2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: பதவி யோகம்.. பல வழிகளில் பணம் யாருக்கு தேடி வரும்?
சென்னை: 2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்குமா? திருமணம் நடைபெறுமா? சொந்த வீடு வாங்கலாமா என்று பலரும் யோசிப்பார்கள். பிறக்கப்போகும் புத்தாண்டில் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டில் குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் முதல் 4 மாதங்கள் பயணம் செய்வார். மே மாதத்தில் இருந்து பத்தாம் வீட்டிற்கு குரு பகவான் வரப்போவது சிறப்பு. ராகு எட்டாம் வீட்டிலும் கேது இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். சனி பகவான் ஆண்டு முழுவதும் 7ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். கண்டச்சனி என்று கவலைப்பட தேவையில்லை.

பண விசயத்தில் கவனம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது. 8ஆம் இடத்தில் உள்ள ராகு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரப்போகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டகச்சனி இருந்தாலும் வேலைக்காக வெளிநாடு, வெளியூர் செல்லும் யோகம் வரப்போகிறது. வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை.
வேலையில் கவனம்: பத்தாம் வீட்டில் குரு பதவி யோகத்தை தரப்போகிறார். வேலை, தொழிலில் மாற்றம் வரப்போகிறது. சொந்தத்தொழில் செய்வதற்கான யோகம் கைகூடி வரப்போகிறது. வண்டி வாகனம் வாங்கப்போகிறீர்கள். உங்களின் புகழ் செல்வாக்கு அதிகரிக்கப்போகிறது. நல்ல வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியத்தில் கவனம்: அதிகமாக கடன் வாங்கி அகலக்கால் வைக்காதீர்கள். வேறு வேலை கிடைக்கும் வரைக்கு இருக்கிற வேலையை விட வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. ஆபத்தான இடங்களுக்கு பயணம் செல்லாதீர்கள். நீர் நிலைகளில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். காய்ச்சல் வந்து நீங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
பொருளாதார நிலை: எட்டாம் வீட்டில் உள்ள ராகுவினால் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவைப்படும். பண விவகாரங்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்கும் பணத்தை கடனாக தரவேண்டாம். ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக தர வேண்டாம். குடும்ப ஸ்தானத்தில் உள்ள கேதுவினால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவைப்படும். வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். பிள்ளைகள் நலனுக்காக அதிக செலவு செய்வீர்கள். ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் அனுமனுக்கு செந்தூரம் வைத்து வழிபட நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications