பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா- கற்பகவிநாயகர் கோவிலில் கோலாகலம்
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
காரைக்குடி: பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று பிரம்மாண்ட கொழுக்கட்டை தயார் செய்து விநாயகருக்கு படைத்து வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி கடந்த 4ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கஜமுஹாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி கடந்த 6ஆம் திருநாளில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சதுர்த்தி விழாவின் முத்தாய்ப்பாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டம் மாலை 4.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க மேலதாளத்துடன் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இங்கு உற்சவர் ஒரு தேரிலும், சண்டிகேஸ்வரர் ஒரு தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலினர். தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது.
தொடர்ந்து விநாகயருக்கு வருடத்திற்கு ஒருமுறை சாத்தப்படும் சந்தன காப்பு சாத்தப்பட்டு மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 10 ஆம் நாளான நாளை சிகர விழாவான தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் காலை குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இதை தொடர்ந்து 16 படி அரிசியில் ராட்சத கொலுக்கட்டை தயார் செய்து விநாயகருக்கு படைக்கப்பட்டு பின் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications