சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சி.. 2024ல் ஜாலியா? வேலை காலியா? சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன நடக்கும்
சென்னை: கண்டச்சனி காலம் என கவலையோடு இருந்தாலும் குரு பார்வையால் குதூகலமாகவே இருக்கிறார்கள் சிம்ம ராசிக்காரர்கள். அதே நேரத்தில் வக்ரமடைந்த சனி, வக்ரமடைந்த குரு பார்வை சில நேரங்களில் விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் என்று ஜோதிடர் ஒருவர் மீம்ஸ் மூலம் பதிவிட்டுள்ளார். 2024ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராகு கேது, சனி, குரு எத்தகைய திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது என்று பார்க்கலாம்.
ஒன்பதாம் வீட்டில் தற்போது பயணம் செய்யும் குரு பகவான் ராகு உடன் இணைந்துள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் குரு ராகு கூட்டணி பிரியப்போகிறது. பாக்ய குரு நிறைய பாக்யத்தையும் தேடித்தருவார். சுபங்கள் அதிகம் நடைபெறும் காலம். ஓராண்டு காலத்திற்கு ராஜயோகம்தான். கடந்த ஓராண்டு காலமாக கடன்கள் நோய்களை அளித்து வந்த குரு இனி நோய்களை தீர்க்கப்போகிறார். கடன்களை அடைக்க வருமானத்தை தரப்போகிறார். உங்களுடைய ராசிக்கு குரு பலன் வந்திருக்கிறது. 2024ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் உங்களுடைய ராசிக்கு குரு பகவான் பார்வை கிடைக்கிறது.

குரு பார்வை பலம் இருந்தால்தான் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்க ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். நட்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். குரு பார்வை மூன்றாம் வீட்டின் மீது விழுகிறது. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும் திருமணம் நடைபெறும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். சொந்த வீடு கட்டுவீர்கள் சொத்து சுகம் வாங்கும் யோகம் வரும் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு அதிகார பலம் ஆளுமை புகழ் கீர்த்தியை தரும். உயர்ந்த அந்தஸ்தை தரும். குரு பார்வையால் வேலை இல்லாதவர்களுக்கு வேலையை கொடுப்பார்.
குரு பகவானின் பார்வை வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கிடைக்கிறது. பல சிக்கல்களை சந்தித்து வந்த உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷத்தையும் தரப்போகிறது. செல்வ வளம் வரப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். மகிழ்ச்சிகள் அதிகரிக்கும்.
2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் 10ஆம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யப்போகிறார். பத்தாம் வீட்டில் குரு பதவியை தரப்போகிறார். வேலை மாற்றம் அல்லது தொழில் மாற்றம் நிகழும். குருபகவான் குடும்பத்தில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருவார். நிறைய பண வருமானத்தை தருவார். குரு பகவானின் பார்வை பலத்தால் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. பாடாய் படுத்தி வந்த நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

சனி பெயர்ச்சி பலன்: ஜாதகத்தில் ஒருவரது ராசிக்கு 7ம் இடத்தில் கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் கண்டச்சனி காலமாகும். ஆண்டுகளில் உயிருக்குக் கண்டம், கணவன் மனைவி உறவில் தேவையற்ற பிரச்சனைகள், உடல் ஆரோக்யக் குறைவு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சுய தொழில்களில் பிரச்சனை கூட்டுத் தொழில்களில் பார்ட்னர்களால் தேவையற்ற வீண் பிரச்சனைகள், நிம்மதியில்லாத பிரச்சனை, வெளிநாடு செல்வதில் தடை, வீண் விரையம் ஏற்படும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி இரண்டரை ஆண்டு காலம்
கண்டச்சனியாக இருந்தாலும் யோகம்தான். அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு யோகம். தலைமைப்பதவி தேடி வரும் தொழில் அற்புதமாக இருக்கும். ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை. பயணங்களிலும் கவனம் தேவை. வண்டி வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் இடத்தை மாற்றுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் சனி செல்லும் போது யோகங்கள் அதிகரிக்கும் காரணம் சனியின் பார்வை உங்க மீது விழுவதால் பாதிப்புகள் அதிகம் இருக்காது. எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளுங்கள் ஏமாற்றங்கள் எதுவும் வராது.
ராகு கேது பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு 2ஆம் வீட்டில் கேதுவும் 8ஆம் வீட்டில் ராகு பகவானும் அமர்ந்து பயணம் செய்யப்போகின்றனர். ராகுவின் அஷ்டம ஸ்தான பயணம் மிகச்சிறந்த புத்திர பாக்கியத்தை தரப்போகிறது. குருவின் வீட்டில் ராகு அமர்ந்து பயணம் செய்வதால் குரு பகவானைப் போல ராகு செயல்படுவார். உங்களால் பிள்ளைகளுக்கு சுகமான வாழ்க்கை அமையப்போகிறது. யோகமான கால கட்டமாக உள்ளது. ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும் வந்து சேரும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம்.
பிசினஸ் செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு திடீர் லாபம் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்களுக்கு நகை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். நகை பணத்தை பத்திரப்படுத்துங்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான முதலீடுகளை தவிர்க்கப்பாருங்கள். யாருக்கும் பணம் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்வது நல்லது. ராகு நிழல் கிரகம் என்பதால் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். அலுவலகத்தில் சலுகைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். சிலருக்கு திறமைக்கு ஏற்ற வேலையும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
கேது பகவான் வாக்கு, தன ஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். எல்லையில்லாத அபரிமிதமான பண வருமானத்தை தரப்போகிறது. வியாபாரம் தொழிலில் பல மடங்கு லாபம் வரும் வருமானம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரப்போகிறது. பயம் பதற்றம் நீங்கப்போகிறது. நம்முடைய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். வீடு கட்ட,பிசினஸ் செய்ய வங்கிக்கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு மிக அற்புதமான கால கட்டம். மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் சிலரை தேடி வரும். பணவரவுக்கு ஏற்ப விரைய செலவுகளும் தேடி வரும். தூக்க குறைபாடு அதனால் மன உளைச்சல் ஏற்படும். சிலர் வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாடி வீடு கட்டும் யோகம் வரும். சொல்லும் செயலும் வெற்றியைத் தேடித் தரும். அதே நேரத்தில் பண விசயத்தில் கவனம் தேவை. நாள்தோறும் விநாயகரை வழிபட வேண்டும்.
மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும்: திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீக்கும். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு வரன் பேசி முடிக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. தம்பதியர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடைபெறும். பேச்சில் கவனம் தேவை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் எனவே பேச்சை குறைத்து செயலில் கவனம் தேவை. வாக்கு ஸ்தானத்தில் பாம்பு கிரகம் அமரும் போது கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போகும் கவனம். கேது பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டின் மீது விழுகிறது. சுக ஸ்தானத்தில் கேதுவின் பார்வை விழுவதால் வீடு கட்டும் யோகம் வரும். எட்டாம் வீட்டின் மீது கேதுவின் பார்வை விழுவதால் ஆயுள் கண்டங்கள் நீங்கும். அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றாலும் இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. மொத்தத்தில் 2024ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனைகளையும் அற்புதமான மாற்றங்களையும் ஏற்படுத்தப்போகிறது எனவே கவலைப்படாமல் புத்தாண்டினை மகிழ்ச்சியோடு வரவேற்கத் தயாராகுங்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications