புத்தாண்டு ராசி பலன் 2023: சனியும் குருவும் இந்த ராசிக்காரர்களுக்கு செய்யப்போகும் அதிரடி மாற்றம்!
சென்னை: குரு பார்வை கிடைக்கும் ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும். 2023ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் மீன ராசியில் சில மாதங்களும், மேஷ ராசியில் 8 மாதங்களும் பயணம் செய்வார். மிக முக்கியமான இந்த இரண்டு கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் கன்னி ராசியில் பிறந்தவர்களும், துலாம் ராசியில் பிறந்தவர்களும் என்ன மாதிரியான பலன்களைப் பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு பகவான் மே மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்கிறார். மே மாதத்திற்குப் பிறகு மேஷ ராசிக்கு வந்து அமர்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் கன்னி லக்னத்தில் புத்தாண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களைத் தரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன சங்கடங்களையும் தரலாம். அதை தவிர்க்க ஆலய தரிசனம் செய்வது பாதிப்புகளை குறைக்கும்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. இந்த ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டு. இந்த ஆண்டில் முதல் 4 மாதங்கள் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. வெற்றிகள் தேடி வரும். நினைத்த காரியம் நிறைவேறும். குரு பலன் கிடைத்திருப்பதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. காதல் திருமணம் எதிர்ப்புகள் நீங்கி நிறைவேறும்.

வேலை கிடைக்கும்
வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கடந்த காலங்களில் வேலையை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தலைமைப் பதவி தானாக தேடி வரப்போகிறது. உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
சனி பகவான் 6ஆம் வீட்டிற்கு வந்து அமர்வதால் எதிரிகள், நோய்கள் வம்பு வழக்கு பிரச்சினைகள் நீங்கும். எதிரிகளை ஓட ஓட விரட்டுவீர்கள். கோர்ட் கேஸ் உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆற்றலும் வல்லமையும் அதிகரிக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை
குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் எட்டாம் வீட்டில் ராகுவும் பயணம் செய்கிறார். பண விசயங்களில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் எட்டிப்பார்க்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆண்டு இறுதியில் அக்டோபர் மாதத்தில் கேது பகவான் உங்கள் ராசிக்கு வரப்போகிறார். ஏழாம் வீட்டிற்கு ராகு சென்று அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

உயர்கல்வி யோகம்
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வந்துள்ளதால் நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். வெளிநாட்டிற்கு சென்று படிக்கப்போகிறீர்கள். படிக்கும் போதே சிலருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு செய்யும் வியாபாரம் அதிக லாபத்தை தரப்போகிறது. மே மாதத்திற்குப் பிறகு மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எதையும் எடுத்தேன் கவிழ்தேன் என்று அவசரப்பட வேண்டாம். முன்னோர்கள் சொத்துக்கள் வந்து சேரும். நல்ல நேரம் வந்து விட்டது. நோய்கள் நீங்கி உடல் சுறுசுறுப்படையும். மொத்தத்தில் 2023ஆம் ஆண்டு சுகமும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. இந்த ஆண்டு குல தெய்வ கோவிலுக்கு சென்று மறக்காமல் கும்பிட்டு வர நன்மைகள் நடைபெறும்.

துலாம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..உங்களுக்கு 2023ஆம் ஆண்டில் சனிபகவானும், குரு பகவானும் சாதகமான பலன்களைத் தரப்போகின்றனர். மே மாதம் வரை ஆறாம் வீட்டில் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், தொழில் ஸ்தானத்தை பார்வையிடும் குரு பகவான், வேலையில் நல்ல முன்னேற்றத்தை தரப்போகிறார். மே மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு குரு பலன் வரப்போகிறது. குருவின் பரிபூரணமான பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகப்போகிறது. உங்களுக்கு திருமணயோகம் கூடி வரப்போகிறது.

திருமண யோகம்
வைகாசி மாதத்தில் மண மேடை ஏறப்போகிறீர்கள். காதலிப்பவர்கள் பெற்றோர்களின் ஆசியுடன் திருமணம் முடிக்கப்போகிறீர்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தின் மீதும் குருவின் பார்வை விழுவதால் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன ஊடல்கள் வந்து போகும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

சனிபகவான்
சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அனைத்தும் இந்த ஆண்டு நீங்கப்போகிறது. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் என்று பாடப்போகிறீர்கள். அர்த்தாஷ்டம சனி பகவான் உங்களை விட்டு நீங்கப்போகிறது. அம்மாவிற்கு நோய் வந்து சிரமத்தை ஏற்படுத்தியது. இனி அம்மாவிற்கு இருந்த உடல் நல பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. ஏழாம் வீட்டில் ராகு இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்கள் வந்து நீங்கும்.

திடீர் ஜாக்பாட்
பல வகைகளிலும் இந்த ஆண்டு பணம் வரப்போகிறது. லாட்டரி, பங்குச்சந்தை முதலீடுகளில் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. வரப்போகும் பணத்தை பத்திரமாக சேமித்து முதலீடு செய்வது நல்லது. புது வீடு கட்டலாம், சொத்துக்களாகவும் வாங்கி சேமிக்கலாம். வெளிநாடுகளில் வேலைக்காக அப்ளை செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. மிகப்பெரிய ராஜயோகம் இந்த ஆண்டு கிடைக்கப்போகிறது.

உயர்கல்வி யோகம்
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்புகள் நீங்கப்போகிறது. படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையப்போகிறது. அக்டோபர் மாதம் ராகு கேது பெயர்ச்சி அற்புத மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. மன உளைச்சல் நீங்கப்போகிறது. விநாயகர் வழிபாடு உங்களுக்கு நன்மைகளைத் தரப்போகிறது. உங்களுக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications