Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு2025: விருச்சிகத்துக்கு இனி ஏற்றம் மட்டும்தான்! என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகுது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு பலன் 2025: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வருடத்தின் தொடக்கமே அற்புதமாக இருக்கிறது. வருடத்தின் தொடக்க காலத்தில் இருக்கக்கூடிய அனைத்து கிரகங்களுமே பாசிட்டிவான கிரகங்களாக உள்ளது. நேரடியாக ராசியின் மீது பதியக்கூடிய குரு பகவானின் பார்வை விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய அற்புதமான வருடமாக அமையும்.

திருமண யோகம்: கடந்த காலத்தில் எந்த விஷயங்கள் எல்லாம் முயற்சி செய்து நடக்காமல் இருந்ததோ, அதை அனைத்தையும் துணிவோடு செய்யக்கூடிய அனுகூலமான ஆண்டாக அமையும். குடும்ப வாழ்க்கையை எதிர்பார்த்துக் காத்திருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு விரும்பிய வரன் அமையும். காதலர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.

puthandu rasi palan astrology

பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து அனைத்து தட்டுப்பாடுகளும் நீங்கும். தன ஸ்தானதிபதியாக இருந்த குரு பகவான் சமசப்தமாக ஏழாவது இடத்தில் இருந்து ராசியைப் பார்ப்பதால் மிகுதியான பணவரவு உண்டாகும்.

மாணவர்களுக்கு விரும்பிய துறைகளில் சீட்டுகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். சூப்பரான உத்தியோகம பெறுவீர்கள். நண்பர்களால் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சகோதர வழிகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் இருந்து வந்த அழுத்தங்கள் குறையும். தொழில் முறை சார்ந்த விஷயங்களில் ஏற்பட்டு வந்த நஷ்டங்கள், டிரான்ஸ்பர்கள் போன்றவற்றில் மாற்றம் வந்தே தீரும்.

குறிப்பாக 2025 இல் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு அதாவது மே மாதத்துக்குப் பிறகு இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். நிறைய டிராவல் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வாகனத்தை மாற்றும் யோகம் உண்டாகும். தொழில்களை மாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி உண்டாகும்.

ஐந்தில் ராகு இருக்கும்போது ஏற்பட்ட புத்திர தோஷத்தால் குழந்தைகளிடம் இருந்து பிரிந்திருந்தவர்கள் குழந்தைகளுடன் சேர்வார்கள். பிள்ளைகளை நினைத்து பெருமைப்படுவீர்கள்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மறைமுகமாக இருந்து வந்த போட்டி, பொறாமைகள் நீங்கும். யாரெல்லாம் உங்களுக்கு அழுத்தம் கொடுத்தார்களோ அவர்கள் நண்பர்களாக மாறிவிடுவார்கள். பொருளாதார சுமைகள் குறையும். கடனை எல்லாம் தீர்ப்பீர்கள். லோனுக்காக காத்திருந்தவர்களுக்கு லோன் கிடைக்கும். தொழில் லாபம் பார்த்தவர்கள் இனி கோடிகளில் லாபம் பார்ப்பீர்கள்.

ஏழாமிடம் இல்லற வாழ்க்கையில் பல்வேறு சவால்களை, பிரச்னைகளை சந்திருத்திருப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு விதமான கஷ்டங்களை கடந்திருப்பார்கள். குறிப்பாக, கணவன், மனைவி சார்ந்த விஷயங்கள், காதல், தேவையற்ற உறவுகள், பழக்கவழக்கங்கள், தொடர்புகளால் ஏற்பட்டு வந்த வலி, வேதனை ஆறாத வடுவாகவே இருந்திருக்கும்.

இந்த அத்தனை விஷயங்களும் வாழ்க்கை குறித்த ஒரு தெளிவை ஏற்படுத்தியிருக்கும். வருடத்தின் தொடக்கத்திலேயே ஏழாவது இடத்தில் குரு இருக்கக்கூடிய காலகட்டத்தில் மே மாதத்துக்குள்ளேயே சுப காரியங்கள் நடக்கும். பிரிந்து வாழ்ந்த காதலர்கள், கணவன், மனைவி ஒன்று சேர்வார்கள். மறுமணத்துக்கு காத்திருந்தவர்களுக்கு மறுமணம் ஏற்படும்.

மே மாதத்துக்குப் பிறகு எட்டில் குரு மறைவதால் கொடுக்கல் வாங்கலில் விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. யாரிடம் பேசினாலும் நிதானத்துடன் பேச வேண்டும். அஷ்டமத்தில் குரு வந்தால் ஆகாது ஜாதகத்திற்கு. கடந்த மூன்று ஆண்டுகளாக தந்தையை நினைத்தும், உறவுகளை நினைத்தும் கவலைப்பட்டீர்கள்.

பூர்வீக வீடுகளில், ஊர்களில் குடிபெயர்வீர்கள், பழைய வீடுகளை புனரமைப்பீர்கள். வேலையில் நிம்மதி இழந்தவர்களுக்கு, வேலையில் மாற்றம், பதவி மாற்றம் வேண்டுவோருக்கு மே மாதத்துக்குப் பிறகு அனைத்து சூப்பர் மாற்றங்களும் வந்தே தீரும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 11 ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் கேது வந்து உட்காருவதால் பொருளாதாரத்தில் மந்தத் தன்மை ஏற்பட்டு கொண்டே இருந்திருக்கும். அந்த சிக்கல்கள் மாறும். தெய்வ வழிபாடு அனுகூலத்தை உண்டாக்கும். ஒட்டமொத்தமாக 2025 வது ஆண்டின் முதல் பகுதியில் போடக்கூடிய அனைத்து விதைகளும் ஆண்டு முழுவதும் மிகப்பெரிய மரமாக மாறி பலன்களைத் தரும். இந்த ஆண்டை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

4 இல் ராகு வரும்போது வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனம் பழுதாகக்கூடிய சூழல்கள் ஏற்படும். தொழில்களில் ஒன்றுக்கு முறை நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது. தாய் சொல்லைக் கேட்டு நடப்பது நல்லது. பதினொன்றில் இருக்கிற கேது பத்தாவது இடத்துக்கு வருவதால், நல்ல பொறுப்புகளில் இருந்தாலும் கூட சூழ்ச்சி, வஞ்சகம் அதிகரிக்கும். எப்படியாவது பொறுப்பில் இருந்து காலி செய்ய நினைப்பார்கள். மற்ற அனைத்து விஷயங்களும் அருமையாக இருக்கிறது.

வழிபாடு - முருகப் பெருமானுடைய கோயில்களுக்கு செவ்வாய்க்கிழமை அல்லது சஷ்டி திதியன்று வழிபடுவது நல்லது. செவ்வரளி மாலை போடுவது நல்லது. உங்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய தெளிவையும், சந்தோஷத்தையும் தரக்கூடிய அற்புதமான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+