நெய்யபிஷேகம் சாமிக்கே...ஐயப்ப பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி - பெருவழிப்பாதையும் திறப்பு
சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.
சபரிமலை: சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. எருமேலியிலிருந்து பாரம்பரிய பாதையான சபரிமலைக்குச் செல்லும் 38 கிலோமீட்டர் தொலைவு உள்ள பெருவழி பாதையும் இன்று முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
நவம்பர் 16ஆம் தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் தினசரி 40 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இதனால் கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

நெய் அபிஷேகம் செய்வது ஏன்
இந்நிலையில், சபரிமலையில் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலையில் நெய் அபிஷேகம் செய்வதற்கு ஒரு காரணம் உள்ளது. சபரிமலை ஐயப்பன் சிவன் விஷ்ணுவின் அம்சம்தான். இதனை அனைவரும் உணரும் வகையிலேயே முக்கண் கொண்ட சிவ அம்சமான தேங்காயில் விஷ்ணுவின் அம்சமான பசு நெய் ஊற்றி எடுத்துச்செல்லப்படுகிறது. இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இருமுடியில் நெய் தேங்காய் எடுத்துச் செல்கின்றனர்.

நெய் பிரசாதம்
சபரிமலை ஐயப்பன் சிலை கடந்த 1800ஆம் ஆண்டு வரை மரத்தால் செய்யப்பட்ட தாரு சிலையாகத்தான் இருந்தது. அதன் காரணமாக அப்போது வரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் நேரடியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்தது. இதனால் ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லக்கூடிய நெய்யை அங்குள்ள நெய்த்தோணியில் கொட்டிவிட்டு வரும் பழக்கம் இருந்தது. இப்போதும் கூட பழைய முறையைப் பின்பற்றக்கூடிய கேரள ஐயப்ப பக்தர்கள் சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யாமல், நெய் தோணியில் கொட்டிவிட்டு, அதிலிருந்து சிறிது நெய் பிரசாதமாக எடுத்துக்கொண்டு வருவதும் வழக்கமாக உள்ளது. தற்போது நேரடியாக ஐயப்ப சாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பிரசாதத்தை பக்தர்கள் வீட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

சபரிமலையில் தங்க அனுமதி
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாலும் ஐயப்ப பக்தர்களுக்கு படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், கடந்த 11 ஆம் தேதி பம்பையில் இருந்து நீலி மலை, அப்பாச்சி மேடு, மரக் கூட்டம் வழியிலுள்ள வனப் பாதை ஐயப்பன் பக்தர்களுக்காக திறந்து விடப்பட்டன. பக்தர்கள் சபரிமலையில் தங்கிச் செல்லவும், பம்பையில் நீராடவும், பலி தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

60 ஆயிரம் பக்தர்கள்
எருமேலியிலிருந்து பாரம்பரிய பாதையான சபரிமலைக்குச் செல்லும் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருவழி பாதையும் இன்று முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருவழிப்பாதையில் பயணம் செய்யும் பக்தர்கள் பயணத்திற்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவம், மின்விளக்கு வசதிகள், ஓய்வறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை தினமும் 45 ஆயிரத்தில் இருந்து 60,000 பக்தர்களாக அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கேரள அரசு தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications