியை பித்ரு காரகன் என்றும் சந்திரனை மாத்ருகாரகன் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சனி - சந்திரனுடன் இணைந்தால் ஞானி. சனி-சந்திர யோகம் என்று இதற்குபெயர். துறவு மனோபாவம் ஏற்படும். ஞானிகளின் ஜாதகங்களில் சனி-சந்திர யோகம் இருப்பதை காணலாம்.

அதனால் தான் சூரியனும் சுக்கிரனும் எதிரும் புதிருமாகவும் அதேபோல சந்திரனும் சனியும் எதிரும் புதிருமாகவும் உடலும் கூடலுமாக இருக்கிறார்கள் போலிருக்கிறது.
இன்றைய கோசாரத்தில் பகலில் பிறந்தவர்களுக்கான பித்ருகாரகன் சூரியன் புதன் சாரம் பெற்று மாத்ருகாரகன் சுக்கிரனுடன் மீன ராசியில் குருவின் வீட்டில் இனைவு பெற்றுள்ளனர். அதைப்போல் இரவில் பிறந்தவர்களின் பித்ருகாரகன் சனி. தனுர் ராசியில் குருவின் வீட்டில் நின்று புதனின் வீட்டிலுள்ள மாத்ருகாரகன் சந்திரனை சமசப்தமமாக பார்க்கின்றனர்.
சனி-சந்திர இணைவு, பார்வை, பரிவர்த்தனை மற்றும் சந்திரன் சனியின் நட்சத்திரங்களிலும் சனி சந்திரனின் நட்சத்திரங்களிலும் அமைவது போன்றவை புனர்பூ தோஷம் எனப்படும்.
எனவே இன்று அனைவரிடமும் ஆன்மீக உணர்வுடன் கூடிய உணர்ச்சி பூர்வமான காரியங்கள் நடப்பதை காண முடியும். அதிலும் மிதுன தனுர் மற்றும் மீன ராசி லக்ன காரர்களிடம் இதை அதிகம் காணமுடிய்ம்.

இன்றைய உணர்ச்சி பூர்வமான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு அறிவு பூர்வமாக செயல்பட சூரிய அம்சமான அருள்மிகு கபாலீஸ்வரர் காலையில் சூரியபிரபை (சூரிய வட்டம்) எனும் வாகனத்தில் தரிசனம் செய்வதும்
இரவுபொழுதில் அம்மையப்பனான கபாலி ஈசன் சந்திர அம்சமான அருள்மிகு கற்பகாம்பாளின் அன்பில் கட்டுண்டு சந்திரபிரபை (சந்திரவட்டம்) வாகனத்தில் வலம் வரும் போது தரிசனம் செய்வதும் சிறப்பாகும்.












Click it and Unblock the Notifications