மாதவிடாய் பிரச்சனை தீர பிரதோஷ நாளில் மரகதாம்பிகைக்கு மாதுளை அபிஷேகம்
கர்ப்பப்பை கட்டி, மாதவிடாய் பிரச்சனை தீர தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ மரகதாம்பிகைக்கு மங்கள கௌரிஹோமம் மற்றும் மாதுளம் பழம் அபிஷேகம் நடைபெற உள்ளது.
வேலூர்: கர்ப்பப்பை கட்டி, மாதவிடாய் பிரச்சனை தீர தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ மரகதாம்பிகைக்கு மங்கள கௌரிஹோமம் மற்றும் மாதுளம் பழம் 27.02.2018 செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.
மாதவிடாய் பிரச்சினை உள்ள பெரும்பான்மையான பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி, இப்பிரச்சனை பூர்வ புண்ணியத்தினாலும், மரபணுக் கூறுகளின் மாற்றங்களாலும், சுகாதாரயின்மை, உணவு பழக்க வழக்கம், சுற்றுபுறசூழல், ஜாதகத்தில் கிரக ரீதியாக உள்ள தோஷங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன.

ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் ஒரு பெரிய பிரச்சனை ஆகியுள்ளது. சில பெண்கள் ருதுவாவதுமில்லை. கருப்பை கட்டிகள் ஒரு சிலருக்கு புற்றுநோய்க் கட்டிகளாக மாறுகின்றன. இவை மட்டுமின்றி மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு அதிகமாக காணப்படும்.

மாதவிடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப்போக்கு ஏற்படுவது. இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம். சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது சிறுநீர் சேருதல். மலச் சிக்கல். தாங்க முடியாத வயிற்று வலி, தூக்கம்மின்மை, போன்ற பல நோய்கள் மட்டுமின்றி மறைமுக நோய்களும் ஏற்படுகின்றன. இதனால் குழந்தை பாக்யம், தாம்பத்திய ஒற்றுமை, முக வசீகரயின்மை, திருமணத் தடைகள், போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மேற்கண்ட நோய்களும் தோஷங்களும் அகல வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 27.02.2018 செவ்வாய் கிழமை பூசம் நட்சத்திரத்தில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பெண்களின் தாயாகவும் வைத்திய ஈஸ்வரியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ மரகதாம்பிகைக்கு மங்களகௌரி ஹோமத்துடன் மாதுளம் பழம் சாறு கொண்டு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து ஸ்வாமிகள் திருக்கரங்களால் பக்தர்களுக்கு மாதவிடாய் பிரச்சனையால் ஏற்படும் மனநோய் உடல் நோய் நீங்கவும், ஹோம பிரசாதத்துடன் கஷாயம் பிரசாதம் வழங்கி ஆசிர்வதிக்க உள்ளார். மேற்கண்ட பூஜையிலும் ஹோமத்திலும் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் சிகப்பு நிற மலர்கள், சிகப்பு நிற பழங்கள், சிகப்பு நிற வஸ்திரங்கள், மஞ்சள் குங்குமத்துடன் சௌபாக்ய பொருட்கள் அளித்து அம்பிகையின் அருள்பெறலாம்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications